உள்ளடக்கத்துக்குச் செல்

ஏ. சி. சண்முகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆ. சொ. சண்முகம்
நிகழ்ச்சி ஒன்றில் ஆ. சொ. சண்முகம்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்வீ. அர்ச்சுனன்
பின்னவர்எம். சின்னகுழந்தை
தொகுதிஆரணி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1984–1989
முன்னையவர்அப்துல் சமது
பின்னவர்அப்துல் சமது
தொகுதிவேலூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1950-06-01)1 சூன் 1950
ஆரணி, தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிபுதிய நீதிக் கட்சியின் தலைவர்[1]
பிற அரசியல்
தொடர்புகள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
முன்னாள் மாணவர்
  • அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரி செய்யாறு
  • அரசு முத்துரங்கம் கலைக் கல்லூரி வேலூர்
  • விஸ்வேசுவராபுரம் சட்டக் கல்லூரி பெங்களூரு
தொழில்தொழிலதிபர், அரசியல்வாதி

ஏ. சி. சண்முகம் (ஆ. சொ. சண்முகம்) என்பவர் தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல் தலைவர் ஆவார். இவர் தமிழ்நாட்டில் உள்ள துளுவ வெள்ளாளர் சாதியினருக்கான சாதி அடிப்படையிலான கட்சியான புதிய நீதிக் கட்சியின் சிறுவனரும் தலைரும் ஆவார்.[2] இவர் அக்கட்சியை 2001 ஆம் ஆண்டு தொடங்கினார்.[3] இவர் தன் அரசியல் வாழ்வை அஇஅதிமுகவில் இருந்து துவக்கினார்.[4] அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் சார்பில் 1984 ஆம் ஆண்டு ஏ. சி. சண்முகம் வேலூர் மக்களவைத் தொகுதியிக்கு போட்டியிட்டு 52.93% வாக்கினை பெற்று மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்த ஏ. சி சண்முகம் புதிய நீதிக் கட்சியைத் துவக்கினார்.[6]

2014 ஆம் ஆண்டு, பாஜக வேட்பாளராக வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[4]

பின்னர், இவர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.[7]

2019 ஆம் ஆண்டு வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[8]

புதிய நீதிக் கட்சி

[தொகு]

புதிய நீதி கட்சி, தமிழ்நாட்டில் சாதி அடிப்படையிலான அரசியல் கட்சியாகும். இது முதலியார் சாதியினருக்காக ஏ. சி. சண்முகத்தால் நிறுவப்பட்டது.[2] இந்தக் கட்சி 2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு சற்று முன்பு தொடங்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவரான இவர் தமிழ்நாடு முழுவதிலும் கணிசமாக உள்ள முதலியார் மற்றும் பிள்ளைமார் சாதியினரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறுகிறார்.

2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தக் கட்சி இன்னும் ஏ.சி. சண்முகத்தால் வழிநடத்தப்படுகிறது, மேலும் பெரிய கட்சிகளுடன் தொடர்ந்து கூட்டணி வைத்துள்ளது.[9]

தொழில்

[தொகு]

சண்முகம் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், ஆரணியில் ராஜராஜேஸ்வரி நிறுவனங்கள் குழுமம் மற்றும் ஏ.சி.எஸ் குழும நிறுவனங்களின் நிறுவனராகவும் உள்ளார்.[10]

போட்டியிட்ட தேர்தல்கள்

[தொகு]

இந்தியப் பொதுத் தேர்தல்கள்

[தொகு]
ஆண்டு தொகுதி கட்சி வாக்கு % எதிர்த்து போட்டியிட்டவர் எதிர்த்து போட்டியிட்ட கட்சி எதிர்த்து போட்டியிட்டவர் பெற்றவை % முடிவு வித்தியாசம் %
2024 வேலூர் பா.ஜ.க 352,990 31.25 கதிர் ஆனந்த் தி.மு.க 568,692 50.35 தோல்வி -215,702 -19.08
2019 அ.இ.அ.தி.மு.க 477,199 46.42 485,340 47.21 தோல்வி -8,141 -0.79
2014 பா.ஜ.க 324,326 33.26 பி. செங்குட்டுவன் அ.இ.அ.தி.மு.க 383,719 39.35 தோல்வி -59,393 -6.09
1984 அ.இ.அ.தி.மு.க 284,416 52.93 ஏ. எம். ராமலிங்கம் தி.மு.க 209,693 39.02 வெற்றி 74,723 13.91

திரைப்படவியல்

[தொகு]

தயாரிப்பாளராக

[தொகு]
ஆண்டு படம் குறிப்புகள்
2021 அரண்மனை 3
2022 காபி வித் காதல்
2024 அரண்மனை 4
2025 மத கஜ ராஜா 2012 இல் படமாக்கப்பட்டு 12 ஆண்டுகள் கழித்து வெளியானது.
கேங்கர்ஸ்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Puthiya Needhi Katchi gets a makeover". இந்தியன் எக்சுபிரசு. 7 September 2009 இம் மூலத்தில் இருந்து 12 மே 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120512012425/http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Puthiya+Needhi+Katchi+gets+a+makeover&artid=q. பார்த்த நாள்: 31 January 2010. 
  2. 2.0 2.1 வார்ப்புரு:Multiref2
  3. The Hindu : Politics of perdition - I[தொடர்பிழந்த இணைப்பு]
  4. 4.0 4.1 Sivakumar, R (26 July 2019). "'Vellore different from rest of Tamil Nadu'". The New Indian Express. Retrieved 1 August 2019.
  5. "Vellore Lok Sabha Election Result - Parliamentary Constituency". resultuniversity.com. Retrieved 1 August 2019.
  6. "போஸ்டர் சலசலப்பு; அடித்து நொறுக்கப்பட்ட முகாம்... வேலூரில் ஏ.சி.சண்முகத்தைச் சுற்றும் சர்ச்சைகள்!". vikatan.com. 2024-01-09. Retrieved 2024-04-17.
  7. Hariss, John (2005). "Whatever happened to cultural nationalism in Tamil Nadu? A reading of current events and the recent literature on Tamil politics". In Wyatt, Andrew; Zavos, John (eds.). Decentring the Indian Nation (in ஆங்கிலம்). Routledge. p. 103. ISBN 07146-5387X.
  8. J, Shanmughasundaram (2024-03-31). "Minorities have a say in Dravidian stronghold in multi-cornered fight". www.dtnext.in (in ஆங்கிலம்). Retrieved 2024-04-16.
  9. Daily, Keralakaumudi (8 February 2020). "Rajinikanth to announce party soon, aim to evict a single party from TN" (in en). Keralakaumudi Daily. https://keralakaumudi.com/en/news/news.php?id=241344&u=rajinikanth-to-announce-party-soon-aim-to-evict-a-single-party-from-tn. 
  10. Demu, Blessey. "Honorary Fellowship for A C Shanmugam". news18.com. News18. Retrieved 13 October 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._சி._சண்முகம்&oldid=4380421" இலிருந்து மீள்விக்கப்பட்டது