திலகபாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திலகபாமா என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி, கவிஞர், எழுத்தாளர், விமரிசகர் ஆவார்.[1] தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளராக அங்கம் வகித்து வருகின்றார்.[2] இவர் பாரதி இலக்கிய சங்கம் அமைத்து பல இலக்கிய நிகழ்வுகளை நடத்தி வருகிறார். பல்வேறு இடங்களுக்கும், நாடுகளுக்கும் இலக்கிய பேச்சாளராக பயணம் செய்து வருபவர். சிவகாசியில் உள்ள ஒரு மதி ஒருங்கிணைந்த சுகாதார மையத்தின் இயக்குனராக உள்ளார்.

பிறப்பு[தொகு]

இவர் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் பிறந்த இவர் பள்ளிப்படிப்பை அவ்வூரிலேயே முடித்தார். பின்னர் மதுரை பாத்திமா கல்லூரியில், வணிகவியல் படிப்பை படித்தார். இவர் கல்லூரி படிக்கும் காலத்திலேயே, கவிதைகளை எழுத தொடங்கினார். இவர் தற்போது விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் வசித்து வருகிறார். இலக்கிய பயணங்களிலும், அரசியல் பயணங்களின் மூலமாகவும் மக்களை சந்தித்து வருகின்றார். சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் பட்டிவீரன் பட்டி ஊ. பு. அ. சௌந்திரபாண்டியனாரின் வரலாற்று நூல் மிக முக்கிய படைப்பாகும்.

வெளியான நூல்கள்[தொகு]

கவிதை தொகுப்புகள்[தொகு]

 • சூரியனுக்கும் கிழக்கே
 • சூரியாள்
 • சிறகுகளோடு அக்னிப் பூக்களாய்
 • கண்ணாடிப் பாதரட்சைகள்
 • எட்டாவது பிறவி
 • கூர்பச்சையங்கள்
 • கூந்தல் நதிக் கதைகள்
 • கரையாத உப்புப் பெண்
 • திலகபாமா கவிதைகள் (ஒட்டு மொத்த கவிதை தொகுப்பு)
 • திகம்பரசக்கர குருதி

சிறுகதை தொகுப்புகள்[தொகு]

 • நனைந்த நதி
 • மறைவாள் வீச்சு
 • நிசும்பசூதினியும் வேதாளமும்

புதினம்[தொகு]

 • கழுவேற்றப்பட்ட மீன்கள்
 • தாருகாவனம்
 • சுயமரியாதை மண்ணின் தீராத வாசம்( ஊ.பு.அ.சௌந்திரபாண்டியனார் வரலாறு)

கட்டுரைத் தொகுப்புகள்[தொகு]

 • திசைகளின் தரிசனம் (பயணக் கட்டுரைகள்)
 • இருப்பின் தர்க்கத்தில்
 • வெளிச்சத்தை சிறைப்படுத்திய பதினான்கு நாட்கள்( தன் அனுபவம்
 • நதியும் நதி சார்ந்த கொள்ளையும்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திலகபாமா&oldid=2981579" இருந்து மீள்விக்கப்பட்டது