கலாநிதி வீராசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கலாநிதி வீராசாமி (Kalanithi Veerasamy) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், பதினேழாவது மக்களவை உறுப்பினரும் ஆவார்.[1][2]


வாழ்க்கை வரலாறு[தொகு]

இவர் முன்னாள் அமைச்சரும், திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆற்காடு வீராசாமியின் மகனாவார். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த இவர், தனது எம். எஸ் படிப்பை சிறீ ராமசந்திரா பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தார். பின்னர் பிளாஸ்டிக் அறுவை மருத்துவம் படிப்பை லண்டனில் படித்து முடித்தார். இவர் திமுக மருத்துவ அணியில் நீண்ட காலமாகப் பணியாற்றி வருகிறார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், வடசென்னை தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்".பிபிசி தமிழ் (மே 23, 2019)
  2. "4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வட சென்னையில் கலாநிதி வெற்றி". இந்து தமிழ் (மே 24, 2019)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலாநிதி_வீராசாமி&oldid=3162543" இருந்து மீள்விக்கப்பட்டது