உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024

← 2019 19 ஏப்ரல் 2024 2029 →

மக்களவைக்கான 39 இடங்கள்
வாக்களித்தோர்69.72%(2.72%)
 
தலைவர் மு. க. ஸ்டாலின் எடப்பாடி க. பழனிசாமி
கட்சி திமுக அஇஅதிமுக
கூட்டணி இந்தியா கூட்டணி அஇஅதிமுக கூட்டணி
முந்தைய
தேர்தல்
53.15%
39 இடங்கள்
30.56%
0 இடம்

 
தலைவர் கு. அண்ணாமலை சீமான்
கட்சி பா.ஜ.க நாம் தமிழர் கட்சி
கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி தனித்துப் போட்டி
முந்தைய
தேர்தல்
3.66%
0 இடம்
3.89%
0 இடம்


இந்தியாவின் 18 ஆவது மக்களவைக்கான தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 அன்று நடந்தது.[1] இத்தேர்தல் முடிவுகள் இந்தியாவின் பிற பகுதிகளிலும் தேர்தல் முடிவுற்ற பின்னர் சூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் வெளியிடப்பட்டது.[2]இதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றது.

பின்புலம்

[தொகு]

18 சூலை 2023 அன்று உருவாக்கப்பட்ட இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணியில் திமுக அங்கம் வகிக்கிறது. 25 செப்டம்பர் 2023 அன்று, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அதிமுக அதிகாரப்பூர்வமாக விலகியது. அதிமுக புதிய கூட்டணியை உருவாக்கி வழிநடத்தும் என அறிவிக்கப்பட்டது.[3][4][5]

தேர்தல் அட்டவணை

[தொகு]
தேதி நிகழ்வு
20 மார்ச் 2024 மனுத்தாக்கல் ஆரம்பம்
27 மார்ச் 2024 மனுத்தாக்கல் முடிவு
28 மார்ச் 2024 வேட்புமனு ஆய்வு ஆரம்பம்
30 மார்ச் 2024 வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்
19 ஏப்ரல் 2024 வாக்குப்பதிவு
04 ஜூன் 2024 வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு

கட்சிகளும் கூட்டணிகளும்

[தொகு]

திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்தது.[6] இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் இந்த நாடாளுமன்றத் தேர்தலில், இராமநாதபுரம் தொகுதியில்‌ போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது. இக்கட்சி ஏணி சின்னத்தில் போட்டியிடும். இராமநாதபுரத்தில் மீண்டும் நவாஸ்கனி போட்டியிடுவார் என்று இந்தியன் ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்தார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்.[7][8] இந்தியப் பொதுவுடமைக் கட்சி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) இரண்டுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என அக்கட்சி பொதுச்செயலாளர்கள் தெரிவித்தனர்.[9] தி.மு.க. - விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே தொகுதி பங்கீடு இறுதியாகியது. அதன்படி, தி. மு. க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு விழுப்பும் மற்றும் சிதம்பரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.[10][11] திமுக - மதிமுக தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்பட்டு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மக்களவை தேர்தலில் போட்டியிட மதிமுகவுக்கு ஒரு மக்களவை தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது என்றும் தொகுதி பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் கூறினார். தனிச்சின்னத்தில் தான் மதிமுக போட்டியிடும் என்றும் கூறினார். இதன் பின்னர் மதிமுக திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டது.[12] திமுக கூட்டணியில் காங்கிரசு தமிழகத்தில் ஒன்பது மக்களவைத் தொகுதிகளிலும் புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் என மொத்தம் 10 (பத்து) தொகுதிகளில் போட்டியிடும் என முடிவெடுக்கப்பட்டது.[13]இந்திய பொதுவுடைமை கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், நாகை, திருப்பூர் தொகுதிகளில் அந்தக் கட்சி போட்டியிட இருப்பதாக அறிவித்தது. இதேபோல் இந்தியப் பொதுவுடைமை (மார்க்சியம்) கட்சிக்கும் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதிகளை திமுக ஒதுக்கியது.[14] [15] திமுக அணியில் காங்கிரசு கட்சிக்கு திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கரூர், விருதுநகர் மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகளை திமுக ஒதுக்கியது.[16] காங்கிரசு கடந்த தேர்தலில் திருவள்ளூர், ஆரணி, திருச்சி, கரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, விருதுநகர், கன்னியாகுமரி, தேனி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டது. தற்போது அந்த கட்சிக்கு ஆரணி, திருச்சி, தேனி ஆகிய தொகுதிகளுக்கு பதிலாக கடலூர், மயிலாடுதுறை, நெல்லையை திமுக ஒதுக்கியது.[17] திமுக கூட்டணியில் திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வைகோ போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.[18] திமுக கூட்டணியில் இந்திய பொதுவுடமைக் கட்சி சார்பில் திருப்பூர் தொகுதியில் கே. சுப்பராயனும் நாகப்பட்டினம் தொகுதியில் வை. செல்வராசும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.[19]

கட்சி சின்னம் தலைவர் தொகுதி பங்கீடு
திராவிட முன்னேற்றக் கழகம் திமுக மு. க. ஸ்டாலின் 21
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கொமதேக ஈ. ஆர். ஈஸ்வரன் 1
இந்திய தேசிய காங்கிரசு இதேகா கு. செல்வப்பெருந்தகை 9
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி சிபிஐ இரா. முத்தரசன் 2
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) சிபிஎம் கே. பாலகிருஷ்ணன் 2
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விசிக தொல். திருமாவளவன் 2
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மதிமுக வைகோ 1
இந்திய யூனியன் முசுலீம் லீக் இயூமுலீ கே. எம். காதர் மொகிதீன் 1

22 சனவரி 2024 அன்று, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அதிமுக அமைத்தது.[20][21] அதிமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இவை திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் என அறிவிக்கப்பட்டது.[22]

கட்சி சின்னம் தலைவர் தொகுதி பங்கீடு
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அஇஅதிமுக எடப்பாடி க. பழனிசாமி 32
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி எஸ்.டி.பி.ஐ முகம்மது முபாரக் 1
புதிய தமிழகம் பு.த க. கிருஷ்ணசாமி 1
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் 5
கட்சி சின்னம் தலைவர் தொகுதி பங்கீடு
பாரதிய ஜனதா கட்சி பாஜக கு. அண்ணாமலை 19
இந்திய ஜனநாயகக் கட்சி இஜக பச்சமுத்து 1
புதிய நீதிக் கட்சி புநீக ஏ. சி. சண்முகம் 1
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தமமுக ஜான் பாண்டியன் 1
இந்திய மக்கள் கல்வி முன்னனேற்றக் கழகம் இமகமுக தி. தேவநாதன் யாதவ் 1
பாட்டாளி மக்கள் கட்சி பாமக அன்புமணி ராமதாஸ் 10
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அமமுக டி. டி. வி. தினகரன் 2
தமிழ் மாநில காங்கிரசு தமாகா ஜி. கே. வாசன் 3
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு அதொஉமீகு ஓ. பன்னீர்செல்வம் 1

பாஜக கூட்டணியில் ஐ.ஜே.கே கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே போட்டியிட இருப்பதாக பாரிவேந்தர் பேட்டியளித்தார்.[23] மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பதற்காக பாஜக - பாமக இடையிலான ஒப்பந்தம் கையெழுத்தானது[24]

தனித்து தேர்தல் களத்தில் நிற்கும் கட்சி

[தொகு]
  • நாம் தமிழர் கட்சி, கன்னியாகுமரி, தென்சென்னை, திருநெல்வேலிக்கு வேட்பாளர்களை அறிவித்தது.[25] [26] [27][28]

நாம் தமிழர் 2019 முதல் பயன்படுத்தி வரும் விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் பாரதிய பிரஜா ஆகியதா என்ற கர்நாடகா கட்சிக்கு ஒதுக்கியது.[29][30] [31] இதனால் விவசாயி சின்னத்தை இக்கட்சி இழந்துள்ளது. முதன் முதல் இரட்டை மெழுகுவர்த்தியில் போட்டியிட்டது இக்கட்சி, உள்ளாட்சி தேர்தல் உட்பட கடைசி ஆறு தேர்தல்களில் விவசாய சின்னத்தில் போட்டியிட்டது.

கட்சி சின்னம் தலைவர்
நாம் தமிழர் கட்சி நாதக சீமான்

கூட்டணிகள் / கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்

[தொகு]

இந்தியா கூட்டணி

[தொகு]
கட்சி தொகுதிப் பங்கீடு போட்டியிடும் தொகுதி(கள்)
திமுக 21 வட சென்னை
தென் சென்னை
மத்திய சென்னை
ஸ்ரீபெரும்புதூர்
காஞ்சிபுரம்
அரக்கோணம்
வேலூர்
தருமபுரி
திருவண்ணாமலை
ஆரணி
கள்ளக்குறிச்சி
சேலம்
ஈரோடு
நீலகிரி
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
பெரம்பலூர்
தஞ்சாவூர்
தேனி
தூத்துக்குடி
தென்காசி
இந்திய தேசிய காங்கிரசு 9 திருவள்ளூர்
கிருஷ்ணகிரி
கரூர்
கடலூர்
மயிலாடுதுறை
சிவகங்கை
விருதுநகர்
திருநெல்வேலி
கன்னியாகுமரி
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 2 திண்டுக்கல்
மதுரை
இந்திய பொதுவுடமைக் கட்சி 2 நாகப்பட்டினம்
திருப்பூர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2 சிதம்பரம்
விழுப்புரம்
மதிமுக 1 திருச்சிராப்பள்ளி
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1 நாமக்கல்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 ராமநாதபுரம்

அதிமுக கூட்டணி

[தொகு]
கட்சி தொகுதிப் பங்கீடு போட்டியிடும் தொகுதி(கள்)
அதிமுக 32 வட சென்னை
தென் சென்னை
காஞ்சிபுரம்
அரக்கோணம்
கிருஷ்ணகிரி
ஆரணி
விழுப்புரம்
சேலம்
நாமக்கல்
ஈரோடு
கரூர்
சிதம்பரம்
நாகை
மதுரை
தேனி
ராமநாதபுரம்
தேமுதிக 5 திருவள்ளூர்
மத்திய சென்னை
கடலூர்
தஞ்சாவூர்
விருதுநகர்
புதிய தமிழகம் 1 தென்காசி
இந்திய சமூக ஜனநாயகக் கட்சி 1 திண்டுக்கல்

தேசிய ஜனநாயகக் கூட்டணி

[தொகு]
கட்சி தொகுதிப் பங்கீடு போட்டியிடும் தொகுதி(கள்)
பாஜக 19 திருவள்ளூர்
வட சென்னை
தென் சென்னை
மத்திய சென்னை
கிருஷ்ணகிரி
திருவண்ணாமலை
நாமக்கல்
நீலகிரி
திருப்பூர்
நாகப்பட்டினம்
பொள்ளாச்சி
கோயம்புத்தூர்
கரூர்
தஞ்சாவூர்
சிதம்பரம்
மதுரை
விருதுநகர்
திருநெல்வேலி
கன்னியாகுமரி
பாமக 10 திண்டுக்கல்
அரக்கோணம்
ஆரணி
கடலூர்
மயிலாடுதுறை
கள்ளக்குறிச்சி
தருமபுரி
சேலம்
விழுப்புரம்
காஞ்சிபுரம்
அமமுக 2 திருச்சிராப்பள்ளி
தேனி
தமிழ் மாநில காங்கிரசு 3 திருப்பெரும்புதூர்
ஈரோடு
தூத்துக்குடி
இந்திய ஜனநாயக கட்சி 1 பெரம்பலூர்
புதிய நீதிக் கட்சி 1 வேலூர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1 தென்காசி
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு 1 இராமநாதபுரம்
இந்திய மக்கள் கல்வி முன்னனேற்றக் கழகம் 1 சிவகங்கை

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

[தொகு]
நிலைகள் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் 1,503 238 0 1,741
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் 0 783
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் 0
களத்தில் இருந்த வேட்பாளர்கள் 0

வேட்பாளர் பட்டியல்

[தொகு]
தொகுதியின் பெயர் வேட்பாளர்
அதிமுக கூட்டணி திமுக கூட்டணி பாஜக கூட்டணி நாம் தமிழர் கட்சி
திருவள்ளூர்
(தனி)
கே. நல்லதம்பி தேமுதிக சசிகாந்த் செந்தில் இதேகா பாலகணபதி பாஜக ஜெகதீஷ் சந்தர்
வட சென்னை ராயபுரம் இரா. மனோகர் அதிமுக கலாநிதி வீராசாமி திமுக பால் கனகராஜ் பாஜக அமுதினி
தென் சென்னை ஜெ. ஜெயவர்த்தன் அதிமுக தமிழச்சி தங்கப்பாண்டியன் திமுக தமிழிசை சௌந்தரராஜன் பாஜக தமிழ் செல்வி
மத்திய சென்னை பி. பார்த்தசாரதி தேமுதிக தயாநிதி மாறன் திமுக வினோச் பி செல்வம் பாஜக கார்த்திகேயன்
ஸ்ரீபெரும்புதூர் பிரேம் குமார் அதிமுக த. ரா. பாலு திமுக வி.என்.வேணுகோபால் தமாகா களஞ்சியம் சிவகுமார்
காஞ்சிபுரம்
(தனி)
பெரும்பாக்கம் ராசசேகர் அதிமுக க. செல்வம் திமுக ஜோதி வெங்கடேசன் பாமக சந்தோஷ்குமார்
அரக்கோணம் ஏ. எல். விசயன் அதிமுக எஸ். ஜெகத்ரட்சகன் திமுக கே. பாலு பாமக அஃப்சியா நஸ்ரின்
வேலூர் பசுபதி அதிமுக கதிர் ஆனந்த் திமுக ஏ. சி. சண்முகம் புதிய நீதிக் கட்சி மகேஸ் ஆனந்த்
கிருஷ்ணகிரி வி. செயப்பிரகாசு அதிமுக கொ. கோபிநாத் இதேகா நரசிம்மன் பாஜக வித்யா வீரப்பன்
தருமபுரி அசோகன் அதிமுக ஆ. மணி திமுக சௌமியா அன்புமணி பாமக டாக்டர் அபிநயா பொன்னிவளவன்
திருவண்ணாமலை கலியபெருமாள் அதிமுக சி. என். அண்ணாத்துரை திமுக அசுவத்தாமன் பாஜக ரமேஷ்பாபு
ஆரணி சி. வி. கசேந்திரன் அதிமுக எம். எஸ். தரணிவேந்தன் திமுக முனைவர். அ. கணேசு குமார் பாமக பிரகலாதா
விழுப்புரம்
(தனி)
செ. பாக்யராசு அதிமுக து. இரவிக்குமார் விசிக முரளி சங்கர் பாமக பேச்சிமுத்து
கள்ளக்குறிச்சி இரா. குமரகுரு அதிமுக தே. மலையரசன் திமுக இரா. தேவதாசு உடையார் பாமக ஜெகதீசன்
சேலம் ப. விக்னேசு அதிமுக டி. எம். செல்வகணபதி திமுக அண்ணாத்துரை பாமக மனோஜ்குமார்
நாமக்கல் எசு. தமிழ்மணி அதிமுக மாதேசுவரன் கொமதேக கே. பி. இராமலிங்கம் பாஜக கனிமொழி
ஈரோடு ஆற்றல் அசோக்குமார் அதிமுக கே. ஈ. பிரகாஷ் திமுக பி.விஜயகுமார் தமாகா கார்மேகம்
திருப்பூர் அருணாசலம் அதிமுக கு. சுப்பராயன் சிபிஐ முருகானந்தம் பாஜக சீதா லட்சுமி
நீலகிரி
(தனி)
லோகேசு தமிழ்செல்வன் அதிமுக ஆ. ராசா திமுக எல். முருகன் பாஜக ஜெயக்குமார்
கோயம்புத்தூர் சிங்கை இராமச்சந்திரன் அதிமுக கணபதி ராஜ்குமார் திமுக அண்ணாமலை பாஜக கலாமணி
பொள்ளாச்சி அப்புசாமி என்ற கார்த்திகேயன் அதிமுக க. ஈசுவரசாமி திமுக வசந்தராசன் பாஜக சுரேஷ் குமார்
திண்டுக்கல் முகம்மது முபாரக் எஸ்டிபிஐ இரா. சச்சிதானந்தம் சிபிஎம் ம. திலகபாமா பாமக நிரஞ்சனா
கரூர் எல். தங்கவேல் அதிமுக ஜோதிமணி இதேகா செந்தில்நாதன் பாஜக கருப்பையா
திருச்சிராப்பள்ளி கருப்பையா அதிமுக துரை வைகோ மதிமுக பி.செந்தில்நாதன் அமமுக டி ராஜேஷ்
பெரம்பலூர் சந்திரமோகன் அதிமுக அருண் நேரு திமுக பச்சமுத்து இஜக ஆர் தேன்மொழி
கடலூர் பி. சிவக்கொழுந்து தேமுதிக எம். கே. விஷ்ணு பிரசாத் இதேகா தங்கர் பச்சான் பாமக மணிவாசகன்
சிதம்பரம்
(தனி)
மா. சந்திரகாசன் அதிமுக தொல். திருமாவளவன் விசிக கார்த்தியாயினி பாஜக ஜான்சி ராணி
மயிலாடுதுறை பாபு அதிமுக ஆர். சுதா இதேகா ம. க. தாலின் பாமக பி. காளியம்மாள்
நாகப்பட்டினம்
(தனி)
சி. சுர்சித் சங்கர் அதிமுக வை. செல்வராசு சிபிஐ எசு. சி. எம். ரமேசு பாஜக எம் கார்த்திகா
தஞ்சாவூர் பி.சிவநேசன் தேமுதிக ச. முரசொலி திமுக எம். முருகானந்தம் பாஜக ஹுமாயூன் கபீர்
சிவகங்கை சேவியர் தாசு அதிமுக கார்த்தி சிதம்பரம் இதேகா தேவநாதன் யாதவ் இந்திய மக்கள் கல்வி முன்னனேற்றக் கழகம் எழிலரசி
மதுரை பா. சரவணன் அதிமுக சு. வெங்கடேசன் சிபிஎம் இராம சீனிவாசன் பாஜக சத்யாதேவி
தேனி வி. டி. நாராயணசாமி அதிமுக தங்க தமிழ்ச்செல்வன் திமுக டி. டி. வி. தினகரன் அமமுக மதன் ஜெயபால்
விருதுநகர் வி. விஜய பிரபாகரன் தேமுதிக மாணிக்கம் தாகூர் இதேகா ராதிகா சரத்குமார் பாஜக அருள்மொழித்தேவன்
இராமநாதபுரம் பா. செயபெருமாள் அதிமுக நவாஸ் கனி இயூமுலீ ஓ. பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சந்திரபிரபா
தூத்துக்குடி சிவசாமி வேலுமணி அதிமுக கனிமொழி திமுக எஸ்.டி.ஆர்.விஜயசீலன் தமாகா ரோவினா ரூத் ஜென்
தென்காசி
(தனி)
க. கிருஷ்ணசாமி புதக இராணி சிறீகுமார் திமுக ஜான் பாண்டியன் தமமுக இசை மதிவாணன்
திருநெல்வேலி எம். ஜான்சிராணி அதிமுக ராபர்ட் புரூஸ் இதேகா நயினார் நாகேந்திரன் பாஜக சத்யா
கன்னியாகுமரி பசிலியான் நசரேத் அதிமுக விஜய் வசந்த் இதேகா பொன். இராதாகிருட்டிணன் பாஜக மரியா ஜெனிபர்


வாக்குப்பதிவு

[தொகு]

ஏப்ரல் 19 அன்று இரவு 7 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் உத்தேசமாக 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். ஏப்ரல் 20 அன்று, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளின் மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46% என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.[32] [33]

மூன்றாவது முறையாக இன்று (ஏப்ரல் 21) பிற்பகல் 12.44 மணியளவில் வெளியிடப்பட்ட இறுதி வாக்குப்பதிவு நிலவரத்தின்படி, தமிழ்நாட்டில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .[34][35]

தேர்தல் முடிவுகள்

[தொகு]

தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரு மக்களவைத்தொகுதிகளைப் பெற்றதாலும் நாம் தமிழர் கட்சி 8%இக்கு மேல் வாக்குகளைப் பெற்றதாலும் தேர்தல் ஆணையத்தால் ஏற்பு பெற்ற மாநில கட்சி எனும் தகுதியை பெற்றன. இத்தேர்தலில் வாக்களித்தவர்கள் 43,458,875.

வ. எண். தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
1 திருவள்ளூர் சசிகாந்த் செந்தில் இந்திய தேசிய காங்கிரசு
2 சென்னை வடக்கு கலாநிதி வீராசாமி திராவிட முன்னேற்றக் கழகம்
3 சென்னை தெற்கு தமிழச்சி தங்கப்பாண்டியன்
4 சென்னை சென்ட்ரல் தயாநிதி மாறன்
5 ஸ்ரீபெரும்புதூர் த. ரா. பாலு
6 காஞ்சிபுரம் ஜி. செல்வம்
7 அரக்கோணம் எஸ். ஜெகத்ரட்சகன்
8 வேலூர் கதிர் ஆனந்த்
9 கிருஷ்ணகிரி கொ. கோபிநாத் இந்திய தேசிய காங்கிரசு
10 தர்மபுரி ஆ. மணி திராவிட முன்னேற்றக் கழகம்
11 திருவண்ணாமலை சி. என். அண்ணாதுரை
12 ஆரணி எம். எஸ். தரணிவேந்தன்
13 விழுப்புரம் து. இரவிக்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
14 கள்ளக்குறிச்சி தே. மலையரசன் திராவிட முன்னேற்றக் கழகம்
15 சேலம் டி. எம். செல்வகணபதி
16 நாமக்கல் வி. எம். மாதேசுவரன்
17 ஈரோடு -கே. ஈ. பிரகாஷ்
18 திருப்பூர் கு. சுப்பராயன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி
19 நீலகிரி ஆ. ராசா திராவிட முன்னேற்றக் கழகம்
20 கோயம்புத்தூர் கணபதி ப. ராஜ்குமார்
21 பொள்ளாச்சி க. ஈஸ்வரசாமி
22 திண்டுக்கல் ஆர். சச்சிதானந்தம் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
23 கரூர் ஜோதிமணி இந்திய தேசிய காங்கிரசு
24 திருச்சிராப்பள்ளி துரை வைகோ மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
25 பெரம்பலூர் அருண் நேரு திராவிட முன்னேற்றக் கழகம்
26 கடலூர் எம். கே. விஷ்ணு பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு
27 சிதம்பரம் தொல். திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சி
28 மயிலாடுதுறை சுதா இராமகிருஷ்ணன் இந்திய தேசிய காங்கிரசு
29 நாகப்பட்டினம் வை. செல்வராஜ் இந்தியப் பொதுவுடமைக் கட்சி
30 தஞ்சாவூர் ச. முரசொலி திராவிட முன்னேற்றக் கழகம்
31 சிவகங்கை கார்த்தி சிதம்பரம் இந்திய தேசிய காங்கிரசு
32 மதுரை சு. வெங்கடேசன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
33 தேனி தங்க தமிழ்ச்செல்வன் திராவிட முன்னேற்றக் கழகம்
34 விருதுநகர் மாணிக்கம் தாகூர் இந்திய தேசிய காங்கிரசு
35 ராமநாதபுரம் நவாஸ் கனி இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்
36 தூத்துக்குடி கனிமொழி திராவிட முன்னேற்றக் கழகம்
37 தென்காசி இராணி சிறீகுமார்
38 திருநெல்வேலி ராபர்ட் புரூஸ் இந்திய தேசிய காங்கிரசு
39 கன்னியாகுமரி விஜய் வசந்த்

பெற்ற வாக்குகள்

[தொகு]
திமுக கூட்டணி அதிமுக கூட்டணி பாஜக கூட்டணி நாம் தமிழர் கட்சி
எண் தொகுதி பெற்ற வாக்கு வாக்கு % பெற்ற வாக்கு வாக்கு % பெற்ற வாக்கு வாக்கு % பெற்ற வாக்கு வாக்கு %
1 திருவள்ளூர் 796,956 56.21% 223,904 15.79% 224,801 15.86% 120,838 8.52%
2 வட சென்னை 497,333 55.11% 158,111 17.52% 113,318 12.56% 95,954 10.63%
3 தென் சென்னை 516,628 47.00% 172,108 15.69% 290,683 26.44% 83,972 7.64%
4 மத்திய சென்னை 413,848 56.65% 72,016 9.86% 169,159 23.16% 46,031 6.30%
5 திருப்பெரும்புதூர் 755,671 52.65% 271,582 18.85% 210,110 14.58% 140,233 9.73%
6 காஞ்சிபுரம் 586,044 46.53% 364,571 28.94% 164,931 13.09% 110,272 8.75%
7 அரக்கோணம் 563,216 48.39% 256,657 22.05% 202,325 17.38% 98,944 8.50%
8 வேலூர் 568,692 50.35% 117,682 10.42% 352,990 31.25% 53,284 4.72%
9 கிருஷ்ணகிரி 492,883 42.27% 300,397 25.76% 2,14,125 18.36% 107,083 9.18%
10 தருமபுரி 432,667 34.67% 293,629 23.53% 411,367 32.97% 65,381 5.24%
11 திருவண்ணாமலை 547,379 47.75% 313,448 27.34% 156,650 13.67% 83,869 7.32%
12 ஆரணி 500,099 43.86% 291,333 25.55% 236,571 20.75% 66,740 5.85%
13 விழுப்புரம் 477,033 41.39% 406,330 335.25% 181,882 15.78% 57,242 4.97%
14 கள்ளக்குறிச்சி 561,589 44.94% 507,805 40.64% 71,290 5.71% 73,652 5.89%
15 சேலம் 566,085 43.38% 495,728 37.99% 127,139 9.74% 76,207 5.84%
16 நாமக்கல் 462,036 40.31% 432,924 37.77% 104,690 9.13% 95,577 8.34%
17 ஈரோடு 562,339 51.43% 325,773 29.79% 77,911 7.13% 82,796 7.57%
18 திருப்பூர் 472,739 41.38% 346,811 30.35% 185,322 16.22% 95,726 8.38%
19 நீலகிரி 473,212 46.44% 220,230 21.61% 236,627 22.83% 58,821 5.77%
20 கோவை 568,200 41.39% 236,490 17.23% 450,132 32.79% 82,657 6.02%
21 பொள்ளாச்சி 533,377 47.37% 281,335 24.98% 223,354 19.84% 58,196 5.17%
22 திண்டுக்கல் 670,149 58.29% 226,328 16.69% 112,503 9.79% 97,845 8.51%
23 கரூர் 534,906 47.25% 368,090 32.52% 102,482 9.05% 87,503 7.73%
24 திருச்சிராப்பள்ளி 542,213 51.35% 229,119 21.70% 100,747 9.54% 107,458 10.18%
25 பெரம்பலூர் 603,209 53.42% 214,102 18.96% 161,866 14.33% 113,092 10.02%
26 கடலூர் 455,053 44.11% 269,157 26.09% 205,244 19.90% 57,424 5.57%
27 சிதம்பரம் 505,084 42.28% 401,530 34.40% 168,493 14.44% 65,589 5.62%
28 மயிலாடுதுறை 518,459 47.67% 247,276 22.73% 166,437 15.30% 127,642 11.73%
29 நாகப்பட்டினம் 465,044 47.79% 256,087 26.32% 102,173 10.50% 131,294 13.49%
30 தஞ்சாவூர் 502,245 48.82% 182,662 17.76% 170,613 16.59% 120,293 11.69%
31 சிவகங்கை 427,677 40.60% 222,013 21.08% 195,788 18.59% 163,412 15.51%
32 மதுரை 430,323 43.60% 204,804 20.75% 220,914 22.38% 92,879 9.41%
33 தேனி 571,493 50.08% 155,587 13.63% 292,668 25.65% 76,834 6.73%
34 விருதுநகர் 385,256 36.28% 380,877 35.87% 166,271 15.66% 77,031 7.25%
35 ராமநாதபுரம் 509,664 45.92% 999,780 8.99% 342,882 30.89% 97,672 8.80%
36 தூத்துக்குடி 540,729 55.26% 147,991 15.12% 122,380 12.51 120,300 12.29%
37 தென்காசி 425,679 40.97% 229,480 22.08% 208,825 20.10% 130,335 12.54%
38 திருநெல்வேலி 502,296 47.06% 89,601 8.39% 336,676 31.54% 87,686 8.21%
39 கன்னியாகுமரி 546,248 53.08% 41,393 4.02% 366,341 35.60% 52,721 5.12%

சட்டமன்ற இடைத்தேர்தல்

[தொகு]

காங்கிரசு சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விசயதரணி பிப்ரவரி 25, 22024 அன்று பாரதிய சனதா கட்சியில் இணைந்தார். இதனை தொடர்ந்து தனது காங்கிரசு உறுப்பினர் பொறுப்பையும், சட்ட மன்ற உறுப்பினர் பதவியையும் விட்டு விலகிவிட்டதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து அந்த தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. இவரின் கடிதத்தை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் அப்பாவு விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளதாக தமிழ்நாடு அரசு அரசிதழில் அறிவிப்பை வெளியிட்டார். [36] விசயதரணி தனது உறுப்பினர் பதவியை துறந்துவிட்டு பாசகவில் சேர்ந்ததால் அத்தொகுதிக்கும் மக்களவை தேர்தலுடன் தேர்தல் நடந்தது. இதிலும் திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட காங்கிரசு வெற்றிபெற்றது. [37]


விளவங்கோடு சட்டமன்ற தேர்தல் முடிவு
வேட்பாளர் கட்சி பெற்ற வாக்கு வாக்கு %
தாரகை குத்பர்ட் காங்கிரசு 91054 57.71
நந்தினி பாசக 50880 32.25
செமினி நாம்தமிழர் 8150 5.17
ராணி அதிமுக 5267 3.34

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2024 Lok Sabha polls: DMK chief MK Stalin may be in prime position to unite anti-BJP forces". The New Indian Express.
  2. "நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல்: தமிழகம், புதுவையில் ஏப்.19-ல் வாக்குப்பதிவு". Hindu Tamil Thisai. 2024-03-17. பார்க்கப்பட்ட நாள் 2024-03-24.
  3. "AIADMK severs ties with BJP-led NDA alliance, to lead separate front for 2024 Lok Sabha polls". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-25.
  4. PTI. "AIADMK severs ties with BJP-led NDA; to form front to fight 2024 LS polls". Deccan Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-25.
  5. "AIADMK snaps ties with BJP-led NDA alliance ahead of 2024 Lok Sabha polls". The Indian Express (in ஆங்கிலம்). 2023-09-25. பார்க்கப்பட்ட நாள் 2023-09-25.
  6. திமுக - காங்கிரஸ் இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவு
  7. திமுக கூட்டணியில் ராமநாதபுரத்தில் ஐயுஎம்எல், நாமக்கல்லில் கொமதேக போட்டி! தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது!
  8. சக்சஸ்.. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு மீண்டும் நாமக்கல் தொகுதி.. திமுக கூட்டணியில் ஒதுக்கீடு
  9. திமுக கூட்டணி பங்கீடு: சிபிஐ, சிபிஎம் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு
  10. நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகளுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
  11. சிதம்பரத்தில் மீண்டும் களமிறங்கும் திருமாவளவன்.. 2019ல் கண் உறங்காத இரவுகள்.. பிளாஷ் பேக்
  12. திமுக - மதிமுக இடையே தொகுதி பங்கீடு.. ஒப்பந்தம் கையெழுத்து.. தனி சின்னம்தான்.. வைகோ உறுதி
  13. திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதியானது! புதுச்சேரி உள்பட காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!
  14. திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் 4 தொகுதிகள் அறிவிப்பு
  15. தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு போட்டியிடும் தொகுதிகள் எவை? - வெளியான அறிவிப்பு
  16. திருச்சியை பறித்த திமுக.. காங்கிரஸின் திருநாவுக்கரசருக்கு கல்தா?!
  17. காங்கிரஸ் வசம் சென்ற கடலூர், நெல்லை - திமுக ஒதுக்கியதன் பின்னணி என்ன?!
  18. மக்களவைத் தேர்தல்: திருச்சியில் துரை வைகோ போட்டி - மதிமுக அறிவிப்பு!
  19. மக்களவைத் தேர்தல் 2024: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!
  20. "மக்களவைத் தேர்தல்: அதிமுக குழு அமைப்பு". Dinamani. 2024-01-22.
  21. "Ahead of Lok Sabha polls, AIADMK constitutes committees for seat-sharing, election manifesto and campaign". The Hindu (in ஆங்கிலம்). 2024-01-22. பார்க்கப்பட்ட நாள் 2024-01-22.
  22. அதிமுக கூட்டணியில் தேமுதிக 5 தொகுதிகளில் போட்டி: இபிஎஸ் - பிரேமலதா கையெழுத்து
  23. பாரிவேந்தருக்கு பாஜக கூட்டணியில் சீட்.. மீண்டும் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே
  24. அதிமுகவுக்கு ‘தைலாபுர’ ஷாக்: பாஜக - பாமக கூட்டணியால் யாருக்கு சாதகம்?
  25. லோக்சபா தேர்தலுக்கு முதல் ஆளாக வேட்பாளரை அறிவித்தார் சீமான்.. தென் சென்னை நாதக வேட்பாளர் இவர்தான்
  26. குமரியில் நாம் தமிழர் வேட்பாளர் அறிவிப்பு
  27. பார்லி.தேர்தல்: நாம் தமிழர் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
  28. பாராளுமன்ற தேர்தல்: நெல்லை, தென்காசி தொகுதி வேட்பாளர்களை அறிவித்தது நாம் தமிழர் கட்சி
  29. நாம் தமிழர்: `கரும்பு விவசாயி’ சின்னத்துக்கு சிக்கல்? - சர்ச்சையும் விளக்கமும்!
  30. கை நழுவிய விவசாயி சின்னம்! நாம் தமிழருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்.. சீமானின் அதிரடி என்ன?
  31. நாதகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்! கைவிட்டு போனது விவசாயி சின்னம்! என்ன செய்ய போகிறார் சீமான்.!
  32. மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 69.46% வாக்குப்பதிவு... தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
  33. தமிழ்நாடு : மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் பெரிய வித்தியாசம் வந்தது எப்படி?
  34. மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 69. 72 சதவீதம் வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம்
  35. வெளியானது இறுதி வாக்குப்பதிவு நிலவரம்.. தமிழ்நாட்டில் 69.72 சதவீத வாக்குகள் பதிவு! - Final vote turnout in TN
  36. விளவங்கோடு சட்டமன்ற தொகுதி 24-ந்தேதி முதல் காலியாக உள்ளது: சபாநாயகரின் அறிவிப்பு அரசிதழில் வெளியீடு
  37. விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

வெளியிணைப்புகள்

[தொகு]