செ. செந்தில்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செ. செந்தில்குமார்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2019
தொகுதி தருமபுரி
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி திமுக
வாழ்க்கை துணைவர்(கள்) ஷோபனா
பிள்ளைகள் 1 மகன், 1 மகள்

செ. செந்தில்குமார்[1] ஓர் இந்திய அரசியல்வாதியும், 17வது நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், தருமபுரி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளரான அன்புமணி ராமதாஸை விட 63,301 வாக்குகள் அதிகம்பெற்று வெற்றிபெற்றார்.[2][3]

குடும்பம்[தொகு]

இவர் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் மருத்துவப் படிப்பை படித்துள்ளார். இவருக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர்.[4] இவரது தாத்தா டி. என். வடிவேலு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் தருமபுரி மாவட்டம் உருவாக முக்கிய காரணமாகவும், சேலம் - தருமபுரி - பெங்களூரு ரயில் போக்குவரத்துக்கும் காரணமாக இருந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._செந்தில்குமார்&oldid=3162589" இருந்து மீள்விக்கப்பட்டது