வாக்குச்சாவடியைக் கைப்பற்றுதல்
வாக்குச்சாவடி கைப்பற்றுதல் (Booth capturing) என்பது இந்தியா மற்றும் சில நாடுகளில் செய்யப்படும் ஒரு தேர்தல் முறைகேடாகும், தங்கள் கட்சி தேர்தலில் எவ்வாறாயினும் வெற்றிபெறவேண்டும் என்ற எண்ணத்தில் கட்சி விசுவாசிகள் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி வாக்காளர்களுக்குப்பதில் தாங்களே தங்கள் கட்சிக்கு வாக்களிப்பது ஆகும்.
போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரின் முகவர்கள் வாக்குச் சாவடியில் இருப்பது என்பது பொதுவான விதி. ஆனால் பல பகுதிகளில் அவர்கள் அச்சுறுத்தப்பட்டு, தாக்கப்படுவதன் விளைவாக அவர்கள் வாக்குச் சாவடி வளாகத்தை விட்டு வெளியேற்றப்படுகின்றனர், அல்லது பணத்தை வாங்கிக்கொண்டு முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்துவிடுகின்றனர். தேர்தலின்போது சில பகுதிகளில் வாக்காளர்கள், குண்டர்களைக் கொண்டு அச்சுறுத்தி வாக்களிக்கவிடாமல் தடுக்கப்படுகின்றனர். இதனால் பல வாக்காளர்கள் வாக்களிக்க வராமல் இருந்துவிடுகின்றனர். எனவே தேர்தல் ஆணையம் இந்த நிலைமையை மாற்ற இன்னும் தீவிரமாக செயல்படவேண்டிய நிலையில் உள்ளது.
இந்தியாவில் சாவடியைக் கைப்பற்றிய முதல் உதாரணமானது 1957 இல் நடந்த பொதுத்தேர்தலின்போது . பேகூசராய் மாவட்டத்தின் மதிஹானீ சட்டமன்றத் தொகுதியில் உள்ள ரச்சியார் என்ற பகுதியில் நடந்ததாகப் பதிவு செய்யப்பட்டது என்று நம்பப்படுகிறது.[1][2][3][4] கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் எண்ணிக்கை பெருகிய போது 1970 களின் பிற்பகுதி மற்றும் 1980 களில் இதுகுறித்த செய்திகள் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றுப் பயன்பாட்டிற்கு வந்தன.
1989 இல், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 இல் சாவடியைக் கைப்பற்றுவது என்பது தண்டனைக்குறிய குற்றங்களில் ஒன்றாகச் சேர்த்துத் திருத்தப்பட்டது. இந்தியாவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கியபோது, ஒவ்வொருவரும் வாக்களிக்கும்போது நடக்கும் வாக்கு வாக்குப்பதிவு நடைமுறைகளில் ஏற்படும் நேர இடைவெளியைப் பயன்படுத்திக்கொள்ளும் விதமாக ஒரு வாக்கை பதிவுசெய்த பின்னர் ஐந்து நிமிட இடைவெளிக்குப்பிறகே மற்றொரு வாக்களிக்கைப் பதிவுசெய்ய இயலுமாறு வடிவமைத்தனர். இதனால் வாக்குப் பெட்டியில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வாக்குகளைப் போடுவதுபோல இதில் செய்ய இயலாதவாறு பாதுகாக்கப்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவத்தின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வாக்குச்சாவடி அதிகாரி முடக்குவதற்கு ஏதுவாக அவரிடம் ஒரு பொத்தான் இருக்கும். இருந்தபோதிலும் இந்தியாவில் வாக்குச்சாவடியைக் கைப்பற்றுதல் என்பது ஓரளவுக்குத் தொடரவே செய்கிறது என்ற புகார் கட்சிகளால் எழுப்பப்படுகிறது.
இதையும் காண்க
[தொகு]நூற்பட்டியல்
[தொகு]- Nedumpara, Jose (2004). Political Economy and Class Contradictions: A Study. New Delhi: Anmol.
- Omvedt, Gail (1993). Reinventing Revolution: New Social Movements and the Socialist Tradition in India. Armonk: M.E. Sharpe.
- (2005). "Poll Booth Rerun Infamy in Churulia." The Statesman (India). September 29.
- Shakder, S. L. (1992). The Law and Practice of Elections in India. Mumbai: National Publishing House.
- Singh, Bhim (2002). Murder of Democracy in Jammu and Kashmir. New Delhi: Amand Niketan.