காந்தளூர் சாலைப் போர்கள் (சோழரும் சேரரும்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காந்தளூர் சாலைப் போர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
காந்தளூர் சாலைப் போர்
முதலாம் இராஜராஜ சோழனனின் கீழ் சோழப் பேரரசு விரிவாகுதல்
சோழ-சேரர் முரண்பாடுகள் பகுதி
Rajaraja territories.png
முதலாம் இராஜராஜ சோழனனின் கீழ் சோழப் பேரரசு விரிவு
நாள் கி.பி. 10ம் நூற்றாண்டு இறுதி
இடம் கண்டலூர்
தீர்க்கமான சோழர் வெற்றி.
பிரிவினர்
சோழப் பேரரசு பிற்கால சேரர் அரசு
தளபதிகள், தலைவர்கள்
முதலாம் இராஜராஜ சோழன் முதலாம் பாஸ்கர ரவி வர்மன்

காந்தளூர் சாலைப் போர் சோழப் பேரரசர்களுக்கும் பிற்கால சேரர்களின் அரசின் படைகளுக்கும் இடையே தற்போதைய கேரளா அரசின் விழிஞம் எனுமிடத்திற்கு அருகிலுள்ள துறைமுகப் பட்டணமான காந்தளூர் சாலையில் (தற்போது வலியசாலா[1]) கிட்டத்தட்ட கி.பி. 10ம் நூற்றாண்டு இறுதியிலும், பதினொன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இடம்பெற்றன. முதலாம் போரில் முதலாம் இராசராசனும், இரண்டாம் போரில் முதலாம் இராசேந்திரன் சோழ வேந்தர்களாய் போருக்கு தலைமை தாங்கி சேர வேந்தர்களை வென்றனர்.

காந்தளூர்[தொகு]

இராஜராஜ சோழனின் முதல் வெற்றியும் முதன்மையான வெற்றியும் காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளிய நிகழ்வே ஆகும். இம்மன்னனின் நான்காவது ஆட்சி ஆண்டிலிருந்து (கி.பி. 988) இந்த அடைமொழி இராஜராஜனின் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

“சாலை கலமறுத்தளிய கோராஜகேசரி வன்மரான ஸ்ரீ ராஜராஜ தேவன்” என்றும், “காந்தளூர்ச் சாலை கலமறுத்தருளிய ஸ்ரீ ராஜராஜ தேவன்” என்றும் இரண்டு விதமாகக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. காந்தளூர்ச்சாலை என்பது கேரள மாநிலத்தின் தென் எல்லையில் திருவனந்தபுரத்தின் ஒரு பகுதியாக உள்ள வலியசாலை என்ற இடமே என்றும், கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள களியக்காவிளையைத் தாண்டிக் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள உதியன் பேரூரிலிருந்து பூவாறு என்ற ஊருக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள காந்தளூர்தான் என்றும் இருவேறு விதமாக அடையாளம் காணப்படுகிறது.

முதலாம் இராசாதிராசனின் இரண்டு மெய்கீர்த்திகளிலுமே அவன் காந்தளூர் சாலையை வென்ற நிகழ்வு குறிக்கப்பட்டுள்ளது. [2][3]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. "Friday Review Chennai / Heritage : Unearthed stone ends debate". The Hindu. 2009-11-27. 2013-11-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-05-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. வேலைகொள் காந்தளூர்ச் சாலைகல மறுத்தற்பின் தன்குலத் தவனிபர் நன்குதரு தகைமையில் - முதலாம் இராசதிராசனின் முதலாம் மெய்கீர்த்தி
  3. வஞ்சியம் புதுமலர் மலைந்தாங்கு எஞ்சலில் வேலைகெழு காந்தளூர்ச் சாலைகலம் அறுப்பித்து - முதலாம் இராசதிராசனின் இரண்டாம் மெய்கீர்த்தி

வெளியிணைப்புகள்[தொகு]