தக்கோலம்
தக்கோலம் | |||
ஆள்கூறு | 13°01′21″N 79°43′26″E / 13.022495°N 79.723998°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | இராணிப்பேட்டை | ||
வட்டம் | அரக்கோணம் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | |||
மக்கள் தொகை • அடர்த்தி |
13,983 (2011[update]) • 1,645/km2 (4,261/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு | 8.50 சதுர கிலோமீட்டர்கள் (3.28 sq mi) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | www.townpanchayat.in/thakkolam |
தக்கோலம் (ஆங்கிலம்:Thakkolam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரின் புராதனப் பெயர் திருஊறல் என்பதாகும். திருஞானசம்பந்தரால் பாடப் பெற்ற தக்கோலம் ஜலநாதீசுவரர் கோயில் இவ்வூரில் அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]வேலூர் நகரத்திலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ள தக்கோலம் பேரூராட்சிக்கு அருகில் அமைந்த தொடருந்து நிலையம், 14 கிமீ தொலைவில் உள்ள அரக்கோணம் ஆகும். இதன் கிழக்கில் திருவள்ளூர் 29 கிமீ; மேற்கில் வேலூர் 75 கிமீ; வடக்கில் காஞ்சிபுரம் 29 கிமீ; தெற்கில் அரக்கோணம் 14 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]8.50 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [3]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,321 வீடுகளும், 13,983 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.69% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 890 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]
மேலும் பார்க்க
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ தக்கோலம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Thakkolam Population Census 2011