சீனு இராமசாமி
![]() | இந்தக் கட்டுரை ஒரு ரசிகரின் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டுள்ளது. |
சீனு இராமசாமி [1] இந்திய திரைப்பட இயக்குநரும், கவிஞரும் ஆவார். இவர் 13 அக்டோபர் 1975 அன்று மதுரையில் பிறந்தார்.
கூடல்நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே மாமனிதன்[2] என ஏழு படங்களை இயக்கியுள்ளார். இடம் பொருள் ஏவல்[3][4] மற்றும் மாமனிதன்[5] ஆகிய இரு படங்களும் வெளியாவதற்கு தயார் நிலையில் உள்ளது.
சீனுராமசாமியின் முதல் படமான கூடல்நகர் 2007ஆம் ஆண்டு வெளியானது பரத், சந்தியா, பாவனா மற்றும் பலர் இதில் நடித்திருந்தார்கள் வெகுஜன மக்களின் பாராட்டையும் விமர்சனரீதியாக பெரும் வரவேற்பை பெற்று தந்தது. பின்பு தாய் மற்றும் மகன் உறவுகளின் அடிப்படையில் இயக்கிய இவருடைய இரண்டாவது படம் தென்மேற்கு பருவக்காற்று 2010ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது. சிறந்த திரைப்படம் தமிழுக்காக தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் இயக்குநர் சீனுராமசாமி தன்னுடைய முதல் தேசிய விருதை பெற்றார்.
கிராமத்துப் பின்னணியில் திரைக்கதையை நகர்த்தியிருக்கும் சீனுராமசாமி தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதில் ஆக சிறந்த இயக்குநராக தடம் பதித்தார்.
மக்களின் பார்வையிலும் இந்திய சினிமா தளத்திலும் பெரும் பாராட்டையும் மூன்று தேசிய விருதுகளையும் பெற்ற தென்மேற்கு பருவக்காற்று படம் சிறந்த நடிகைக்கான விருதை சரண்யா பொன்வண்ணன்[6] அவர்களுக்கும், “கள்ளிக்காட்டில் பெறந்த தாயே” என்ற பாடலுக்கு சிறந்த பாடல் வரிக்கான விருதை கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும், சிறந்த திரைப்படம் தமிழுக்கான விருதை இயக்குநர் சீனுராமசாமிக்கும் 58வது தேசிய விருது விழாவில்(புது டில்லி) கொடுத்து கௌரவவிக்கப்பட்டது.
தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியை தமிழ் சினிமாவில் முதல் முறையாக தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தார் இயக்குநர் சீனுராமசாமி.
நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் பல பேட்டிகளில் பதிவு செய்வதுண்டு சினிமா பயணத்தில் இயக்குநர் சீனுராமசாமி அவர்கள் என்னுடைய ஒரு குருநாதர் என்று. தென்மேற்கு பருவக்காற்று படத்திலிருந்தே இவர்களுக்கு இடையிலான உறவுகள் ஆசிரியர் மாணவர்களை போன்றும் மற்றும் சிறந்த நண்பர்களாகவும் வெளிப்படுவதை ஊடகங்களில் பேட்டிகளின் வழியாக நம்மால் பார்க்க முடிகிறது.
மேலும் இயக்குநர் சீனுராமசாமி[7][8] அவர்கள் நடிகர் விஜய் சேதுபதிக்கு “மக்கள் செல்வன் விஜய் சேதுபதி” என்ற பட்டத்தை சூட்டினார். இப்பெயர் தென்னிந்திய ரசிகர்களால் பெரும் வரவேற்பையும் கொண்டாட்டத்தையும் பெற்றது.

தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பிறகு இவர்கள் இணைந்து இடம் பொருள் ஏவல், தர்மதுரை, மாமனிதன் போன்ற படங்களையும் முடித்துள்ளார்கள்.
உலக சினிமா மற்றும் எதார்த்த வாழ்வியல்
இயக்குநர் சீனுராமசாமி [7] அவர்கள் தமிழர்களின் உள்ளூர் வாழ்வியல் நெறிமுறைகளை அவர்கள் வாழும் இயற்கை சூழலியலுடம் பொருத்தி நிஜ தன்மையுடன் திரைக்கதை அமைப்பதே இவருடைய படங்கள் உலக சினிமா தரத்தில் வெளிப்படுவற்கான காரணமாக உள்ளது. இவர் தேர்வு செய்யும் களத்தில் கேட்கும் வட்டார வழக்கு வார்த்தைகளும் உறவுகளின் உள்ளூர உரையாடளும் இதற்குள் பயன்டுத்தும் உள்ளூர் உளவியல் உத்தேசங்களும் இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தின் தனி சிறப்பு.
செயற்கை அரங்குகளுடனும் கணினி சாயங்களும் பூசப்பட்டு திரையரங்குகளில் குவியல் போட்டு கொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களையும், கலாச்சார சுவடுகளையும் அதற்குள் படிந்த சத்தியத்தின் கோடுகளையும் காட்சிகளில் வடிவமைப்பது இவரின் எதார்த்ததிற்குள் உள்ள பிரம்மாண்ட வெளிப்பாடு.
இயக்குநர் சீனுராமசாமி தன்னுடைய படங்களில் பெரும் தொழில்நுட்பத்தை எல்லாம் துணைக்கு அழைப்பதில்லை, தான் தேர்வு செய்யும் கதை களத்திலுள்ள மண் சார் உணர்வு சார் தடயங்களையே தன் சினிமாவுக்கான நவீன தொழில்நுட்பமாக கையாளுகிறார் என்பதை நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே படங்களின் காட்சிகளில் நம்மால் உணர முடியும்.
தென்தமிழகத்தின் மண்ணோடும் மக்களோடும் கலந்துகிடக்கும் கணங்களையும் அதன் உடனிருந்து பயணித்த இவரின் அனுபவங்களையும் கொண்டு சினிமாக்களின் வழியாக ஒரு இயக்குநராக இவர் நினைவுப்படுத்தும் கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் மகிழ்வான தேக்கத்தை ஏற்படுத்துகிறது. பெண் கதாபாத்திரங்களை மிக கண்ணியத்துடன் காட்டுவது இவருடைய படங்களின் மற்றொரு சிறப்பு.
தமிழ்நாட்டு நிலப்பரப்புகளில் மட்டும் பட பிடிப்புகளை நிகழ்த்தும் இவர் புவியல் சார் சூழலியல் களங்களையும் அதற்குள் அடங்கியுள்ள உயிர்ப்பு தன்மையுள்ள ஆழமான இயற்கை காட்சிகளையும் தமிழர்களின் பார்வைக்கு கொண்டுவந்து சேர்ப்பதில் ஒரு கலை படைப்பாளியாக பெரும் பங்கு வகிக்கிறார்.
இவருடைய படங்களின் உள்நோக்க கருதுகோள் என்பது சமூகத்தில் மனிதாபிமானத்தை மேம்படுத்தக் கூடிய ஒன்றாக மட்டும் உள்ளது.
2015ம் வருடம், தென்தமிழகத்தின் மிகவும் பழமையான பவளவிழாக் கொண்டாடிய மதுரையில் உள்ள மதுரா கல்லூரி, இயக்குநர் சீனு ராமசாமி அவர்களுக்கு “மக்கள் இயக்குநர் சீனுராமசாமி” என்ற பட்டத்தை கொடுத்து கௌரவவித்தது.
முழுமையான கமர்ஷியல் படங்களுக்கும் மாசாலா திணிப்புகளுக்கும் சமரசம் அடையாத இயக்குநர் சீனுராமசாமி, மக்களின் ரசனைகளுக்கு நான் காட்சிகளை வைப்பதில்லை மக்களின் தேவைகளுக்கு தான் காட்சி அமைக்கின்றேன் என்று ஊடக நேர்காணல்களில் உறுதியாக பதிவு செய்கிறார்.
கூடல்நகர் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பிறகு 2012ம் ஆண்டு சீனுராமசாமி இயக்கத்தில் நீர்ப்பறவை படம் வெளியானது விஷ்ணு, சுனைனா, நந்திதா தாஸ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடித்திருந்தார்கள். என்.ஆர்.ரகுநந்தன் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து பாடல் வரிகளை எழுதியிருந்தார், உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் இப்படம் வெளியானது. கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவ சமுதாயங்களின் வாழ்வியலை சொன்ன இத்திரைப்படம் தமிழக மக்களிடம் பெரும் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றது இன்று வரை தர்க்க விமர்சனத்தின் அடிப்படையில் ஊடகங்களிலும், வலை தளங்களிலும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. 2014ஆம் ஆண்டு இடம் பொருள் ஏவல் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் இதற்கு கதை எழுதியிருக்கிறார், இயக்குநர் லிங்குசாமி தயாரித்து இருக்கிறார் விஜய் சேதுபதி, விஷ்ணு, ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடித்துள்ளார்கள் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடல் வரிகளை எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவும் கவிப்பேரரசு வைரமுத்துவும் இப்படத்தில் முதல் முதலாக இணைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சீனுராமசாமி இயக்கத்தில் மலை வாழ் மக்களின் வாழ்வியலை சுமந்து வரும் இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
2016ஆம் ஆண்டு சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தர்மதுரை ஆர்.கே.சுரேஷ் தாயாரிப்பில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், தமன்னா, ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தார்கள், யுவன் சங்கர் ராஜா இசையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடல் வரிகளை எழுதியிருந்தார். 2016ம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட வெற்றி படங்களில் இதுவும் ஒன்று. நூறு நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றது. மேலும் இப்படத்தில் வரும் “எந்தப் பக்கம்[10]” என்ற பாடலுக்கு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு இயக்குநர் சீனுராமசாமியின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கண்ணே கலைமானே உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தார்கள் யுவன் சங்கர் ராஜா இசையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாடல் வரிகளை எழுதியிருந்தார். இயற்கை விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வையும் இதனுடன் வந்து கை கோர்க்கும் அழகிய காதலையும் பசுமையான கிராமத்து பின்னணியில் இயக்குநர் சீனுராமசாமியால் அரங்கேற்றப்பட்ட ஒரு கவிதை தான் கண்ணே கலைமானே.
தற்போது சீனுராமசாமி மாமனிதன் [11] என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார் விஜய் சேதுபதி, காயத்ரி, கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்துள்ளார்கள், சுகுமார் ஒளிப்பதிவு மற்றும் ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார், யுவன் சங்கர் ராஜா அவர்கள் இப்படத்தை தயாரித்து இருக்கிறார். இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் முதல் முதலாக இணைந்து இப்படத்தில் இசை அமைத்துள்ளார்கள் விரைவில் இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது.
தொடக்க காலம்
இயக்குநர் சீனுராமசாமி தன் இளங்கலை (கணிதவியல்) படிப்பை மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் முடித்துள்ளார். நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி படிப்புகளை சார்லஸ் கான்வண்ட் திருநகர் மதுரை, சவிதாபாய்(கோவை) உயர்நிலை பள்ளி மற்றும் டி.வி.எஸ் சுந்தரம் ஐய்யங்கர் மேல்நிலை பள்ளி மதுரையில் முடித்துள்ளார். இவரின் சொந்த ஊரானா திருநகர் பற்றி என் ஊர்-உலகின் சிறந்த பாதை! என்ற தலைப்பில் 2012ம் வருடம் ஆனந்த விகடனில் ஒரு கட்டுரையாக எழுதியுள்ளார்.
இந்திய மற்றும் உலக சினிமா படங்களை பார்பதனாலும், இலக்கியம் மற்றும் நவீன இலக்கியங்களின் தொடர் வாசிப்புகளாலும் சினிமாவை நோக்கி உந்த பெற்ற இயக்குநர் சீனுராமசாமி அவர்கள் ஆரம்ப காலக்கட்டத்தில் முன்னணி விளம்பர நிறுவனங்களில் உதவியாளராகவும் பின்பு இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தார் மற்றும் இயக்குநர் சீமான் அவர்களிடம் வீரநடை என்ற படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்துள்ளார்.
புத்தக வெளியீடு
இயக்குநர் சீனுராமசாமி தான் கடந்து வந்த பாதைகளையும், சமுகத்தில் இவரின் பார்வையும் இவருக்கே உரித்தான இலக்கிய ரசனைகளையும் கொண்டு “காற்றால் நடந்தேன்[12]” என்ற ஒரு கவிதை தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். இப்புத்தகத்தில் அடங்கிய பல கவிதைகள் ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும், சமூக வலைதளங்களிலும் பெரிதும் பேசப்பட்டுள்ளது.
“ஒரு வீட்டை பற்றிய உரையாடல்” என்ற தலைப்பில் மற்றொரு புத்தகத்தையும் தற்பொழுது எழுதி வருகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "https://twitter.com/seenuramasamy". Twitter. Retrieved 2020-09-10.
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "Maamanithan (film)", Wikipedia (in ஆங்கிலம்), 2020-09-04, retrieved 2020-09-12
- ↑ "'இடம் பொருள் ஏவல்' வெளியீடு எப்போது? - திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தகவல்". Hindu Tamil Thisai. Retrieved 2020-09-10.
- ↑ "இடம் பொருள் ஏவல்". www.vikatan.com/. Retrieved 2020-09-10.
- ↑ "'மாமனிதன்' வெளியீட்டில் அதிகாரமில்லை: இயக்குநர் சீனு ராமசாமி". Hindu Tamil Thisai. Retrieved 2020-09-10.
- ↑ Prasath, Rajendra (2019-02-22). "Kanne Kalaimane Review: இயற்கை விவசாயம், காதல், கணவன் - மனைவி உறவு... 'கண்ணே கலைமானே' - விமர்சனம்!". tamil.filmibeat.com. Retrieved 2020-09-11.
- ↑ 7.0 7.1 "Seenu Ramasamy". www.facebook.com. Retrieved 2020-09-10.
- ↑ "சீனு ராமசாமி's filmography and latest film release news". FilmiBeat. Retrieved 2020-09-10.
- ↑ "https://twitter.com/seenuramasamy/status/1302215089945153537/photo/2". Twitter. Retrieved 2020-09-10.
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "தர்மதுரை News | Dharma Durai News in Tamil - Filmibeat Tamil". FilmiBeat. Retrieved 2020-09-10.
- ↑ ""மாமனிதன் எப்போது வெளியாகும் என என்னைக் கேட்காதீங்க" - சீனு ராமசாமி". Puthiyathalaimurai. Retrieved 2020-09-10.
- ↑ "காற்றால் நடந்தேன்". www.goodreads.com. Retrieved 2020-09-10.