அரக்கோணம் மக்களவைத் தொகுதி
| அரக்கோணம் மக்களவைத் தொகுதி | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
அரக்கோணம் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
| தொகுதி விவரங்கள் | |
| நிறுவப்பட்டது | 1977-நடப்பு |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மொத்த வாக்காளர்கள் | 14,79,961[1] |
| சட்டமன்றத் தொகுதிகள் | 3. திருத்தணி 38. அரக்கோணம் (தனி) 39. சோளிங்கர் 40. காட்பாடி 41. இராணிப்பேட்டை 42. ஆற்காடு |
அரக்கோணம் மக்களவைத் தொகுதி (Arakkonam Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 7வது தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பு
[தொகு]தொகுதி மறுசீரமைப்புக்குப் முன்பிருந்த சட்டமன்றத் தொகுதிகள் - பள்ளிப்பட்டு, அரக்கோணம் (தனி), சோளிங்கர், இராணிப்பேட்டை, ஆற்காடு, செய்யார் ஆகிய தொகுதிகள் இருந்தன.
சட்டமன்ற தொகுதிகள்
[தொகு]இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
வென்றவர்கள்
[தொகு]| தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | கூட்டணி | ஆதாரம் |
|---|---|---|---|---|
| 6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 | ஓ. வி. அழகேசன் | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 | ஏ. எம். வேலு | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 | ஆர். ஜீவரத்தினம் | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 | ஆர். ஜீவரத்தினம் | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 | ஆர். ஜீவரத்தினம் | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 | ஏ. எம். வேலு | தமிழ் மாநில காங்கிரசு | ||
| 12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 | சி. கோபால் | அதிமுக | ||
| 13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 | எஸ். ஜெகத்ரட்சகன் | திமுக | ||
| 14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 | அர. வேலு | பாமக | ||
| 15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | எஸ். ஜெகத்ரட்சகன் | திமுக | ||
| 16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | கோ. ஹரி | அதிமுக | ||
| 17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | எஸ். ஜெகத்ரட்சகன் | திமுக | ||
| 18 ஆவது மக்களவைத் தேர்தல், 2024 | எஸ். ஜெகத்ரட்சகன் | திமுக | ||
இங்கு காங்கிரசு ஐந்து முறையும், தமாகா, அதிமுக, பாமக ஆகியவை தலா ஒரு முறையும் திமுக நான்கு முறையும் வென்றுள்ளன. 14வது மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற அர. வேலு இரயில்வே இணை அமைச்சராக இருந்தார்.
வாக்காளர்கள் எண்ணிக்கை
[தொகு]| தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர்கள் |
மொத்தம் | ஆதாரம் |
|---|---|---|---|---|---|
| 16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 6,88,587 | 7,07,057 | 42 | 13,95,686 | 2014 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[2] |
| 17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | 7,24,688 | 7,55,199 | 74 | 14,79,961 | 2019 ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி[1] |
வாக்குப்பதிவு சதவீதம்
[தொகு]| தேர்தல் | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு | ஆதாரம் |
|---|---|---|---|
| 15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | 77.84% | - | [3] |
| 16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 77.80% | ↓ 0.04% | [2] |
| 17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | |||
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
[தொகு]| வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
|---|---|---|
| எஸ். ஜெகத்ரட்சகன் | திமுக | 5,60,578 |
| ஏ. எல். விஜயன் | அதிமுக | 2,55,343 |
| கே. பாலு | பா.ம.க | 2,00,614 |
| ஷா. அப்சியா நஸ்ரின் | நாதக | 97,985 |
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
[தொகு]இத்தேர்தலில் 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 13 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகன், பாமகவின் ஏ. கே. மூர்த்தியை 3,28,956 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
| வேட்பாளர் | சின்னம் | கட்சி | தபால் வாக்குகள் | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
|---|---|---|---|---|---|
| எஸ். ஜெகத்ரட்சகன் | திமுக | 5,502 | 6,72,190 | 57.06% | |
| ஏ. கே. மூர்த்தி | பாமக | 1,707 | 3,43,234 | 29
.14% | |
| என். ஜி. பார்த்திபன் | அமமுக | 231 | 66,826 | 5.67% | |
| பாவேந்தன் | நாம் தமிழர் கட்சி | 282 | 29,347 | 2.49% | |
| ராஜேந்திரன் | மக்கள் நீதி மய்யம் | 173 | 23,771 | 2.02% | |
| நோட்டா | - | - | 164 | 12,179 | 1.03% |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
[தொகு]| வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
|---|---|---|
| கோ. ஹரி | அதிமுக | 4,93,534 |
| என். ஆர். இளங்கோ | திமுக | 2,52,768 |
| அர. வேலு | பா.ம.க | 2,33,762 |
| நாசே ராஜேஷ் | காங்கிரசு | 43,960 |
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
[தொகு]20 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், திமுகவின் எஸ். ஜெகத்ரட்சகன், பாமகவின் அர. வேலுவை, 109,796 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
| வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
|---|---|---|
| எஸ். ஜெகத்ரட்சகன் | திமுக | 4,15,041 |
| அர. வேலு | பாமக | 3,05,245 |
| எசு. சங்கர் | தேமுதிக | 82,038 |
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Special Summary Revision 2019 - PC wise Electorate in TN as per Final publication of Electoral Rolls on 31/01/2019".
- 1 2 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. Retrieved 28 சூலை 2018.
- ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2012-12-07. Retrieved ஏப்ரல் 30, 2014.