கங்கைகொண்ட சோழபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
Great Living Chola Temples
Name as inscribed on the World Heritage List
Temple Gopuram at Gangaikonda Cholapuram
இடம் அரியலூர் மாவட்டம்
வகை பண்பாடு
ஒப்பளவு ii, iii
உசாத்துணை 250
UNESCO region உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - இந்தியா
Inscription history
பொறிப்பு 1987 (11th தொடர்)
விரிவாக்கம் 2004
கங்கைகொண்ட சோழபுரம் கோவில்

கங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.

வரலாற்றுக்கால பெயர்[தொகு]

கங்கைகொண்ட சோழபுரம் என்னும் சோழர்கால மாபெரும் தலைநகரின் வரலாற்றுக்காலப்பெயர் வன்னியபுரி அல்லது வன்னியபுரம் என்பதாகும். கங்கைகொண்ட சோழபுரம் இராஜேந்திரசோழனால் உருவாக்கப்படுவதற்கு முன்புவரை அந்த இடம் வன்னியபுரி என்னும் பெயரைக் கொண்டிருந்தது.

மாமன்னன் இராஜேந்திர சோழன் தன் தந்தையைப் போலவே சிறந்த வெற்றி வீரனாக விளங்கினார்.கடல் கடந்து இலங்கை,இந்தோனேசியா,அந்தமான் நிக்கோபார் தீவுகள் முதல் வட இந்தியாவில் வங்காளம் வரை சென்று பல வெற்றிகளை குவித்தார்.வடநாட்டு கங்கை வரை சென்று பெற்ற பெருவெற்றியின் நினைவாக தன் புதிய தலைநகரை வன்னியபுரி யில் (அதாவது,கங்கைகொண்ட சோழபுரத்திலமைக்க) , புதிய நகர் உருவாக்கும் திருப்பணியை கி.பி.1023ல் தொடங்கினார்.அதன் பிறகே தற்போதைய கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் என்னும் மாபெரும் கற்றளி – சிவாலயத்தை எழுப்பினார்.

பெயர்க்காரணம்[தொகு]

கங்கைகொண்டசோழபுரம் உருவாகும் முன் அந்த இடம் வன்னியபுரி (அ) வன்னியபுரம் என்ற சிற்றூராக இருந்தது.வன்னியபுரி-வன்னிமரங்களுக்கு சிறப்புபெற்ற வன்னி மரக் காடாக விளங்கியது . இந்த ஊரில் அக்காலத்திலிருந்தே நிறைய வன்னி மரங்கள் இருந்தற்கு சான்றாக இன்றும் தல விருட்சமாக, கங்கைகொண்டசோழபுரம் கோயிவிலில் வன்னி மரம் உள்ளது.

நகரத்தின் தோற்றம்[தொகு]

கோயிலில் சரஸ்வதியின் கற்சிலை

இந்நகரம் இராசேந்திர சோழனால் கங்கையை வெற்றி கொண்டதைக் கொண்டாடுவதற்காகக் கட்டப்பட்டது. 1022-ல் இராசேந்திர சோழன் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை முழுவதையும் வென்று கங்கையையும் வென்றான். அந்த வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழன் என்ற பட்டப்பெயர் கொண்டான். மேலும் கங்கைகொண்ட சோழேஸ்வரம் என்ற சிவன் கோவிலையும் கட்டினர். இவனுக்குப் பிறகு வந்த சோழர்கள் இந்நகரத்தையே தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர்.

கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழப் பேரேரி அமைக்கப்பட்டது. இதற்கு சோழகங்கம் என்றும் பெயர் உண்டு.[1]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

ஆதார நூல்[தொகு]

தமிழ் நாட்டின் தல வரலாறுகளும்,பண்பாட்டுச்சின்னங்களும், நூலாசிரியர், வி. கந்தசாமி, வரலாற்றுத்துறைத் துணைப் பேராசிரியர், அருள்மிகு பழனியாண்டவர் கலை,பண்பாட்டுக்கல்லூரி, பழனி

மேற்கோள்கள்[தொகு]

  1. பக் 49, ப.கோமதிநாயகம் (மார்ச், 2000). தமிழகப் பாசன வரலாறு. பக். 87. ISBN 81-87371-07-2. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கைகொண்ட_சோழபுரம்&oldid=2063360" இருந்து மீள்விக்கப்பட்டது