புதிய நீதிக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Puthiya Needhi Katchi
Puthiya Needhi Katchi
புதிய நீதிக் கட்சி
தலைவர்ஏ.சி. சண்முகம்
நிறுவனர்ஏ.சி. சண்முகம்
தொடக்கம்2001
கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி

புதிய நீதிக் கட்சி (ஆங்கிலம்: New Justice Party) என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல் கட்சி ஆகும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் உறுப்பினரான ஏ.சி. சண்முகம் என்பவரால் இக்கட்சி தொடங்கப்பட்டது.

உருவாக்கம்[தொகு]

ஏ.சி. சண்முகம் என்பவர் நீதிக் கட்சி என்ற அரசியல் கட்சியை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001க்கு முன் தொடங்கினார். பின்னர் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி 2009 ஆம் ஆண்டு இவர் நீதிக் கட்சி என்பதை புதிய நீதிக் கட்சி என பெயர்மாற்றம் செய்து இதன் தலைவராக பணியாற்றிவருகிறார்.[1] தமிழகத்தில் முதலியார் சமூக மக்களின் பிரதிநிதித்துவம் பெறவும், இட ஒதுக்கீடு பெறவும், இம்மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும் புதிய நீதிக் கட்சி தொடங்கப்பட்டது.[2]

கொள்கைகள்[தொகு]

இக்கட்சி அனைத்து முதலியார்(செங்குந்தர், அகமுடையர், பிள்ளைமார், சேனைத்தலைவர்,சைவ வெள்ளாளர் ஆகிய பிரிவுகளைத் சேர்ந்த பல்வேறு பட்டபெயர்களில் அழைக்கப்படும் வெள்ளாளப் பெருமக்களுக்கு குறைந்தபட்சம் வறுமை கோட்டிற்கு கீழேயுள்ளவர்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிய இட ஒதுக்கீடு பட்டியலில் அல்லது தனி இட ஒதுக்கீடோ வழங்குவோம் என்று தங்கள் தேர்தல் வாக்குறுதியாக, பகிரங்கமாக அறிவிக்கும் கூட்டணிக்கு, புதிய நீதிக்கட்சி கடந்த 18 ஆண்டுகளாக கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆற்றிய உழைப்பை தியாகம் செய்து, தனது நிபந்தனையற்ற முழுமையான ஆதரவினை தெரிவித்து வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_நீதிக்_கட்சி&oldid=3197359" இருந்து மீள்விக்கப்பட்டது