கிள்ளிவளவன், குராப்பள்ளித் துஞ்சியவன்
(சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
சங்க காலச் சோழ அரசர்களில் இருவர் குராப்பள்ளி என்னும் ஊரில் இருக்கும்போது காலமானார்கள். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் என்போர் அவர்கள்.
கோவூர் கிழார் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவனின் வெற்றிகளைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.[1] பிட்டை சேர வேந்தர்களில் ஒருவன்.[2] கொங்குநாட்டுக் கருவூரை இந்தக் கிள்ளிவளவன் வீழ்த்தியபோது அதன் அரசன் பிட்டை உடல் காயத்தாலும், உள்ள உளைச்சலாலும் பெரிதும் வருந்தினான்.[3] இந்தப் போர் வஞ்சிமுற்றம் என்னுமிடத்தில் நடந்தது.[4] இவன் தன் நண்பர்களுக்கு எல்லா நலன்களும் உதவும் பண்பினன்.[5]