எம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தலைவர்சு. திருநாவுக்கரசர்
நிறுவனர்சு. திருநாவுக்கரசர்
கூட்டணிதேஜகூ, 2002 இல் பஜகவுடன் இணைக்கப்பட்டது

எம். ஜி. ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்து வந்தவர்களால் துவக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்தது மேலும் அடல் பிகாரி வாஜ்பாயியின் தலைமையிலான மத்திய அரசாங்கத்தில் பங்கு பெற்றது.  இது சு. திருநாவுக்கரசர் தலைமையில் இயங்கிய கட்சி ஆகும்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001 இல் எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மூன்று வேட்பாளர்களை நிறுத்தியது. அத் தேர்தலில் இந்தக் கட்சி 129 474 வாக்குகளைப் பெற்றது.

2002 ஆம் ஆண்டு இல் எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமானது பாரதீய ஜனதா கட்சியுடன் இணைந்தது.

தேர்தல் வரலாறு[தொகு]

ஆண்டு பொதுத் தேர்தல் பெற்ற வாக்குகள் வென்ற இடங்கள்
1998 12வது நாடாளுமன்றம் 278,324 0
1999 13வது நாடாளுமன்றம் 396,216 1
2001 12வது தமிழ்நாடு சட்டமன்றம் 129,474 2

வெளி இணைப்புகள்[தொகு]