கே. ஜெயக்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. ஜெயக்குமார் (பிறப்பு:01 மார்ச்சு, 1950) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவா் 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், நாமக்கல் தொகுதியில் இருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், திருவள்ளூர்[3] தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

வகித்த பதவிகள்[தொகு]

  • 1976 ஆம் ஆண்டு முதல் காங்கிரசு கட்சி உறுப்பினர்; செயலாளர்,  
  • அகில இந்திய காங்கிரசு கமிட்டி; உறுப்பினர்,
  • தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்; 2001 & 2006
  • நாடாளுமன்ற உறுப்பினர் ; 2019 முதல்

மேற்கோள்கள்[தொகு]

  1. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. "தமிழகத்தில் உங்கள் தொகுதியில் யார் முன்னிலை / வெற்றி? - முழு விவரம்". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2021-03-23.
  4. "திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் வெற்றி!". News18 தமிழ் (மே 24, 2019)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஜெயக்குமார்&oldid=3943481" இலிருந்து மீள்விக்கப்பட்டது