விஜயகாந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விஜயகாந்த்
Vijayakanth at a function cropped.jpg

தலைவர் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்
பிறப்பு 25 ஆகத்து 1952
மதுரை, தமிழ்நாடு, இந்தியா
தொழில் திரைப்பட நடிகர்
துணைவர் பிரேமலதா
பிள்ளைகள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன்

விஜயகாந்த் எனப்படும் அ. விஜயராஜ் நாயுடு ஒரு திரைப்பட நடிகர். தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவர். தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினர்; எதிர்க்கட்சித் தலைவர்.

இளமைக்காலம்

விஜயகாந்த் என்னும் விஜயராஜ், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். சிறுவயதிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்தது. இதனால், விஜயகாந்த் மதுரையில் வளர்ந்தார். தன் தந்தையின் மேற்பார்வையில் இயங்கிய அரிசி ஆலையில் விஜயகாந்த் தனது பதின்ம வயதில் சிறுசிறு பணிகளைச் செய்துவந்தார்.

திரைப்பட உலகில்

விஜயராஜ் பெயரை இயக்குனர் காஜா விஜயகாந்த் என மாற்றி வைத்தார்.[சான்று தேவை] திரைப்படத்தில் நடிக்கும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்தார். தொடர் முயற்சிக்குப் பின்னர் 1978 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தார். மேலும் இவர் தமிழ் சினிமாவின் கேப்டனாக வலம் வந்தார். தமிழ் சினிமாவின் அதிகமான ரசிகர் மன்றம் இவருக்கு தான் இருக்கிறது. இவர் இதுவரை 156 படங்களில் நடித்திருக்கிறார்.[சான்று தேவை]

மண வாழ்க்கை

விஜயகாந்த், பிரேமலதா என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

அரசியல் உலகில்

அதன் தொடர்ச்சியாக 1993 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவரது ரசிகர் மன்றத்தினர் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். அவர்களில் பலர் வெற்றிபெற்றனர். இப்பின்புலத்தில் விஜயகாந்த் தானும் அரசியலில் ஈடுபடும் எண்ணங்கொண்டார். அதனை அவ்வப்பொழுது வெளியிட்டும் வந்தார்.

அரசியல் கட்சி

2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார்.[1] இவர் கட்சியின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார். இரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராக இருந்த ராமு வசந்தன், கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.

சட்டமன்ற உறுப்பினர்

2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றி்னார். இத்தேர்தலில் மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சியைச் சேர்ந்த மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 இரிஷிவந்தியம் தொகுதியிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவரது கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதி கிடைத்தது. இவர் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நடித்த திரைப்படங்கள்

 1. 1978 - இனிக்கும் இளமை
 2. 1979 - ஓம் சக்தி
 3. 1980 - தூரத்து இடிமுழக்கம்
 4. 1981 - சட்டம் ஒரு இருட்டறை
 5. 1981 - மனக் கணக்கு
 6. 1981 - சிவப்பு மாலை
 7. 1981 - நீதி பிழைத்தது
 8. 1982 - பார்வையின் மறுப்பக்கம்
 9. 1983 - ஆட்டோ ராஜா
 10. 1983 - சாட்சி
 11. 1983 - துரை கல்யாணம்
 12. 1984 - நாளை உனது நாள்
 13. 1984 - 100வது நாள்
 14. 1984 - ஈட்டி
 15. 1984 - குடும்பம்
 16. 1984 - குழந்தை ஏசு
 17. 1984 - சத்தியம் நீயே
 18. 1984 - தீர்ப்பு என் கையில்
 19. 1984 - வெட்டி
 20. 1984 - வெள்ளை புறா ஒன்று
 21. 1984 - வைதேகி காத்திருந்தாள்
 22. 1984 - நல்ல நாள்
 23. 1985 - அமுத கானம்
 24. 1985 - அலை ஓசை
 25. 1985 - அன்னை பூமி
 26. 1985 - ஏமாற்றாதே ஏமாறாதே
 27. 1985 - சந்தோச கனவு
 28. 1985 - தண்டனை
 29. 1985 - நானே ராஜா நானே மந்திரி
 30. 1985 - ராமன் சிறிராமன்
 31. 1986 - அம்மன் கோவில் கிழக்காலே
 32. 1986 - அன்னை என் தெய்வம்
 33. 1986 - அன்னையின் மடியில்
 34. 1986 - ஊமைவிழிகள்
 35. 1986 - எனக்கு நானே நீதிபதி
 36. 1986 - ஒரு இனிய உதயம்
 37. 1986 - கருமேட்டுக் கருவாயன்
 38. 1986 - தர்ம தேவதை
 39. 1986 - மணக்கணக்கு
 40. 1986 - தழுவாத கைகள்
 41. 1986 - வசந்த ராகம்
 42. 1986 - வீரபாண்டியன்
 43. 1987 - கூலிக்காரன்
 44. 1987 - சட்டம் ஒரு விளையாட்டு
 45. 1987 - சிறை பறவை
 46. 1987 - சொல்வதெல்லாம் உண்மை
 47. 1987 - நினைவு ஒரு சங்கீதம்
 48. 1987 - மழை பொழியுது
 49. 1987 - ரத்தினங்கள்
 50. 1987 - வீரன் வேலுத்தம்பி
 51. 1987 - வேலுண்டு வினையில்லை
 52. 1988 - உழைத்து வாழ வேண்டும்
 53. 1988 - உள்ளத்தில் நல்ல உள்ளம்
 54. 1988 - காலையும் நீயே மாலையும் நீயே
 55. 1988 - செந்தூரப் பூவே
 56. 1988 - தம்பி தங்ககம்பி
 57. 1988 - தெக்கத்தி கள்ளன்
 58. 1988 - தென்பாண்டி சிமையிலே
 59. 1988 - நல்லவன்
 60. 1988 - நீதியின் மறுப்பக்கம்
 61. 1988 - பூந்தோட்ட காவல்காரன்
 62. 1988 - மக்கள் ஆணையிட்டால்
 63. 1989 - ஊழவன் மகன்
 64. 1989 - என் புருசன் தான் எனக்கு மட்டும் தான்
 65. 1989 - தர்மம் வெல்லும்
 66. 1989 - பொறுத்தது போதும்
 67. 1989 - பொன்மனச்செல்வன்
 68. 1989 - மீனாட்சி திருவிளையாடல்
 69. 1989 - ராஜாநாடி
 70. 1990 - என் கிட்டே மோதாதே
 71. 1990 - சத்ரியன்
 72. 1990 - சந்தனக் காற்று
 73. 1990 - சிறையில் பூத்த சின்ன மலர்
 74. 1990 - பாட்டுக்கு ஒரு தலைவன்
 75. 1990 - புதுபாடகன்
 76. 1990 - புலன் விசாரணை
 77. 1991 - கேப்டன் பிரபாகரன்
 78. 1991 - மாநகர காவல்
 79. 1991 - மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும்
 80. 1992 - காவியத் தலைவன்
 81. 1992 - சின்ன கவுண்டர்
 82. 1992 - தாய்மொழி
 83. 1992 - பரதன்
 84. 1993 - எங்க முதலாளி
 85. 1993 - ஏழைஜாதி
 86. 1993 - கோயில் காளை
 87. 1993 - செந்தூரப் பாண்டி
 88. 1993 - ராஜதுரை
 89. 1993 - சக்கரத் தேவன்
 90. 1994 - ஆனஸ்ட்ராஜ்
 91. 1994 - என் ஆசை மச்சான்
 92. 1994 - சேதுபதி ஐபிஸ்
 93. 1994 - பதவிப் பிரமாணம்
 94. 1994 - பெரியமருது
 95. 1995 - கருப்பு நிலா
 96. 1995 - காந்தி பிறந்த மண்
 97. 1995 - திருமூர்த்தி
 98. 1996 - அலெக்சாண்டர்
 99. 1996 - தமிழ்ச் செல்வன்
 100. 1996 - தாயகம்
 101. 1997 - தர்மச்சக்கரம்
 102. 1998 - உளவுத்துறை
 103. 1998 - வீரம் விளையும் மண்
 104. 1998 - தர்மா
 105. 1999 - பெரியண்ணா
 106. 1999 - கல்லழகர்
 107. 1999 - கண்ணுபடப் போகுதையா
 108. 2000 - வானத்தைப் போல
 109. 2000 - சிம்மாசனம்
 110. 2000 - வல்லரசு
 111. 2001 - வஞ்சிநாதன்
 112. 2001 - நரசிம்மா
 113. 2001 - தவசி
 114. 2002 - இராச்சியம்
 115. 2002 - தேவன்
 116. 2002 - ரமணா
 117. 2003 - சொக்கத்தங்கம்
 118. 2003 - தென்னவன்
 119. 2004 - எங்கள் அண்ணா
 120. 2006 - சுதேசி
 121. 2006 - பேரரசு
 122. 2006 - தர்மபுரி
 123. 2007 - சபரி
 124. 2008 - அரசாங்கம்
 125. 2010 - விருதகிரி

மேற்கோள்

 1. [1]

வெளி இணைப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயகாந்த்&oldid=1819444" இருந்து மீள்விக்கப்பட்டது