எஸ். ஜெகத்ரட்சகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எஸ். ஜெகத்ரட்சகன்
பிறப்பு சாமிக்கண்ணு ஜெகத்ரட்சகன்
15 ஆகத்து 1950 (1950-08-15) (அகவை 68)
விழுப்புரம் மாவட்டம்
பணி அரசியல்வாதி
பெற்றோர் ஜி. சாமிக்கண்ணு கவுண்டர், இலட்சுமி அம்மா[1]
வாழ்க்கைத்
துணை
அனுசுயா
பிள்ளைகள் 2

எஸ். ஜெகத்ரட்சகன் (S. Jagathrakshakan, பிறப்பு: ஆகத்து 15, 1950) தமிழ்நாடு மாநிலம்,  விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த  கலிங்கமலையில் பிறந்த வணிகரும் மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் வடலூரில் தன்னுடைய பள்ளிக்கல்வியை முடித்தார்.  இவர் 1996ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மூன்றுமுறை தமிழ்நாட்டின் அரக்கோணம் தொகுதியிலிருந்து இந்திய மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2012 நவம்பர் முதல் 2013 மார்ச்சு வரை மாநிலத் தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சராகப் பணிபுரிந்தார்.[2] பாலாஜி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். அன்னை தெரேசா என்னும் நூல் உட்பட 30 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

இவர் தன்னுடைய அரசியல் வாழ்வில் 1980ஆம் ஆண்டு முதன்முதலாக தமிழக சட்ட மன்ற உறுப்பினர் ஆனார். 1984ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்(அதிமுக) கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்று இந்திய மக்களவை உறுப்பினரானார்.[1] இவர் 1985 முதல் 1989 வரை அதிமுகவின் மக்களவைத் தலைவராகச் செயல்பட்டார்.[1][3] [4]  1999 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற  மக்களவைத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சி சார்பாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2004ல் வன்னியர் இனத்தை அடிப்படையாகக் கொண்ட வீர வன்னியர் பேரவை என்ற கட்சியைத் தொடங்கினார். 2004லேயே இக்கட்சி ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்று பெயர் மாற்றம் பெற்றது. பின்னர் இக்கட்சி 2009ல் திமுகவுடன் இணைந்தது.

மார்ச்சு 2012ல் வெளியான இந்திய நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு போன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய, பிரச்சினைகளில்  எஸ். ஜெகத்ரட்சகனின் பெயர் முக்கிய இடம் பெற்றிருந்தது. இவர் தன்னுடைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி 2007ல் தன்னுடைய நிறுவனத்திற்கு அதிக அளவிலான நிலக்கரி ஒதுக்கீடு செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவர் 2009ல் ரூ.5 கோடியும், 2011ல் ரூ.70 கோடியும் சொத்துக்குவிப்பு செய்ததாக நம்பப்படுகிறது. மத்திய அரசின் அமைச்சர்களை ஒப்பிடும்போது இது அதிகப்படியான சொத்துக்குவிப்பு சதவீதமாகும். ஜூன் 2009ல் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது இவர் தன்னுடைய ஒரு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்கு ஓர் இடத்திற்கு ரூ. 20 லட்சங்கள் வசூலித்தது கண்டுபிடிக்கப்பட்டது.[5][6][7]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Biographical sketch at Indian Parliament website". National Informatics Centre. பார்த்த நாள் 22--11-2013.
  2. PTI (2 November 2012). "Jagathrakshakan shifted to Commerce and Industry". The Hindu. http://www.thehindu.com/news/states/tamil-nadu/jagathrakshakan-shifted-to-commerce-and-industry/article4058567.ece. பார்த்த நாள்: 22 November 2013. 
  3. "Vellore voters prove predictions wrong". The Hindu (Chennai, India). 18 May 2009. http://www.hindu.com/2009/05/18/stories/2009051852700300.htm. பார்த்த நாள்: 22 November 2013. 
  4. Mohan, Gopu (8 September 2012). "The businessman-politician who finds himself in coal row". Chennai. http://www.indianexpress.com/news/the-businessmanpolitician-who-finds-himself-in-coal-row/999659/. பார்த்த நாள்: 22-11-2013. 
  5. "Coalgate: Now, DMK leader in the dock". Zee News. 7 September 2012. http://zeenews.india.com/news/nation/coalgate-now-dmk-leader-in-the-dock_798230.html. பார்த்த நாள்: 7 September 2012. 
  6. "Coal scam: DMK minister comes under fire". Hindustan Times. 7 September 2012. http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Coal-scam-DMK-minister-comes-under-fire/Article1-925819.aspx. பார்த்த நாள்: 7 September 2012. 
  7. "UPA minister's kin linked to coal block allocation deal". Times of India. 7 September 2012. http://articles.timesofindia.indiatimes.com/2012-09-07/india/33676184_1_coal-block-core-sector-allocation. பார்த்த நாள்: 7 September 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஜெகத்ரட்சகன்&oldid=2578467" இருந்து மீள்விக்கப்பட்டது