சு. வெங்கடேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சு. வெங்கடேசன் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ஒரு தமிழ் புதின எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக 2011 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். தமிழ் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இவரின் காவல் கோட்டம் புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.

வாழ்க்கை சுருக்கம்[தொகு]

மதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவர் சு.வெங்கடேசன். மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பி.காம்., பட்டம் பெற்றார். கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது, 1989 ல் "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார். இவரின் படைப்புகள்:

 • ஓட்டை இல்லாத புல்லாங்குழல் (கவிதை) - 1989
 • திசையெல்லாம் சூரியன் (கவிதை)
 • பாசி வெளிச்சத்தில் (கவிதை)
 • ஆதிப்புதிர் (கவிதை)
 • கலாசாரத்தின் அரசியல் (கட்டுரை)
 • மனிதர்கள், நாடுகள், உலகங்கள் (கட்டுரை)
 • சமயம் கடந்த தமிழ் (கட்டுரை)
 • காவல் கோட்டம் (புதினம்)
 • அலங்காரப்பிரியர்கள் (கட்டுரை)2014
 • சந்திரஹாசம் (புதினம்)2015
 • வைகை நதி நாகரிகம் 2015ஆம் ஆண்டில் ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்

குற்றச்சாட்டுகள்[தொகு]

2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்ட இவரது காவல் கோட்டம் நூல் நாயக்கர் ஆட்சி களத்தில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீள்கிறது. இவர் நூலுக்காக எடுத்துக் கையாண்ட வரலாற்று குறிப்புகள் அனைத்தும் வேறு சில வரலாற்று ஆய்வாளர்களின் படைப்புகள் என்றும் அவை முறையான நன்றிக் குறிப்புகள் ஏதுமின்றி கையாளப்பட்டுள்ளன என்றும் குற்றசாட்டுகளும் இவர் மீது தொடுக்கப்படுகின்றன. ஆனால் அவை அனைத்தையும் சு.வெங்கடேசன் மறுத்துள்ளார்.

தமிழ் திரைப்பட இயக்குநரான வசந்தபாலன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.

காவல் கோட்டம் பற்றி வெங்கடேசன் சொல்லியது:[1]

நாவல் எழுதத் துவங்கியபோது என் மூத்த மகள் யாழினி பிறந்தார். எழுதி முடித்தபோது அவர் என் தோளுக்கு இணையாக வளர்ந்திருத்தார். நாவலுக்காக 10 ஆண்டுகள் உழைத்தேன். இதற்காக நான் இழந்தது அதிகம்.

தினமலர், டிசம்பர் 29, 2011

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._வெங்கடேசன்&oldid=2477580" இருந்து மீள்விக்கப்பட்டது