சோழர் குடிப்பெயர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சோழர் குடிப்பெயர்கள்

கிள்ளி, செம்பியன், சென்னி, வளவன், வளத்தான் என்பன சோழ மன்னர்களின் குடிப்பெயர்கள். மக்களுக்குப் பெயர் எந்தெநத அடிப்படையில் அமையும் என்பதை வகுத்துக் காட்டும்போது தொல்காப்பியம் குடிப்பெயர் என்பதனையும் குறிப்பிடுகிறது. மலையமான், சேரமான் என்னும் பெயர்களை எடுத்துக்காட்டாக இதற்கு உரையாசியர்கள் தருகின்றனர்.[1]

கிள்ளி

 1. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
 2. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்
 3. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
 4. சோழன் நலங்கிள்ளி
 5. சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்
 6. சோழன் போர்வைக்கோப்பெருநற்கிள்ளி
 7. சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி
 8. சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி
 9. நெடுங்கிள்ளி

செம்பியன்

 1. துலை புக்க செம்பியன்
 2. தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன்

சென்னி

 1. சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி புறநானூறு 203
 2. சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி
 3. சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி
 4. சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி
 5. சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி
 6. பெரும்பூட் சென்னி

வளவன்

 1. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்
 2. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

வளத்தான்

 1. சோழன் கரிகாற்பெருவளத்தான்
 2. சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்

இவற்றையும் காண்க[தொகு]

அடிகுறிப்பு[தொகு]

 1. தொல்காப்பியம், பெயரியல், நூற்பா 11, இளம்பூரணர் உரை