வேலூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வேலூர் வட்டம் , தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக வேலூர் நகரம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் வேலூர் மற்றும் பேரணாம்பட்டு என 2 உள்வட்டங்களும், 51 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

இவ்வட்டத்தில் வேலூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 696,110 ஆகும். அதில் 343,919 ஆண்களும், 352,191 பெண்களும் உள்ளனர். 166,169 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 36.6% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 82.23% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,024 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 74081 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 958 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 131,460 மற்றும் 15,868 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 84.45%, இசுலாமியர்கள் 11.44%%, கிறித்தவர்கள் 3.68% மற்றும் பிறர் 0.44% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலூர்_வட்டம்&oldid=2727971" இருந்து மீள்விக்கப்பட்டது