சிறைச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிறைச்சாலை (Prison) என்பது குற்றம் சுமத்தப்பட்டவரையும் குற்றவாளிகளையும் அடைத்து வைக்கும் இடமாகும். இங்கு அரசு சட்ட விதிகளின்படி இவர்கள் தடுத்து வைக்கப்படுவர். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவ[1][2] உதவி, உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும். குற்றவாளிகள் தங்களது குற்றத்திற்கான தண்டனையாக சமூகத்திலிருந்து பிரித்து வைக்கும் நோக்குடன் இங்கு தடுத்து வைக்கப்படுவர். சமூகத்தில் குற்றவாளிக்கு உள்ள அந்தஸ்தைப் பொருத்து, சட்ட விதிகளுக்கு உட்பட்டு தேவையான வசதிகள் வழங்கப்படும். அனுமதியின் பேரிலும், நிர்ணயிக்கப்பட்ட நாட்களிலும் சிறைச்சாலையிலுள்ள கைதிகளை அவர்களின் உறவினர்கள் சந்திக்கலாம். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் சிறப்பு அனுமதியின் பேரில் குறுகிய காலத்திற்கு வெளியே வரலாம்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறைச்சாலை&oldid=3374605" இருந்து மீள்விக்கப்பட்டது