நெமிலி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நெமிலி வட்டம், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தின் ராணிப்பேட்டை வருவாய்க் கோட்டத்தின் நான்கு வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1] மேலும் இது வேலூர் மாவட்டத்தின் 13 வட்டங்களில் ஒன்றாகும்.

இவ்வட்டம் அரக்கோணம் வட்டத்தின் சில வருவாய் கிராமங்களைக் கொண்டு 2016ல் நிறுவப்பட்டது. [2]

இதன் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் நெமிலியில் இயங்குகிறது.

நெமிலி வட்டம் நெமிலி, காவேரிப்பாக்கம், பானாவரம் மற்றும் பனப்பாக்கம் என 4 குறு வட்டங்களையும், 77 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது. [3]

நெமிலி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்கள்
  2. http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2017/jan/20/நெமிலி-வட்டத்தில்-இரு-ஊராட்சிகளை-இணைக்கக்-கோரி-வட்டாட்சியரிடம்-மனு-2635042.html
  3. நெமிலி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெமிலி_வட்டம்&oldid=2769422" இருந்து மீள்விக்கப்பட்டது