உள்ளடக்கத்துக்குச் செல்

ஆ. மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆ. மணி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில் உள்ளார்
பதவியில்
2024
முன்னையவர்செ. செந்தில்குமார்
தொகுதிதருமபுரி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வேலைவழக்கறிஞர்

ஆ. மணி (A. Mani) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராவார். மணி 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் தருமபுரி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

மணி தருமபுரி பாரதிபுரத்தைச் சேர்ந்தவர். வழக்கறிஞரான இவர் 1987 முதல் திமுக உறுப்பினராக உள்ளார். 2016 முதல் 2019 வரை தருமபுரி மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்தார். 2020 முதல் 2022 வரை மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினராக இருந்தார். 2023ஆம் ஆண்டு துருமபுரி மேற்கு மாவட்ட துணைச் செயலாளராக இருந்துவருகிறார். 2019 ஆண்டு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.[1] 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் தருமபுரி மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தருமபுரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி - சிறு குறிப்பு". 2024-03-21. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  2. "General Election to Parliamentary Constituencies: Trends & Results June-2024 Parliamentary Constituency 10 - DHARMAPURI (Tamil Nadu)". Election Commission of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._மணி&oldid=4000214" இலிருந்து மீள்விக்கப்பட்டது