இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Indian Union Muslim League (IUML)
இந்திய ஒன்றிய இஸ்லாமிய கூட்டிணைவு
தலைவர் இ.அகமது
செயலாளர் நாயகம் கே. எம். காதர் மொகிதீன்
நிறுவனர் நவாப் சலீம் முல்லாகான்
மக்களவைத் தலைவர் இ.அகமது
மாநிலங்களவைத் தலைவர் அப்துல் வஹாப்
தொடக்கம் 10 மார்ச்சு 1948 (1948-03-10) (68 ஆண்டுகளுக்கு முன்னர்)
தலைமையகம் மரைக்காயர் லெப்பை தெரு,சென்னை.
செய்தி ஏடு மணிச்சுடர்,Times of league
இளைஞர் அமைப்பு முசுலிம் இளையோர் லீக்
பெண்கள் அமைப்பு முசுலிம் பெண்கள் லீக்
அரசியல் நிலைப்பாடு வலது
இ.தே.ஆ நிலை மாநில கட்சி [1]
கூட்டணி ஐக்கிய ஜனநாயக முன்னணி
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
2 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
1 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
19 / 374
(கேரளா - (18 )&தமிழ்நாடு -(1 ))
தேர்தல் சின்னம்
IUML Election Symbol- ஏணி
இணையதளம்
indianunionmuslimleague.in

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (Indian Union Muslim League) இந்தியாவின் முஸ்லிம் தேசியவாத அரசியல் கட்சி. இக்கட்சி வடக்கு மற்றும் தெற்கு கேரளாவின் பகுதிகளில் செல்வாக்கு பெற்றுள்ள கட்சியாகும். இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்காக 1906-ல் நவாப் சலீம் முல்லாகான் "அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்'கை ஆரம்பித்தார். அவருக்கு பின்னர் முகமது அலி ஜின்னா , அதனை நடத்தி வந்தார். பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின், இதன் தலைவரானார் காயிதே மில்லத்.

சுதந்திர இந்தியாவில்[தொகு]

இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குப் போகாமல் இந்தியாவில் தங்கிவிட்டதால், அவர்களுக்காக கட்சி பெயரில் இருந்த "அகில' என்பதை நீக்கிவிட்டு 1949-ல் "இந்திய யூனியன் முஸ்லிம் லீக்" என்று மாற்றினார் காயிதே மில்லத். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள ராஜாஜி ஹாலில் நடந்தது., பெரும்பாலும் இசுலாமியர்கள் பங்கு வகிக்கும் இந்திய அரசியல் கட்சியாகும். தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் அதிக முனைப்புடன் செயல்படுகிறது.

தலைவர்கள்[தொகு]

காயிதே மில்லத்துக்கு பின்னர் இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் அகில இந்தியத் தலைவராக இப்ராஹிம் சுலைமான் சேட், பனாத்வாலா ஆகியோர் பணியாற்றினர். தற்போது முன்னாள் மத்திய இரயில்வே துறை இணை அமைச்சர் ஈ.அகமது அகில இந்தியத் தலைவராக உள்ளார்.

தமிழகத்தில் அப்துல்சமது அப்துல் லத்தீப் ஆகியோர் பணியாற்றினர். தற்போது கே. எம். காதர் மொகிதீன் தமிழக தலைவராக உள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016[தொகு]

2016 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து வாணியம்பாடி, கடையநல்லூர், விழுப்புரம்,பூம்புகார், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது.[2] இதில் கடையநல்லூரில் முகமது அபுபக்கர் வெற்றிபெற்று இக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்குகள் வாக்கு %
5 1 313808 0.7 % .[4]

கேரள சட்டமன்றத் தேர்தல், 2016[தொகு]

2016,கேரளா சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் கூட்டணி அமைத்து 24 தொகுதிகளில் போட்டியிட்டது.இதில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

போட்டியிட்ட தொகுதிகள் வெற்றி பெற்ற தொகுதிகள் வாக்குகள் வாக்கு %
24 18 1496864 7.4 % .[5]

ஆதாரம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013". India: Election Commission of India (2013). பார்த்த நாள் 9 May 2013.
  2. "வாணியம்பாடி, கடையநல்லூர், விழுப்புரம், பூம்புகார், மணப்பாறை..இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொகுதிகள்". தட்சு தமிழ். பார்த்த நாள் 8 ஏப்ரல் 2016.
  3. http://eciresults.nic.in/ConstituencywiseS22221.htm?ac=221
  4. "GENERAL ELECTION TO LEGISLATIVE ASSEMBLY TRENDS & RESULT 2016". ELECTION COMMISSION OF INDIA (19 மே 2016). பார்த்த நாள் 19 மே 2016.
  5. "GENERAL ELECTION TO LEGISLATIVE ASSEMBLY TRENDS & RESULT 2016". ELECTION COMMISSION OF INDIA (19 மே 2016). பார்த்த நாள் 19 மே 2016.