அர. வேலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரங்கசாமி வேலு
முன்னாள் இரயில்வே அமைச்சர்
பதவியில்
2004-2009
பின்னவர்கே. எச். முனியப்பா
தொகுதிஅரக்கோணம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 சூலை 1940 (1940-07-26) (அகவை 83)
திருவண்ணாமலை, தமிழ்நாடு
அரசியல் கட்சிபாமக
துணைவர்மல்லிகா
பிள்ளைகள்2
வாழிடம்(s)சென்னை, தமிழ்நாடு
மூலம்: [1]

ரங்கசாமி வேலு (பிறப்பு: சூலை 26, 1940) இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) கட்சியின் உறுப்பினர் ஆவார். 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் அரக்கோணம் மக்களவைத் தொகுதியிலிருந்து 14 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இரயில்வே அமைச்சராகப் பணியாற்றியவர்.

இந்திய ஆட்சிப்பணி  அதிகாரியாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். கூடுதல் பதிவாளர், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்தார்; தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தின் உறுப்பினராகவும் செயல்பட்டார். இவர் மாவட்ட ஆட்சியராகவும், நகராட்சி நிர்வாக கூட்டு ஆணையராகவும், வருவாய் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இவர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் படித்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Fourteenth Lok Sabha Members Bioprofile". Parliament of India. Archived from the original on 29 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 30 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
  2. "Celebrity Photo Gallery, Celebrity Wallpapers, Celebrity Videos, Bio, News, Songs, Movies". www.in.com/. Archived from the original on 2016-04-08. பார்க்கப்பட்ட நாள் 2016-03-30. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர._வேலு&oldid=3938529" இலிருந்து மீள்விக்கப்பட்டது