குடியாத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
குடியாத்தம்
—  முதல் நிலை நகராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எஸ். எ. ராமன் இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை 91,376 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)

குடியாத்தம் (ஆங்கிலம்:Gudiyatham), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். ஆகஸ்ட் 15, 1947 அன்று டெல்லி செங்கோட்டையில் ஏற்றிய இந்திய தேசிய கொடி குடியாத்தம் நகரில் நெய்யப்பட்டது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 91,376 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். குடியாத்தம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குடியாத்தம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.இந்திய ஆடை கலாச்சாரமாம் கைத்தறி எனும் நெசவுத்தொழிலில் முக்கிய பங்கு வகித்து வந்தது. இவர்கள் நெய்த கைலிகள் உலகத்தின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்ட வந்தது இந்நகரத்தின் சிறப்பாகும். தற்போது இந்நெசவுத் தொழில் சீரழிந்து விட்டது.

மேலும் சில சிறப்புகள்[தொகு]

  • கர்மவீரர் காமராஜரை சொந்த மண் விருதுநகர் தோற்கடித்தாலும், அவரை முதன்முதலில் வெற்றி பெற வைத்து அழகு பார்த்த குடியாத்தம்.
  • இரண்டு "ஆஸ்கார் அவார்டு "களை அள்ளி மூன்றாவாது ஆஸ்கார் அவார்டுக்கு "பீலே "படத்தின் மூலம் அஸ்திவாரம் போட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை குடியாத்தம் சேகரை தந்த ஊர்.
  • தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் மனைவி பிறந்த குடியாத்தம் அடுத்த செம்பேடு.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.


"https://ta.wikipedia.org/w/index.php?title=குடியாத்தம்&oldid=2387188" இருந்து மீள்விக்கப்பட்டது