தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006

← 2001 மே 8, 2006 2011 →

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள்
  First party Second party
  Flag DMK.svg Flag of AIADMK.svg
தலைவர் மு. கருணாநிதி ஜெ. ஜெயலலிதா
கட்சி திமுக அதிமுக
கூட்டணி திமுக அதிமுக
தலைவரின் தொகுதி சேப்பாக்கம் ஆண்டிப்பட்டி
வென்ற தொகுதிகள் 163 69
மாற்றம் +126 -127
மொத்த வாக்குகள் 14,762,647 13,166,445
விழுக்காடு 44.75% 39.91%

முந்தைய தமிழ்நாட்டு முதல்வர்

ஜெ. ஜெயலலிதா
அதிமுக

தமிழ்நாட்டு முதல்வர்

மு. கருணாநிதி
திமுக

தமிழ் நாடு வரைபடம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி மே 8, 2006 அன்று தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006 நடைபெற்றது. இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மொத்த இடங்களான 234 தொகுதிகளில் 163 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவளிக்க தொடர்ந்து திமுக அரசு மே 13-ம் தேதி மு. கருணாநிதி அவர்கள் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றார்.

பின்புலம்[தொகு]

 • இத்தேர்தலில் விஜயகாந்த் அவர்களின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சி முதல் முறையாக போட்டியிட்டது. தனது கட்சியின் வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் 20% அதிகமான வாக்குகளையும், 8 தொகுதிகளில் 15% லிருந்து 20% வரையான வாக்குகளையும், 33 தொகுதிகளில் 10% லிருந்து 15% வரையான வாக்குகளையும், 48 தொகுதிகளில் 7% லிருந்து 10% வரையான வாக்குகளையும் பெற்றனர்.
 • திமுக தனது தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு அளவுக்கு அதிகமான தொகுதிகளை கொடுத்ததால். திமுக வெற்றி பெற வேண்டிய இடங்களில் தனது கூட்டணி கட்சிகளுக்கு அளித்ததால். அதிக பெரும்பாண்மை கிடைக்காத நிலையில் இரட்டை இலக்கமாக 96 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள போதும் அறுதிபெரும்பாண்மையை நிருபிக்க தனது கூட்டணியில் இருந்த காங்கிரஸ், பாமக, சிபிஐ மற்றும் சிபிஎம். முதலிய கட்சிகள் கூட்டணியில் இருந்து ஆதரவு அளித்ததால். அக்கூட்டணி கட்சியில் இருந்து 30 அமைச்சர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பாண்மையை பெற்று திமுக தலைவர் மு. கருணாநிதி அவர்கள் தமிழக முதலமைச்சராக 2006-மே13-ம் தேதி பொறுப்பேற்றார்.[2]

தேர்தல் முடிவுகள்[தொகு]

2006 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்[1]
கூட்டணி கட்சி போட்டியிட்ட
தொகுதிகள்
வென்ற
தொகுதிகள்
வைப்புத் தொகை
இழப்பு
வைப்புத் தொகை
இழக்காத,
வெற்றி பெற்ற
தொகுதிகளில்

வாக்கு சதவீதம்
போட்டியிட்ட அனைத்து
தொகுதிகளில் மொத்த

வாக்கு சதவீதம்
ஜனநாயக
முற்போக்குக் கூட்டணி
– 163
திராவிட முன்னேற்றக் கழகம் 132 96 0 26.46 45.99
இந்திய தேசிய காங்கிரஸ் 48 34 0 8.38 43.50
பாட்டாளி மக்கள் கட்சி 31 18 0 5.65 43.43
இந்திய பொதுவுடமைக் கட்சி (CPI) 10 6 0 1.61 40.35
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) (சிபிஎம்) 13 9 0 2.65 42.65
ஜனநாயக மக்கள் கூட்டணி-69 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 188 61 3 32.64 40.81
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 35 6 0 5.98 37.70
விடுதலைச் சிறுத்தைகள் 9 2 0 1.29 36.09
தனித்துப்
போட்டியிட்ட
கட்சிகள்
மற்றும் சுயேச்சைகள்
தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் 232 1 223 8.38 8.45
சுயேச்சை 1222 1 1217
பிற 2

தகவல்: http://www.bbc.co.uk/tamil/news/story/2006/05/060511_tnelection.shtml

போட்டியிட்ட கட்சிகள்[தொகு]

இவற்றையும் பார்க்க: பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள்

முக்கிய விடயங்கள்[தொகு]

 • ஆளும் அதிமுக கட்சியில் தலைவி ஜெயலலிதா மற்றும் அக்கட்சியில் அமைச்சர்கள் செய்த அரசாட்சி ஊழல்
 • அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்த பல திட்டங்கள் மக்களுக்கு எதிராகவும், கடுமையாகவும் இருந்ததாலும்.
 • அதைவிட ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கால் சிறை சென்ற நிகழ்வுகள் மக்களிடையே பெரும் எதிர்ப்பு நிலையை உருவாக்கியது.
 • அதே போல் அதிமுக கட்சியின் தலைமையும் அக்கட்சியின் அமைச்சர்கள் அனைவரும் சர்வதிகார புடைப்புடன் இருந்ததால். மக்களிடையே அதிக எதிர்ப்பு அலைகளை உருவாக்கி இருந்தது.
 • மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்தல்
 • லாட்டரி டிக்கெட் தடை செய்யப்பட்டது
 • ஆழிப் பேரலை, அடைமழை-வெள்ளப்பெருக்கு நிவாரண பிரச்சினைகள்
 • குடிநீர் பிரச்சினை
 • சூழல் மாசுறல்
 • ஏழ்மை நிவாராண மத்திய வேலைத்திட்டத்தில் தமிழ்நாட்டு தேவைகள் நிறைவேற்றப்படவில்லை
 • மத்திய மாநில அரசு உறவு பிரச்சினைகள்
 • மனித உரிமை பிரச்சினைகள்: வீரப்பன் திட்டம் இட்ட கொலை
 • சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்
 • உழவர் பிரச்சினைகள்?
 • அரசு ஊழியர்கள் வேலை நீக்கம்
 • மதம் மாறும் தடை சட்டம்
 • சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் துணை நிறுவனமான சுமங்கலி கம்பிவழி தொலைக்காட்சி நிறுவனம் (Sumangali Cable Vision) அரசுடைமையாக்கம்
 • தமிழ், தமிழ்வழிக் கல்வி
 • திமுக-காங்கிரசு கூட்டணியால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்/தமீழீழ மக்களுக்கும் ஆதரவுக்கு எதிர்ப்பு
 • இந்துவாதம்

வெளி இணைப்புகள்[தொகு]

 1. 2006 to the Legislative Assembly of TAMILNADU