எச். வசந்தகுமார்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

எச். வசந்தகுமார் (1950 ஏப்பிரல் 14)என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி ஆவார்.

கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீசுவரம் என்னும் ஊரில் பிறந்த வசந்த் குமார் தொடக்கத்தில் வீ.ஜி.பி நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணி செய்தார். மிகச் சிறிய முதல் பணத்தைக் கொண்டு ஒரு மளிகை கடையைத் தொடங்கி படிப்படியாக முன்னேறி வசந்த் அண்டு கோ என்னும் வணிக நிறுவனத்தின் உரிமையாளர் ஆனார்.[1] இந்நிறுவனம் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 64 கிளைகள் கொண்டுள்ளன. வசந்த் தொலைக்காட்சியை 2008 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தி வருகிறார். வசந்தகுமார் தமிழ் நாடு காங்கிரசு கட்சியின் முகாமையான தலைவர்களில் ஒருவராகவும் நாங்குநேரி தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராகவும் உள்ளார்.இவர்2019 பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [2]

மேற்கோள்[edit]