கணபதி பி. ராஜ் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணபதி பி. ராஜ் குமார்
கோயம்புத்தூரின் ஐந்தாவது மேயர்
பதவியில்
2016–2014
முன்னையவர்செ. மா. வேலுச்சாமி
பின்னவர்ஏ. கல்பனா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிமுக
பிற அரசியல்
தொடர்புகள்
அஇஅதிமுக

கணபதி பி.ராஜ் குமார் (Ganapathi P. Raj Kumar) என்பவர் 2011-16 ஆண்டு காலகட்டத்தில் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாநகரின் 5வது மேயராக இருந்தவர் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த செ. மா. வேலுச்சாமிக்கு அடுத்தபடியாக இப்பபதவிக்கு தேர்ந்தெடுக்கப்படார். இவர் உள்ளாட்சித் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சின் நந்தகுமாரை தோற்கடித்து மேயரானார். [1] இவர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவராவார், 2021 டிசம்பர் 21-ம் தேதி அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். இந்தியப் பொதுத் தேர்தல் 2024-ல் கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக களமிறங்குகிறார். [2]

மேயர் தேர்தல்[தொகு]

கடந்த 2014-ம் ஆண்டு கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் அதிமுக சார்பில் கணபதி பி. ராஜ்குமார் 2.91 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் நந்தகுமாரை தோற்கடித்தார். இந்த தேர்தலில் திமுக, இந்திய தேசிய காங்கிரசு ஆகிய இரு கட்சிகளும் கலந்துகொள்ளவில்லை.

அதிமுக வேட்பாளர் ராஜ்குமார் 4,20,104 வாக்குகளும், பாஜக வேட்பாளர் நந்தகுமார் 128,761 வாக்குகளும் பெற்றனர். இந்த இருவரையும் அடுத்து வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) சி. பத்மநாபன் தேர்தலில் 31,000 வாக்குகள் பெற்றார்.

இத்தேர்தலின் முடிவில் கோவை மாநகராட்சி மேயராக கணபதி ராஜ்குமார் தேர்வு செய்யப்பட்டார். [3]

குறிப்புகள்[தொகு]

  1. "AIADMK's Rajkumar wins Coimbatore mayoral elections - Times of India".
  2. "தி.மு.க-வின் கோவை வேட்பாளர் கணபதி பி.ராஜ்குமார்".
  3. "P.Rajkumar is Kovai Mayor". 23 September 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணபதி_பி._ராஜ்_குமார்&oldid=3922233" இலிருந்து மீள்விக்கப்பட்டது