உள்ளடக்கத்துக்குச் செல்

சோழர்களின் சீனத் தொடர்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீனத்துடன் சோழர்கள் பண்டைய காலத்திலேயே தொடர்பு கொண்டிருந்தனர்.

கி.மு.இரண்டாம் நூற்றாண்டு

[தொகு]

சீனத்துடன் சோழர்கள் கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலேயே தொடர்பு கொண்டிருந்தனர். சோழ மன்னர்களின் அரசவைக்கு சீனம் தன் தூதரை அனுப்பியதை சீன அறிஞர் பான்கூ கூறி இருக்கிறார்.[1] பான்கூவின் இட்சியன் ஃகான் சூ என்னும் நூலில் கூவாங்ட்சே என்னும் நகரில் சீனாவில் காணாத பொருட்களையெல்லாம் கண்டதாக கூறுகிறார். பெரண்ட் என்னும் வல்லுநர் ஒலியியல் அடிப்படையில் இந்நகரின் பெயர் பண்டைத்தமிழ் சோழ காஞ்சி மாநகரை ஒத்துள்ளது எனக்கூறுகிறார். இதன் மூலம் சீனாவுக்கும் காஞ்சிக்கும் இருந்த தொடர்பு உறுதியாகிறது.[2]

காசுகள்

[தொகு]

மூலம் - பண்டைய தமிழகம்[3]

இத்தொடர்பை உறுதிப்படுத்தும் வண்ணம் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் சில சீனக்காசுக் குவியல்கள் கிடைத்துளன.[4]

இடம் எண்ணிக்கை குறிப்பு
ஒலயக்குன்னம் 323 இதன் காலம் கி.மு. 142-126. புதுக்கோட்டை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம்.
தாலிக்கோட்டை 1822 மன்னார்க்குடி வட்டம்

பிற்காலம்

[தொகு]

இராசேந்திர சோழன் காலத்தில் கி.பி.1016-1033லிலும், குலோத்துங்க சோழன் காலத்தில் கி.பி.1077லிலும் சீனத்திற்கு அரசியல் வணிக தூதர் குழுக்கள் அனுப்பப்பட்டன.[5][6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "sino-indian cultural ties from time immemorial", baroda, jan 7. sardar K.M.panikkar was delivering the 1st of 3 lectures on 'india & china' @ maharaja sayaji rao university of baroda, News item in "the mail" dated 19-1-1956
  2. தமிழர் காசியல், நடன காசிநாதன்
  3. சி.க. சிற்றம்பலம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை.
  4. Chinese Coins From Tanjore, Si no-Indian Studies, vol. I, Part I, Oct. 1944
  5. "the chola monarchs sent embassies, paertly diplomatic & commercial, to china which reched that country in 1016,1033,1077" -K.A.Nilakanta shastri, "A history of south india"
  6. இந்திய வரலாறு கி.பி.1200 வரை - அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - அதிகாரம்-8 - பகுதி-24 - பக்கம்-425 - வாணிகமும் நாணயமுறையும்