ஆ. ராசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆ. ராசா
நாடாளுமன்ற உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு 10 மே 1963 (1963-05-10) (அகவை 54)
பெரம்பலூர், தமிழ்நாடு
அரசியல் கட்சி தி.மு.க
வாழ்க்கை துணைவர்(கள்) எம்.ஏ. பரமேஸ்வரி
பிள்ளைகள் மயூரி
As of மே 30, 2009
Source: [1]

ஆ. ராசா (ஆ. ராஜா, பிறப்பு: 10 மே 1963)பெரம்பலூர் மாவட்டம் வேலூர் கிராமத்தில் பிறந்தவர் .15 ஆவது இந்திய மக்களவையின் முன்னாள் உறுப்பினர். நீலகிரி மக்களவைத் தொகுதியில் இருந்து தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கபட்டவர் ஆவார். இறுதியாக 15 ஆவது மக்களவை அமைச்சரவையில் ஆய அமைச்சராக தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்துறை ஆய அமைச்சராக 16 நவம்பர், 2010 வரை பொறுப்பு வகித்தார். மக்களவைக்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்.

14 ஆவது மக்களவை அமைச்சரவையில் தகவல் தொலைத்தொடர்பு அமைச்சராக அங்கம் வகித்த இவர் 17 அக்டோபர், 2008 அன்று பின்தேதியிட்ட அமைச்சரவை பொறுப்பு விலகல் கடிதத்தை திராவிட முன்னைற்றக் கழகத் தலைவர் திரு. மு. கருணாநிதியிடம் இல்ங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதை இந்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தக் கோரி சமர்ப்பித்தார்[1]. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த திமுக அமைச்சர்கள் அனைவரும் இலங்கைத் தமிழரின் படுகொலையைக் கண்டித்து பொறுப்பு விலகல் கடிதம் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைசெயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப்பரப்புச் செயலாளராகவும் உள்ளார்.

2 ஆம் தலைமுறை அலைவரிசை ("2ஜி' ஸ்பெக்ட்ரம்) முறைகேடு[தொகு]

2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த நடுவண் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் "2 ஆம் தலைமுறை அலைவரிசை" ஓதுக்கீடு செய்ததில் பிரதமர், சட்ட அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவற்றின் அறிவுரைகள் மீறப்பட்டுள்ளன என்றும் பகிரங்கமாக ஏலம் விடாததால் நடுவண் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இத்தகைய மிகப்பெரும் முறைகேடு வெளியான பின்னும் இவருக்கு தி.மு.கவின் தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியின் ஆதரவு பெருமளவு உள்ளது, இதனால் அமைச்சர் பதவியில் இருந்து விலக மறுத்தார். இந்த அறிக்கையை ஆ. ராசா மறுத்தாலும், எதிர்க்கட்சிகளின் தீவிர முயற்சியால் இவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக நேரிட்டது[2]. சிபிஐ விசாரணைக்குப் பின் 2011, பெப்ரவரி 2, அன்று சிபிஐ இவரைக் கைது செய்தது[3].

சொத்து குவிப்பு வழக்கு[தொகு]

வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரூ. 27.92 கோடி அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக ஆ. ராசா மீது சிபிஐ 20 ஆகஸ்டு 2015 அன்று தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளது.[4].[5]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. டி.என்.ஏ இணைய இதழ்
  2. http://www.dailythanthi.com/article.asp?NewsID=607663&disdate=11/17/2010
  3. India's ex-telecoms minister A Raja arrested, பிபிசி, பெப்ரவரி 2, 2011.
  4. ஆ.ராசா மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவானது
  5. ஆ.ராசா மீது சொத்துக் குவிப்பு வழக்கு; இருபது இடங்களில் சிபிஐ சோதனை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._ராசா&oldid=2455181" இருந்து மீள்விக்கப்பட்டது