எம். கே. விஷ்ணு பிரசாத்
எம். கே. விஷ்ணு பிரசாத் | |
---|---|
தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் செயல்தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 02 பெப்ரவரி 2019 | |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
தொகுதி | ஆரணி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 சூலை 1972 சென்னை |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம்(s) | கிழக்கு அபிராமபுரம், மயிலாபூர், சென்னை - 600004 |
கல்வி | எம்.பி.பி.எஸ் |
வேலை | மருத்துவர், அரசியல்வாதி |
எம். கே. விஷ்ணு பிரசாத் (M. K. Vishnu Prasad) ஓர் இந்திய அரசியல்வாதியும், ஆரணி மக்களவைத் தொகுதியின், பதினேழாவது மக்களவை உறுப்பினரும் ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பிரிவான தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் செயல்தலைவர்களில் ஒருவராக உள்ளார்.[1]
குடும்பம்
[தொகு]இவர் காங்கிரசின் முன்னாள் தலைவரான எம். கிருஷ்ணசாமியின் மகனும்,[2] சௌமியா அன்புமணியின் அண்ணனும் ஆவார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]இவர் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், செய்யாறு தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் ஆரணி தொகுதியிலிருந்தும், [3][4] 2024 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், கடலூர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராகவும், இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Change in Tamilnadu Congress Leadership". The News Minute. 2 February 2019. https://www.thenewsminute.com/article/tn-congress-announces-change-leadership-ks-alagiri-appointed-president-96132. பார்த்த நாள்: 31 March 2019.
- ↑ "அன்புமணியை தாக்கி பேசிய உறவினர் விஷ்ணுபிரசாத்". இந்து தமிழ் (பிப்ரவரி 21, 2019)
- ↑ "ஆரணியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி". மாலைமலர் (மே 23, 2019)
- ↑ "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்".பிபிசி தமிழ் (மே 23, 2019)