திலகபாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திலகபாமா
பிறப்புதிலகபாமா
மே 20, 1971
பட்டிவீரன்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்
இருப்பிடம்சிவகாசி, விருதுநகர் மாவட்டம்
தேசியம்இந்தியர்
கல்விஇளநிலை வணிகவியல் (பி.காம்)
பணிநிருவாக இயக்குநர்
பணியகம்மதி ஒருங்கிணைந்த சுகாதார மையம், சிவகாசி.
அறியப்படுவதுகவிஞர்,
எழுத்தாளர்,
அரசியல்வாதி
சமயம்இந்து
பெற்றோர்என்.ஆர். பார்த்தசாரதி (தந்தை)
சசிரேகா (தாய்)
வாழ்க்கைத்
துணை
மருத்துவர் க. மகேந்திரசேகர்
பிள்ளைகள்1. மருத்துவர் ம. நிதர்ஷ பிரகாஷ் (மகன்)
2. மருத்துவர் ம. கோகுல் பிரகாஷ் (மகன்)


திலகபாமா என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி, கவிஞர், எழுத்தாளர், விமரிசகர் ஆவார்.[1] தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளராக அங்கம் வகித்து வருகின்றார்.[2] இவர் பாரதி இலக்கிய சங்கம் அமைத்து பல இலக்கிய நிகழ்வுகளை நடத்தி வருகிறார். பல்வேறு இடங்களுக்கும், நாடுகளுக்கும் இலக்கிய பேச்சாளராக பயணம் செய்து வருபவர். சிவகாசியில் உள்ள “மதி ஒருங்கிணைந்த சுகாதார மைய”த்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

பிறப்பு[தொகு]

இவர் திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் பிறந்த இவர் பள்ளிப்படிப்பை அவ்வூரிலேயே முடித்தார். பின்னர் மதுரை பாத்திமா கல்லூரியில், வணிகவியல் படிப்பை படித்தார். இவர் கல்லூரி படிக்கும் காலத்திலேயே, கவிதைகளை எழுத தொடங்கினார். இவர் தற்போது விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் வசித்து வருகிறார். இலக்கியம் மற்றும் அரசியல் பயணங்களின் மூலமாக மக்களைச் சந்தித்து வருகின்றார். சுயமரியாதை இயக்கத்தின் தலைவர் பட்டிவீரன் பட்டி ஊ. பு. அ. சௌந்திரபாண்டியனாரின் வரலாற்று நூல் மிக முக்கிய படைப்பாகும்.

வெளியான நூல்கள்[தொகு]

கவிதை தொகுப்புகள்[தொகு]

  • சூரியனுக்கும் கிழக்கே
  • சூரியாள்
  • சிறகுகளோடு அக்னிப் பூக்களாய்
  • கண்ணாடிப் பாதரட்சைகள்
  • எட்டாவது பிறவி
  • கூர்பச்சையங்கள்
  • கூந்தல் நதிக் கதைகள்
  • கரையாத உப்புப் பெண்
  • திலகபாமா கவிதைகள் (ஒட்டு மொத்த கவிதை தொகுப்பு)
  • திகம்பரசக்கர குருதி

சிறுகதை தொகுப்புகள்[தொகு]

  • நனைந்த நதி
  • மறைவாள் வீச்சு
  • நிசும்பசூதினியும் வேதாளமும்

புதினம்[தொகு]

  • கழுவேற்றப்பட்ட மீன்கள்
  • தாருகாவனம்
  • சுயமரியாதை மண்ணின் தீராத வாசம்( ஊ.பு.அ.சௌந்திரபாண்டியனார் வரலாறு)

கட்டுரைத் தொகுப்புகள்[தொகு]

  • திசைகளின் தரிசனம் (பயணக் கட்டுரைகள்)
  • இருப்பின் தர்க்கத்தில்
  • வெளிச்சத்தை சிறைப்படுத்திய பதினான்கு நாட்கள்( தன் அனுபவம்
  • நதியும் நதி சார்ந்த கொள்ளையும்

சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்[தொகு]

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவர், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார். [3]. இத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் இ. பெரியசாமி வெற்றி பெற்றார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "புத்தக வெளியீட்டு விழா". தினமலர் (செப் 16, 2014)
  2. "`இந்தக் கூட்டணி தொடராது!' - பா.ம.க மாநிலப் பொருளாளர் திலகபாமா ஓப்பன் டாக்". விகடன் (பிப் 22, 2019)
  3. ஆத்தூர் தொகுதியில் பிரச்சாரத்தின்போது பாமக, திமுகவினரிடையே வாக்குவாதம் - தி இந்து தமிழ்திசை செய்தி
  4. ஆத்தூர் – திமுகவின் ஐ.பெரியசாமி சாதனை வெற்றி!

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திலகபாமா&oldid=3157323" இலிருந்து மீள்விக்கப்பட்டது