பாட்டாளி மக்கள் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாமக இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாட்டாளி மக்கள் கட்சி
தலைவர் கோ.க.மணி
தொடக்கம் 1989
தலைமையகம் தைலாபுரம், திண்டிவனம்
கொள்கை சமூகநீதி,சனநாயகம்,சமத்துவம்,மனித நேயம்.
கூட்டணி தேசிய ஜனநாயக கூட்டணி (1998-2004)
ஐக்கிய முற்போக்கு கூட்டணி (2004-2009)
மூன்றாவது அணி (2009-2010)
கட்சிக்கொடி
Pmk flag.jpg

பாட்டாளி மக்கள் கட்சி (பா. ம. க.) தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். 1990களில் டாக்டர் ராமதாஸ் இக்கட்சியைத் தொடங்கினார். இதுவரை, இக்கட்சி தமிழ்நாடு சட்ட மன்றத்திலும், இந்திய நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவை ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது.

சனநாயக முற்போக்கு கூட்டணியில் மார்ச் 26,2009 வரை இருந்தது [1]. 14வது மக்களவையில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரா. வேலு இரயில்வே இணை அமைச்சராக இருந்தார். இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் சுகாதார துறை அமைச்சராக இருந்தார்.

ஜூலை 29, 2010 ஆணையில் இந்திய தேர்தல் ஆணையம் மாநில கட்சிக்கான விதிகளை புதுச்சேரி பாமக பெறாததால் அங்கு பாமக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்துள்ளது. ஆனால் இக்கட்சி சின்னத்தை(மாம்பழம்) இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் என கூறியுள்ளது [2][3]

தமிழகத்தின் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற 13வது சட்டமன்றத்தில் 18 உறுப்பினர்களை கொண்டு இருந்தது. 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 30 தொகுதிகளில் போட்டியிட்டதில் 3 தொகுதிகளில் வெற்றிபெற்றது.

15வது மக்களவைக்கான தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி வைத்த பாமக 7 தொகுதிகளில் போட்டியிட்டது.[4][5]. போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தது. பாட்டாளி மக்கள் கட்சி

  பாட்டாளி மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், அவர்களுக்கு அதிகாரம் பெற்றுத் தருவதற்காகவும் மக்கள் காவலர் மருத்துவர் அய்யா அவர்களால் “பாட்டாளி மக்கள் கட்சி” 16.07.1989 அன்று தொடங்கப்பட்டது. சென்னை கடற்கரை சீரணி அரங்கத்தில் நடைபெற்ற கட்சியின் தொடக்க விழாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழக வரலாற்றில் ஒரு கட்சியின் தொடக்க விழாவில் இவ்வளவு பேர் கலந்து கொண்டது அதுவே முதன்முறையாகும்.
  சமூகநீதி மற்றும் பகுத்தறிவை வலியுறுத்திய தந்தை பெரியார், அரசியல் சட்டத்தை உருவாக்கியதுடன் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய அண்ணல் அம்பேத்கர் மற்றும் சமத்துவத்தையும் பொதுவுடைமையையும் வலியுறுத்திய கார்ல் மார்க்ஸ் ஆகியோர் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை அடையாளங்கள் ஆவர்.


பாட்டாளி மக்கள் கட்சியின் சின்னம் மாம்பழம் ஆகும்.


பா.ம.க. தலைமை நிர்வாகிகள் தலைவர் : திரு. கோ.க. மணி பொதுச் செயலாளர் : திரு. வடிவேல் இராவணன் பொருளாளர் : திரு. அக்பர் அலி சையத்

  1989 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, அடுத்த சில மாதங்களிலேயே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை எதிர்கொண்டது. அத்தேர்தலில் வெற்றிபெறவில்லை என்றாலும், கணிசமான வாக்குகளைப் பெற்று பெறும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  அதன் பின்னர், 1991 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. ஓரு இடத்தில் வெற்றிபெற்றது. 1996 ஆம் ஆண்டில் 4 இடங்களிலும், 2001 ஆம் ஆண்டில் 20 இடங்களிலும், 2006 ஆம் ஆண்டு 18 இடங்களிலும் வெற்றி பெற்றது. 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ம.க. 3 இடங்களைக் கைப்பற்றியது.
  மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை, 1998 ஆம் ஆண்டு தேர்தலில் 5 இடங்களில் போட்டியிட்டு, 4 இடங்களில் வெற்றிபெற்றது. 1999 ஆம் ஆண்டு தேர்தலில் 5 இடங்களிலும், 2004 ஆம் ஆண்டு தேர்தலில், புதுச்சேரி உட்பட 6 இடங்களிலும் பா.ம.க. வெற்றிபெற்றது. 2004 ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  புதுச்சேரியில் 1996 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு இடத்தில் பா.ம.க. வெற்றிபெற்றது. 2006 ஆம் ஆண்டு தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 3 இடங்கள் கிடைத்தன. 2004 மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியை பாட்டாளி மக்கள் கட்சி கைப்பற்றியது.
  பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை 3 முறை மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்துள்ளது. 1998 ஆம் ஆண்டில் பா.ம.க.வைச் சேர்ந்த ஒருவரும், 1999 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அமைச்சரவையில், பா.ம.க.வைச் சேர்ந்த இருவரும் மத்திய அமைச்சர்களாக இருந்தனர். 2004 ஆம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவையில் பா.ம.க. சார்பில் இருவர் இடம்பெற்றிருந்தனர்.


மருத்துவர் ச. இராமதாஸ் (மருத்துவர் அய்யா) நிறுவனர் - பாட்டாளி மக்கள் கட்சி பெயர் : மருத்துவர் ச. இராமதாஸ் வயது : 76 பிறந்த : 25.07.1939 கல்வித் தகுதி : மரு.இ.,அறு.இ., (M.B.B.S.) முகவரி : தைலாபுரம் தோட்டம், வானூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம் ---குடும்ப உறுப்பினர்கள்--- துணைவியார் :திருமதி. சரஸ்வதி அம்மாள் மகள் : திருமதி.ஸ்ரீகாந்தி பரசுராமன் மகன் : மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மகள் : திருமதி. கவிதா ஜெயகணேஷ்

பணிகளும் பிறசேவைகளும்:

குடும்பப் பாரம்பரிய அடிப்படையில் மருத்துவர் அய்யா அவர்கள் ஒரு விவசாயி. மருத்துவக் கல்வி பெற்று தொழில் வகையில் ஒரு சிறந்த மருத்துவராக இருந்தார். ஆனால் எப்பொழுதும் மருத்துவர் அய்யா மனதளவில் ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவே திகழ்ந்து வருகிறார். பொது வாழ்வில் ஈடுபட்டு சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட பாட்டாளி மக்களுக்காக ஒரு அரசியல்வாதியாக முழு நேர மக்கள் பணி ஆற்றிக் கொண்டும் வருகின்றார். தன்னுடைய வாழ்நாளில் 40 ஆண்டுகாலப் பொது வாழ்வில் ஈடுபட்டதிலிருந்து தன் வாழ்நாள் முழுவதும் கட்சியிலோ, அரசு ஆட்சி அதிகாரத்திலோ, சட்டமன்றத்திலோ மற்றும் நாடாளுமன்றத்திலோ எந்த விதமான பதவியையும் வகிக்க மாட்டேன் என்று சூளுரைத்து அதனைக் கடை பிடித்தும் வருகிறார். இந்தியாவிலேயே இப்படிபட்ட “ஒரு தனித்துவமான சிறப்பினைப் பெற்ற தலைவராக மருத்துவர் அய்யாவைத் தவிர வேறு யாரும் இல்லை” என்ற தகுதியோடு மருத்துவர் அய்யா விளங்குகிறார் என்றால் அது மிகை அல்ல.

முழு மது விலக்கிற்காகவும் தமிழக மக்களின் மீது திணிக்கப்படும் மது மற்றும் அதன் கேடுகளில் இருந்து விடுவிக்கவும் கடந்த 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருகிறார்.

வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை என்ற அமைப்பை நிறுவி, அதன் மூலம் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 604 மதுக்கடைகளை மூடச் செய்தவர். இந்த வழக்கில், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுமார் 1,500 மதுக்கடைகளை மதுக்கடைகளை மூடுவது குறித்து உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்கவுள்ளது.

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தனியாக கல்வி வேலை வாய்ப்புகளில் 20 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார்.

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி–1 (UPA-1) அரசின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் (Common Minimum Program) இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு (OBC) 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை செயல் படுத்துவதற்கான செயல் திட்டத்தைச் சேர்ப்பதற்கு மருத்துவர் அய்யா காரணமாக இருந்தார். திருமதி சோனியா காந்தி மற்றும் அப்போதைய பிரதமர் டாக்டர். மன்மோகன்சிங் ஆகியோர் கூட்டிய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் மருத்துவர் அய்யா அவர்களின் கடுமையான அழுத்தத்தின் பயனால் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு (OBC) 27 விழுக்காடு இடஒதிக்கீடு 2007 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

கிராமப்புற மாணவர்கள் தொழிற்கல்வி கற்பதற்குத் தடையாக இருந்த நுழைவுத் தேர்வை, சட்டப்போராட்டத்தின் மூலமாகவும், அறவழிப் போராட்டத்தின் மூலமாகவும் நீக்கச் செய்தவர்.

சமச்சீர் கல்வி என்ற கல்வித் தத்துவத்தை அறிமுகப்படுத்தி, அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி தமிழகத்தில் சமச்சீர் கல்வி கொண்டு வரக் காரணமானவர். பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி கல்வி முறைகளில் உள்ள வேறுபாடுகளைக் களைந்து அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஒரே மாதிரியான கல்விப் பாடத்திட்ட முறையை தரமுள்ளதாக நடை முறைப்படுத்த பாடுபட்டு வருகிறார்.

தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர். இதற்காக தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர்.

தமிழை வளர்ப்பதற்காக பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையை நிறுவியவர்.

தமிழ் இசையை வளர்ப்பதற்காக பொங்கு தமிழ் பண்ணிசை மணிமன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, தமிழ்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தமிழ் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர்.

தமிழ்நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக வாழ்வுரிமை மாநாடுகளை நடத்தியவர்.

இஸ்லாமியர்களின் நலனுக்காக சமூக சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தியவர்.

ஒரே ஆண்டில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தொகுதி மாநாடுகளை நடத்தியவர்.

தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் அம்பேத்கர் சிலைகளைத் திறந்தவர்.

சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்காக பசுமைத் தாயகம் என்றதொரு சிறப்பு வாய்ந்த நிறுவனத்தை உருவாக்கினார். இவ்வாறு சமுதாயம், விவசாயம், கல்வி, சுகாதாரம், சுற்றுச் சூழல், தமிழ்மொழி, கலாச்சாரம், பண்பாடு மற்றும் இசை ஆகியவற்றின் மேம்பாட்டிற்காக 24 பல்வேறு அமைப்புகளைத் தொடங்கியவர்.

பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் நூற்றுக்கணக்கான ஏரிகள் மற்றும் குளங்களை தாமே முன்னின்று தூர் வாரியவர்.

  சமூகநீதி, சமத்துவம், சனநாயகம் ஆகியவற்றை ஏற்படுத்தவும், தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்கவும் போராடுவதையே தமது நோக்கமாகக் கொண்ட மருத்துவர் ச. இராமதாஸ் அய்யா அவர்கள் தமது நோக்கம் நிறைவேறத் தொடர்ந்து பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

மாநிலத்தில் ஆட்சிக்கு வராமலேயே மக்கள் நலனுக்காக பாட்டாளி மக்கள் கட்சி ஆற்றிய பணிகள்

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி–1 (UPA-1) அரசின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் (Common Minimum Program) இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு (OBC) 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை செயல் படுத்துவதற்கான செயல் திட்டத்தைச் சேர்ப்பதற்கு மருத்துவர் அய்யா காரணமாக இருந்தார். திருமதி சோனியா காந்தி மற்றும் அப்போதைய பிரதமர் டாக்டர். மன்மோகன்சிங் ஆகியோர் கூட்டிய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் மருத்துவர் அய்யா அவர்களின் கடுமையான அழுத்தத்தின் பயனால் மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு (OBC) 27 விழுக்காடு இடஒதிக்கீடு 2007 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு (MBC) 20 விழுக்காடு தனி இடஒதுக்கீட்டை கல்வி, வேலை வாய்ப்புகளில் மருத்துவர் அய்யா அவர்கள் பெற்றுத்தந்தது.

கிராமப்புற மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருந்த நுழைவுத் தேர்வு முறையை அகற்ற காரணமாக இருந்தது.

“சமச்சீர் கல்வி” என்ற கோட்பாட்டை அறிமுகப்படுத்தியதுடன் எதிர்ப்பாளர்களின் பல்வேறு நிராகரிப்புகளுக்கிடையில் அதை நிறைவேற்ற உறுதிப்படுத்தியது.

தற்போதைய ஆட்சியில் சமச்சீர் கல்வித் திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி, தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்தது.

கடந்த 34 ஆண்டுகளாக மதுவுக்கு எதிராக இடைவிடாது கடுமையான போராட்டங்களைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்தும் நடத்தித் தமிழக மக்களின் பேராதரவைப் பெற்று வருவது.

மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை 16 மணியிலிருந்து 12 மணி நேரமாக குறைக்க வைத்தது.

உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்த 604 மதுக்கடைகளை மூட வைத்தது.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக தொடர் போராட்டங்களை நடத்தி, அத்திட்டம் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்தது.

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை கொண்டுவரக் காரணமாக இருந்தது.

சேலம் உருக்காலையை ரூ.1500 கோடி செலவில் உலகத்தரத்திற்கு உயர்த்தியதுடன், புதிய குளிரூட்டப்பட்ட உருக்காலையை அமைத்தது.

தமிழ்நாட்டிற்கு 2002 - 2009 வரையிலான 7 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தொடர்வண்டித் துறை திட்டங்களைக் கொண்டு வந்தது.

மேற்கு மாவட்ட மக்களின் நீண்டகாலக் கனவை நிறைவேற்றும் வகையில் சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு தொடர்வண்டிக் கோட்டம் (Railway Division) அமைத்தது.

தமிழகத்தில் உள்ள அனைத்து தொடர்வண்டி பாதைகளையும் அகல தொடர்வண்டி பாதைகளாக்கி, தமிழ்நாட்டில் மீட்டர் கேஜ் பாதைகளே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியது.

இலங்கைப் பிரச்சினைக்காக ஐ.நா. மனித உரிமைப் பேரவை வரை சென்று, இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச போர்க் குற்ற விசாரணை நடத்த வகை செய்தது.

பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சியை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடுத்து நிறுத்தியது.

காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளுக்காக தொடர் போராட்டங்களை நடத்திவருவது.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகளை பாதிக்கும் இயற்கை எரிவாயு குழாய் பாதை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நிறுத்தியது.

விளைநிலங்களை தொழிற்சாலைகளுக்காகக் கையகப்படுத்தும் திட்டங்களை பல இடங்களில் போராட்டம் நடத்தி முறியடித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தது.

தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு வழிகாட்ட பா.ம.க. வெளியிட்ட ஆவணங்கள்

2002-2003 ஆம் நிதி ஆண்டில் தொடங்கி 2015-16 ஆம் நிதி ஆண்டு வரை தொடர்ந்து 14 ஆண்டுகள் நிழல் நிதி நிலை அறிக்கை (மொத்தம் 14 ஆவணங்கள்).

2008-2009 ஆம் நிதி ஆண்டில் தொடங்கி 2015-16 ஆம் நிதி ஆண்டு வரை தொடர்ந்து 7 ஆண்டுகள் வேளாண் நிழல் நிதி நிலை அறிக்கை (மொத்தம் 7 ஆவணங்கள்).

தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த உண்மை அறிக்கை (Factual Report) (18.08.2001).

பன்னிரெண்டாவது நிதிக்குழுவுக்கு பல்வேறு ஆலோசனைகளைத் தெரிவிக்கும் வகையில் 22 பக்கங்கள் கொண்ட செயல்திட்டத்தைத் தயாரித்து வழங்கியது. இந்தச் செயல்திட்டத்தில் இடம் பெற்றிருந்த பல்வேறு அம்சங்களை நிதிக்குழு அதன் இறுதி அறிக்கையில் சேர்த்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் சேர்ப்பதற்கான பல்வேறு திட்டங்களை தனி அறிக்கையாக தயாரித்து 02.02.2007 அன்று மத்திய அரசிடம் வழங்கியது.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி - ஒரு மாற்றுத் திட்டம் (08.09.2007).

தமிழகத்தில் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி - பயனுள்ள மாற்றுத் திட்டம் (25.09.2007).

தமிழகத்தில் இளைஞர்களின் மறுமலர்ச்சி - பயனுள்ள ஓர் அணுகுமுறை (08.10.2007).

2020ஆம் ஆண்டில் தமிழகம் - ஒரு தொலைநோக்குத் திட்டம் (22.10.2007).

சென்னை நகருக்கான மாற்றுப் போக்குவரத்துத் திட்டம்.

தமிழ்நாடு அரசுக்கான மாற்று மதுவிலக்குக் கொள்கை (26.08.2008).

அரசு ஊழியர்களுக்கான ஊதியக் குழு போன்று உழவர்களுக்கான ஊதியக்குழு அமைக்க கோரும் தமிழ்நாட்டின் உழவர்களுக்கான ஒரு கொள்கை அறிக்கை (A Manifesto for Farmers in Tamilnadu) (03.10.2009).

புதிய அரசியல்.... புதிய நம்பிக்கை.

இன்றைய காலத்திற்கு ஏற்ற கல்வி முறை. மருத்துவர் அய்யா அவர்கள் தொடங்கிய அமைப்புகள்

பாட்டாளி மக்கள் கட்சி.

வன்னியர் சங்கம்.

சமூக முன்னேற்ற சங்கம்.

அரசுப் பணியாளர் பேரியக்கம்.

ஊழல் எதிர்ப்பு இயக்கம்.

பசுமைத் தாயகம்.

தமிழ் பாதுகாப்பு இயக்கம்.

தமிழ் இன மான மீட்பு இயக்கம்.

வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை.

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை.

பொங்கு தமிழ் பண்ணிசை மணிமன்றம்.

வன்னியர் கல்வி அறக்கட்டளை.

தமிழக மாணவர் சங்கம்.

தமிழ்நாடு உழவர் பேரியக்கம்.

தமிழ்நாடு படைப்பாளிகள் பேரியக்கம்.

பாட்டாளி மருத்துவர் சங்கம்.

பாட்டாளி இளைஞர் சங்கம்.

பாட்டாளி மகளிர் சங்கம்.

பாட்டாளி தொழிற்சங்கம்.

இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகள் அறக்கட்டளை.

மக்கள் தொலைக்காட்சி.

தமிழ் ஓசை நாளிதழ்.

கனல் மாத இதழ்.

தினப்புரட்சி நாளிதழ்.


மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பா.ம.க வின் முதலமைச்சர் வேட்பாளர்

1) பெயர் : மருத்துவர் அன்புமணி இராமதாஸ் 2) வயது : 46 3) பிறந்த தேதி : 09.10.1968 4) கல்வித் தகுதி : எம்.பி.பி.எஸ்., சென்னை மருத்துவக் கல்லூரி

 • 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மாணவனாகத் தேர்ச்சி.
 • 2003 ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள லண்டன் பொருளாதாரப் பள்ளியில் (London School of Economics - LSE) மேம்பட்ட பொருளாதாரம் (Introductory macroeconomics) படித்தார்.
 • படிக்கும் காலத்தில் கால்பந்து (Foot Ball), தடகளம் (Athletics) உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாநில அளவில் பதக்கம். இறகுப் பந்தாட்டம் (Badminton), டென்னிஸ் (Tennis), ஹாக்கி (Hockey), கைப்பந்து (Volley Ball), கூடைப்பந்து (Basket Ball), கிரிக்கெட் (Cricket) ஆகிய விளையாட்டுகளிலும் பங்கேற்றுள்ளார். மேலும் நாட்டு நலப்பணித்திட்டம்(N.S.S) மற்றும் தேசிய மாணவர் படை(N.C.C) ஆகியவற்றின் தலைமை பொறுப்பிலிருந்துள்ளார்.
 • சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் பொழுது விளையாட்டுச் செயலாளாராகப் பணியாற்றியுள்ளார்.


5)குடும்ப உறுப்பினர்கள் துணைவியார் : திருமதி. செளமியா அன்புமணி மகள்கள் : திருமதி. சம்யுக்தா பிரிதிவன்

 செல்வி. சங்கமித்ரா செளமியா அன்புமணி
 செல்வி. சஞ்சுத்ரா செளமியா அன்புமணி

6) பணிகளும் பிற சேவைகளும்:

 • நல்லாளம் கூட்டுச் சாலை சந்திப்பு கிராமத்தில் மக்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறப்பான மருத்துவ சேவை.
 • பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக 7 ஆண்டுகள் பணியாற்றினார்.
 • 25 லட்சம் மரக்கன்றுகளை நட்டது, 1000 ஏரி மற்றும் குளங்களைத் தூர்வாரியது, 50 தடுப்பணைகளைக் கட்டியது ஆகியவை பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் என்ற முறையில் ஆற்றிய பணிகளில் சிலவாகும்.
 • சுற்றுச் சூழல் பாதிப்புக்கு எதிராகவும், மது மற்றும் புகையின் தீமைகளுக்கு எதிராகவும் எண்ணற்ற போராட்டங்கள்.
 • பசுமைத் தாயகம் அமைப்புக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரப்பூர்வ சிறப்பு ஆலோசனைத் தகுதிக்கான (Special consultative status with United Nations ECOSOC) அங்கீகாரம் பெற்றுத் தந்தார்.
 • பசுமைத் தாயகம் அமைப்பை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் (United Nations Human Rights Council - UNHRC) உறுப்பினராக நியமிக்க வைத்தார்.
 • தமிழ்நாடு இறகுப் பந்தாட்ட சங்கத்தின் தலைவராக (President, Tamilnadu Badminton Association) பதவி வகித்து வருகிறார்.

7) பங்கேற்ற சர்வதேச நிகழ்ச்சிகள்:

 • பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவராக பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். 2000-ஆவது ஆண்டில் ஜெர்மனியின் ஹானோவர் நகரில் நடைபெற்ற சுற்றுச் சூழல் மாநாட்டில் பங்கேற்பு.
 • 2002 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்ற புவி உச்சி (Global Earth Summit 2002) மாநாட்டில் கலந்து கொண்டார்.
 • 2003 ஆம் ஆண்டில் ஜப்பானின் கியோட்டா நகரில் நடைபெற்ற உலக நீர் மாநாட்டில் (World Water Conference) பங்கேற்றார்.
 • 2012 ஆம் ஆண்டில் டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற புவி உச்சி (Global Earth Summit 2012) மாநாட்டில் பங்கேற்பு.
 • 2013 ஆம் ஆண்டில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் (UNHRC) பங்கேற்று இலங்கை அரசு மீது இனப்படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

8) நடுவண் அமைச்சராகப் பணியாற்றியபோது படைத்த சாதனைகள்:

 • 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை நடுவண் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
 • நடுவண் அமைச்சராக இருந்த 5 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான மாநாடுகளுக்குத் தலைமையேற்றும், பங்கேற்றும் உள்ளார்.
 • இந்தியாவில் முதன்முறையாக 108 தேசிய அவசர ஊர்தித் திட்டத்தைத் (108 National Anbulance Service) தொடங்கினார்.
 • தேசிய ஊரக சுகாதார இயக்கத்தைத் (National Rural Health Mission) தொடங்கி அனைத்து கிராமப்புற சுகாதாரத்தில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.
 • நீரிழிவு நோய், இதய நோய்கள் மற்றும் பக்கவாத நோயைக் கட்டுப்படுத்துவதற்கான தேசியத் திட்டம் (National Program for Control of Diabetes, Cardiovascular disease and Stroke) கொண்டு வந்தார்.
 • மருத்துவ நலவழி ஆராய்ச்சித் துறையை (Department of Health Research - DHR) ஏற்படுத்தினார்.
 • அயோடின் சத்து சேர்க்கப்பட்ட உப்பின் (Iodised Salt) பயன்பாட்டைக் கட்டாயமாக்கினார்.
 • பாரம்பரிய அறிவுசார் எண்ணியல் நூலகத்தை (Traditional Knowledge Digital Library) உருவாக்கினார்.
 • தேசியத் தொற்று நோய் கண்காணிப்பு நிறுவனத்தை (National Institute of Communicable Diseases) அமைத்தார்.
 • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தை (Food Safety and Standards Authority of India) ஏற்படுத்தினார்.
 • தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தை (National Institute of Siddha) அமைத்தார்.
 • சென்னையில் தேசிய முதியோர் நல மையத்தை (National Institute of Aging) அமைக்க நடவடிக்கை எடுத்தார்.
 • தானாக செயலிழக்கும் மருந்தேற்றுக்குழல் ஊசியை (Auto disposable syringe) அறிமுகப்படுத்தினார்.
 • இந்திய பொது சுகாதாரத்துறை அறக்கட்டளையை (Public Health Foundation of India) ஏற்படுத்தினார்.
 • புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை தேசிய முக்கியத்துவம் பெற்ற சிறந்த தன்னாட்சி நிறுவனமாக (JIPMER Puducherry Act 2008) மாற்றினார். மேலும் அம்மருத்துவமனையின் மேம்பாட்டுக்காக ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அதன் வளர்ச்சிக்கு வழிவகை செய்தார். இதன் மூலம் இந்தியாவின் தலைசிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக ஜிப்மர் உருவெடுத்துள்ளது.
 • 2006 ஆம் ஆண்டு மே மாதம் 22 முதல் 27 வரை ஒரு வாரத்திற்கு ஜெனீவாவில் 192 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் பங்கேற்ற உலக சுகாதார அவையின் கூட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார்.

9) புகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்:

 • பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை விதித்து சட்டம் (Ban on smoking in Public places) கொண்டு வந்தார். இதன்மூலம் பொது இடங்களில் மக்கள் குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் புகையின் பாதிப்பின்றி நடமாட முடிந்தது.
 • சிகரெட், குட்கா, பீடி உள்ளிட்ட அனைத்து புகையிலைப் பொருட்களின் உறைகளின் மீதும் அவற்றின் தீமைகளை விளக்கும் எச்சரிக்கைப் படங்களை (Pictorial warning) வெளியிடும் திட்டத்தைச் செயல்படுத்தினார்.
 • திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் மற்றும் மது அருந்தும் காட்சிகளின் போது எச்சரிக்கை வாசகங்கள் வெளியிடும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
 • புகையிலைப் பொருட்கள் தொடர்பான விளம்பரங்களுக்குத் தடை விதித்தார்.
 • உணவுப் பொருட்களில் புகையிலை இருக்கக்கூடாது என்ற விதியை கொண்டு வந்தார். அதன்பயனாகவே தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் குட்கா மற்றும் பான்மசாலாவுக்கு தடை விதிக்கப்பட்டது.
 • தேசிய ஆல்கஹால் கொள்கையைக் (National Alcohol Policy) கொண்டு வந்தார்.

10) வென்ற விருதுகள்: சர்வதேச விருதுகள்:

 • அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் லூதர் எல்.டெர்ரி விருது (Luther L. Terry Award).
 • உலக சுகாதார நிறுவனத் தலைவரின் சிறப்பு விருது (World Health Organization (WHO) Director General’s Special Award for Tobacco Control).
 • உலக சுகாதார நிறுவனத் தலைவரின் சிறந்த தலைமைப் பண்புக்கான விருது (World Health Organization (WHO) Director General’s Special Award for Leadership).
 • உலக ரோட்டரி சங்கத்தின் இளம்பிள்ளைவாதம் (Polio) ஒழிப்பு சாதனையாளர் விருது (Rotary International Polio Eradication Champion award) இந்தச் சிறப்பு விருதினை இதற்கு முன் பெற்ற முக்கிய பிரமுகர்கள் பில் கேட்ஸ், பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் கோஃபி அன்னன் போன்ற தலைவர்களாவர்.

தேசிய விருதுகள்:

 • சென்னை ரோட்டரி சங்கத்தின் கெளரவம் தரும் (For the sake of Honour) விருது.
 • இந்தியாவில் இளம்பிள்ளைவாதம் (Polio) ஒழிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்ததற்காக 2014 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருது வழங்கிப் பாராட்டினார்

11) தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்கள்:

 • தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (National Rural Health Mission - NRHM) கீழ் ரூ.15,000 கோடி மதிப்புள்ளத் திட்டங்கள்.
 • சென்னையில் ரூ. 100 கோடியில் மாதர்நலன், மகப்பேறு, மற்றும் தாய் சேய் நல அதி உயர் சிறப்பு மையம் (Institute of Obstetrics and Gynecology & Govt. Hospital for Women and Children).
 • சேலத்தில் ரூ.139 கோடியில் எய்ம்ஸ்க்கு இணையான அதி உயர் சிறப்பு மருத்துவமனை (AIIMS).
 • மதுரையில் ரூ.150 கோடியில் எய்ம்ஸ்க்கு இணையான புதிய அதி உயர் சிறப்பு மருத்துவமனை (AIIMS).
 • சென்னையில் ரூ.250 கோடியில் இரத்த அணுக்கூறு பிரிப்பு மையம் (Plasma Fractionation Centre).
 • சென்னையில் ரூ.50 கோடியில் மாநகர ரத்த வங்கி (Metro Blood Bank).
 • மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையை மண்டல புற்றுநோய் மையமாக (Regional Cancer centre) அறிவித்தது.
 • காஞ்சிபுரத்தில் ரூ.45 கோடியில் மண்டல புற்றுநோய் மையம் (Regional Cancer centre).
 • செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்திப் பூங்கா (Integrated Vaccine Complex).
 • ஸ்டான்லி மருத்துவமனையில் குருத்தணு ஆய்வகம் (Stem cell research centre).
 • தமிழக நெடுஞ்சாலைகளில் மதுரை, தாம்பரம், வேலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 10 இடங்களில் விபத்துக்காய சிகிச்சை மையங்களை (Trauma center) அமைத்தார்.

12) 2004 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.

13) 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திராவிடக்கட்சிகள் கட்டவிழ்த்துவிட்ட பண பலத்தை மீறி, தருமபுரி தொகுதியில் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றார்.

14) பொழுதுபோக்குகள்: 1. இறகுப் பந்தாட்டம் (Badminton).

2. ஸ்கூபா மூழ்கல் (SCUBA Diving).

3. நீருக்குள் நீந்துதல் (Snorkeling).

4. நன்னீர் மற்றும் ஆழ்கடல் மீன் பிடித்தல் (In-land & Deep-sea fishing).

5. மலையேற்றம் (Mount Climbing).

6. மலை பகுதிகளில் நீண்ட தூரப்பயணம் (Trekking).

7. அரை மராத்தான் (Half Marathon).

8. திரைப்படங்கள் பார்த்தல்.

9. இளையராஜா இசை கேட்டல்.

சின்னம்[தொகு]

இக்கட்சி யானை சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. பகுசன் சமாச் கட்சிக்கு தேசிய அரசியல் கட்சி என்று 1997இல் தகுதி உயர்த்தப்பட்டதாலும் யானை சின்னத்தை அது நாடு முழுக்க பயன்படுத்தியதாலும் யானை சின்னம் அதற்கு ஒதுக்கப்பட்டது.[6] பாமக தமிழ்நாடு மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை இழந்ததால் அதன் யானை சின்னம் பறிக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் தகுதி இழக்காததால் அங்கு யானை சின்னத்தை பயன்படுத்திக்கொள்ள தேர்தல் ஆணையம் இசைந்தது.

1998இல் இக்கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. [7] அன்றிலிருந்து மாம்பழம் சின்னத்திலேயே போட்டியிட்டு வருகிறது. விதிகளின் படி மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை தேர்தல் ஆணையம் பறித்து விட்டாலும் 2016 சட்டமன்ற தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட இக்கட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

வாக்குகள், தொகுதிகள்[தொகு]

தமிழ்நாடு[தொகு]

வருடம் பொதுத் தேர்தல் கிடைத்த வாக்குகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்கு சதவீதம்
1989 9வது மக்களவை 1,536,350 0
1991 10வது சட்டசபை 1,452,982 1
1991 10வது மக்களவை 1,269,690 0
1996 11வது சட்டசபை 1,042,333 4
1996 11வது மக்களவை 552,118 0
1998 12வது மக்களவை 1,548,976 4
1999 13வது மக்களவை 2,236,821 5
2001 12வது சட்டசபை 1,557,500 20
2004 14வது மக்களவை 1,927,367 6
2006 13வது சட்டசபை 1,863,749 18
2009 15வது மக்களவை 1,944,619 0
2011 14வது சட்டசபை 1,927,783 3 5.23 %
2016 15வது சட்டசபை 2,300,775 0 5.3 %

புதுச்சேரி[தொகு]

வருடம் பொதுத் தேர்தல் கிடைத்த வாக்குகள் வெற்றி பெற்ற தொகுதிகள்
1989 9வது மக்களவை 25,021 0
1991 8வது சட்டசபை 11,402 0
1991 10வது மக்களவை 13,375 0
1996 9வது சட்டசபை 11,544 1
1996 11வது மக்களவை 19,792 0
1999 13வது மக்களவை 140,920 0
2001 10வது சட்டசபை 36,788 0
2004 14வது மக்களவை 241,653 1
2006 11வது சட்டசபை 23,426 2
2009 15வது மக்களவை 208,619 0

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=PMK+swings+AIADMK+way&artid=HtcJD1dO7X4=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=fyV9T2jIa4A=&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==&SEO=
 2. http://eci.nic.in/eci_main/ElectoralLaws/PoliticalParties.pdf
 3. http://thatstamil.oneindia.in/news/2010/07/31/mdmk-loses-state-party-status-tn-pmk-puducherry.html
 4. http://thatstamil.oneindia.in/news/2009/03/28/tn-jaya-announces-pmks-constituencies.html
 5. http://thatstamil.oneindia.in/in-focus/parliament-election-2009/pmk-candidates.html
 6. "BSP gets recognition as national party". ரி டிப். பார்த்த நாள் 28 மார்ச் 2016.
 7. "PMK allotted ‘mango’ symbol for 2016 polls". த இந்து. பார்த்த நாள் 28 மார்ச் 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்டாளி_மக்கள்_கட்சி&oldid=2479013" இருந்து மீள்விக்கப்பட்டது