சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி
Jump to navigation
Jump to search
சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி சங்ககாலச் சோழ மன்னர்களில் ஒருவன் ஆவான்.
- இவன் குதிலை பூட்டிய தேரில் ஏறிப் போரிட்டது, கடலில் தோன்றும் ஞாயிறு போன்று இருந்ததாம். இவனது வாள் குருதிக்கறை பட்டுச் செவ்வானம் போலவும், தாள் கொல்லேற்றின் தந்தம் போலவும், தோல் என்னும் மார்புக் கவசம் அம்புத் துளை பட்டு விண்மீன்கள் போலவும், குதிரைப்படை பாயும் புலி போலவும், களிறு கோட்டைக் கதவுகளைக் குத்தி கூர் மழுங்கிய திலையிலும் காணப்பட்டவாம். [1]
- ’வயமான் சென்னி’ எனப் பாராட்டித் தன் வறுமையைப் போக்குமாறு புலவர் வேண்டுகிறார். [2]
அடிக்குறிப்பு[தொகு]
- ↑ பரணர் பாடல் புறநானூறு 4
- ↑ பெருங்குன்றூர் கிழார் பாடல் புறநானூறு 266