அரியலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அரியலூர்
இரண்டாம் நிலை நகராட்சி
GangaiKonda Cholapuram(Front View).JPG
அடைபெயர்(கள்): சிமெண்ட் நகரம்
அரியலூர் is located in தமிழ் நாடு
அரியலூர்
அரியலூர்
அரியலூர் is located in இந்தியா
அரியலூர்
அரியலூர்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.
ஆள்கூறுகள்: 11°8′14″N 79°4′40″E / 11.13722°N 79.07778°E / 11.13722; 79.07778ஆள்கூறுகள்: 11°8′14″N 79°4′40″E / 11.13722°N 79.07778°E / 11.13722; 79.07778
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
பகுதிசோழ நாடு
நிர்மாணித்தவர்எஸ். அரவிந்த்
அரசு
 • வகைஇரண்டாம் நிலை நகராட்சி
 • Bodyஅரியலூர் நகராட்சி
 • மக்களவை உறுப்பினர்தொல். திருமாவளவன்
 • சட்டமன்ற உறுப்பினர்சு. இராசேந்திரன்
 • மாவட்ட ஆட்சியர்த. ரத்னா, இ. ஆ. ப
ஏற்றம்76 m (249 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்28,902
மொழிகள்
 • அலுவல்தமிழ் மொழி
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு621704,621713
தொலைபேசி குறியீடு91-4329
வாகனப் பதிவுTN 61
சென்னையிலிருந்து தொலைவு310 கி.மீ (190 மைல்)
திருச்சியிலிருந்து தொலைவு65 கி.மீ (40 மைல்)
தஞ்சாவூரிலிருந்து தொலைவு42 கி.மீ (26 மைல்)
வானிலையியல்830 மி.மீ
இணையதளம்ariyalur

அரியலூர் (Ariyalur), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், இரண்டாம் நிலை நகராட்சியும் ஆகும். இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் பைஞ்சுதை (சிமெண்ட்) ஆலைகள் பல உள்ளன. இங்கிருந்து தமிழகத்தின் தலைநகரமான சென்னை 310 கி.மீ. தொலைவில் உள்ளது.

பெயர்க்காரணம்[தொகு]

விஷ்ணுவின் பெயரால் இப்பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது.

 • அரி+இல்+ஊர்= அரியிலூர்.
  • அரி- விஷ்ணு
  • இல்- உறைவிடம்
  • ஊர்- பகுதி.

விஷ்ணு உறைவிடம் கொண்ட பகுதி என்பதன் சுருக்கம்.

 • பின்னர் அரியலூர் என்று மருவியது.

வரலாறு[தொகு]

அரியலூர் மாவட்டம், சனவரி 1, 2001 இல் பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் மார்ச் 31, 2002 ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பொருளாதாரக் காரணங்களுக்காக, அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007 இல் உருவாக்கப்பட்டது.[1]

தனித்துவம்[தொகு]

இது ஆசியாவிலேயே அதிக அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நகரங்களில் ஒன்று.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E / 11.13; 79.08 ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

மதவாரியான கணக்கீடு
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
90.55%
முஸ்லிம்கள்
4.61%
கிறித்தவர்கள்
3.81%
சீக்கியர்கள்
0.02%
பௌத்தர்கள்
0.01%
சைனர்கள்
0.01%
மற்றவை
0.97%
சமயமில்லாதவர்கள்
0.01%

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 7,319 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 28,902 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.8% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,014 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2,977 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 936 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,254 மற்றும் 8 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.55%, இசுலாமியர்கள் 4.61%, கிறித்தவர்கள் 3.81%, மற்றும் பிறர் 1.02.% ஆகவுள்ளனர்.[5]

அரியலூர் சிமெண்ட் ஆலைகள்[தொகு]

 1. டான்செம்(TANCEM) (Tamilnadu Cement Corporation Limited). இது ஒரு அரசு நிறுவனம் ஆகும். இது 1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
 2. ராம்கோ சிமென்ட் (RAMCO CEMENT) கோவிந்தபுரம். 1997 ஆம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது. துவக்கத்தில் 0.9 மில்லியன் டன் (MTPA) (வருடத்திற்கு) உற்பத்தி செய்யத்துவங்கிய ஆலை, தற்போது 3 மில்லியன் டன் (MTPA) (வருடத்திற்கு) உற்பத்தி செய்கிறது. இந்தியாவிலேயே நான்கு இலை விருது (Four Leaves Award) வாங்கிய ஒரே நிறுவனம் ஆகும்.
 3. டால்மியா சிமெண்ட் (Dalmia Cement) தாமரைக்குளம். 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவால், 2012 பசுமை விருது (Green Award-2012), 2012 ஆம் ஆண்டிற்கான சிஐஐ விணைதிறன் யூனிட் விருதும் (CII ENERGY EFFICIENT UNIT AWARD-2012) ஆக ஓராண்டில் இரண்டு விருதுகள் வாங்கியுள்ளது.
 4. செட்டிநாடு சிமெண்ட் (CETTINAD CEMENT) கீழப்பழூர்.
 5. அல்ட்ரா டெக் சிமெண்ட்(ALTRA TECH CEMENT) (ADITHYA BIRLA GROUP) ரெட்டிப்பாளையம்.
 6. இந்தியா சிமெண்ட் (COROMANDEL KING-SANKAR SAKTHI) தளவை.

நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல்[தொகு]

நகராட்சி அதிகாரிகள்
தலைவர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்ற உறுப்பினர் சு. இராசேந்திரன்
மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன்

அரியலூர் நகராட்சியானது அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் (அதிமுக) சேர்ந்த சு. இராசேந்திரன் வென்றார்.

2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொல். திருமாவளவன் வென்றார்.

கல்லூரிகள்[தொகு]

 1. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரியலூர்.
 2. அரசு பொறியியல் கல்லூரி, அரியலூர்.
 3. அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி, கீழப்பழுவூர்

கோயில்[தொகு]

அரியலூரில் கோதண்டராமசாமி கோயில் உள்ளது. இக்கோயிலிலுள்ள தசாவதாரச் சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும்.

போக்குவரத்து[தொகு]

பேருந்து போக்குவரத்து[தொகு]

மாநில நெடுஞ்சாலை 143 - அரியலூர்- துங்கபுரம் - திட்டக்குடி, மாநில நெடுஞ்சாலை 27 அரியலூர் - தஞ்சாவூர் மற்றும் மாநில நெடுஞ்சாலை 139 அரியலூர் - ஜெயங்கொண்டம் ஆகிய சாலைகள் அரியலூர் வழியாக செல்லும் முக்கிய சாலைகள் ஆகும். இங்கிருந்து தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், சிதம்பரம் மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களுக்கு பேருந்து வசதிகள் உள்ளன.

தொடருந்து போக்குவரத்து[தொகு]

அரியலூர் தொடருந்து நிலையம் ஆனது சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளியை இணைக்கும் ஒரு முக்கிய ரயில் நிலையமாகும். இங்கு தினமும் பல்லவன் தொடர்வண்டி, மலைக்கோட்டை விரைவுவண்டி, முத்து நகர் விரைவுவண்டி, வைகை விரைவுத் தொடர்வண்டி மற்றும் குருவாயூர் விரைவுவண்டி ஆகிய தொடர்வண்டிகள், இந்த இரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. இந்நிலையத்திற்கு, காலை 7.40 மணிக்கு வந்தடையும், சென்னை எழும்பூரை நோக்கி செல்லும் பல்லவன் விரைவுத் தொடருந்துக்காக, தஞ்சாவூரிலிருந்து நேரடியாக, இந்த தொடருந்து நிலையத்திற்கு ஒரு அரசு பேருந்து இயக்கப்படுகிறது.

வானூர்தி போக்குவரத்து[தொகு]

இதன் அருகில் உள்ள வானூர்தி நிலையம் 76 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும்.

ஆதாரங்கள்[தொகு]

 1. Official Website of Ariyalur District
 2. "Ariyalur". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.
 3. Urban Infrastructure Report 2009, pp. 4-5
 4. "Census Info 2011 Final population totals - Ariyalur". Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India (2013). பார்த்த நாள் 26 January 2014.
 5. அரியலூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரியலூர்&oldid=3118223" இருந்து மீள்விக்கப்பட்டது