தக்கோலப் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தக்கோலப் போர்
நாள் 949
இடம் தக்கோலம்
  • இராட்டிரகூடம் வெற்றி
  • சோழரின் தோல்வியும் பின்னடைவும்
பிரிவினர்
சோழப் பேரரசு இராட்டிரகூடப் பேரரசு, மேலைக் கங்கர்
தளபதிகள், தலைவர்கள்
இராஜாதித்தர் மூன்றாம் கிருஷ்ணன், இரண்டாம் பூதுகன்
பலம்
தெரியாது தெரியாது
இழப்புகள்
இராஜாதித்தர்

தக்கோலப் போர் கி.பி. 949 ஆம் வருடம் தற்போதைய இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தக்கோலம் என்னும் ஊரில் நடைபெற்றது. இந்தப் போரில் இராஜாதித்தர் தலைமையிலான முதலாம் பராந்தக சோழனின் சோழர் படையும் இராட்டிரகூட மன்னன் கன்னர தேவனின் தலைமையிலான இராட்டிரகூட படையும் மோதின. இப்போரில் சோழர் படைக்குத் துணையாகச் சேரரின் படைகளும் இராட்டிரகூடர் படைக்குத் துணையாக கங்கரின் படையும் வந்தன. மிகவும் கொடூரமாக நடந்த இப்போரில் கங்க மன்னன் இரண்டாம் பூதுகனின் (கன்னரதேவனின் மைத்துனன்) அம்பினால் சோழ இளவரசர் இராஜாதித்தர் கொல்லப்பட்டார். இதனால் சோழர் படை தோல்வியுற்றது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தக்கோலப்_போர்&oldid=3406648" இருந்து மீள்விக்கப்பட்டது