உள்ளடக்கத்துக்குச் செல்

கோயம்புத்தூர் மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயம்புத்தூர் மாநகராட்சி
பணி செய்து மகிழ்வோம்
வகை
வகை
தலைமை
மாநகராட்சி மேயர்
திருமதி. கல்பனா ஆனந்தகுமார் திமுக04.03.2022
துணை மேயர்
வெற்றிச்செல்வன் திமுக 04.03.2022
மாநகராட்சி ஆணையாளர்
திரு. மு. பிரதாப் இ.ஆ.ப
மாநகராட்சி துணை ஆணையாளர்
Dr.M.ஷர்மிளா
மாவட்ட ஆட்சியர்
திரு. கிராந்திகுமார் பதி IAS
கட்டமைப்பு
அரசியல் குழுக்கள்
ஆளும் கட்சி (96)

எதிர்கட்சிகள் (4)

கூடும் இடம்
விக்டோரியா நகர மண்டபம்
வலைத்தளம்
ccmc.gov.in

கோயம்புத்தூர் மாநகராட்சி ( Coimbatore Corporation) இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மேற்குப் பகுதியில் கோயம்புத்தூர் மாநகரத்தை ஆட்சி செய்யும் உள்ளாட்சித் துறையின் ஒரு அமைப்பாகும். தென்னிந்தியாவின் சென்னை, ஐதராபாத், பெங்களூருக்கு அடுத்த நான்காவது மிகப்பெரிய மாநகராட்சி கோயம்புத்தூர் ஆகும். இந்தியாவில் மும்பைக்கு அடுத்த அதிக தொழில் முதலீடுகளை கொண்டுள்ள ஓர் மாநகரம் ஆகும். கோயம்புத்தூர் மாநகராட்சி கிட்டத்தட்ட 148 வார்டுகளை கொண்டுள்ளது. இது சுமார் 306.4 ச.கிமீ பரப்பளவுக்கு விரிந்த மாநகரமாகும். தமிழக பரப்பளவில் இரண்டாவது மிகப்பெரிய நகரம் ஆகும். சென்னை மாநகராட்சியைப் போலவே பல நகராட்சிகளையும் பல பேரூராட்சிகளையும் உள்ளடக்கி உள்ளது. அதனடிப்படையில் கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சி ஆண்டு வருவாய் கிட்டத்தட்ட 754 கோடி ரூபாய் ஆகும். இது தமிழக மாநகராட்சிட்சிகளில் வரி வசூலில் இரண்டாவது இடத்தை கொண்டுள்ளது.

கோவை மாநகரம் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகரமாகும். நெசவு சார்ந்த தொழில்கள், மின் மற்றும் மின் அணு சார்ந்த தொழில்கள், மற்றும் மின்சார நீரேற்றி தயாரித்தல் உள்ளிட்ட பல தொழில்களில் இந்தியாவில் முன்னணி வகிக்கும் மாநகரமாகும். விரைவில் பெருநகராக(cosmopolitan city) வளர்ச்சி அடையும் நிலையில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதால் இதன் நலம் பயக்கின்ற காலநிலை மிகவும் வரவேற்கக் கூடியதாக ஆண்டு முழுவதும் அமைந்துள்ளது.

சிறப்புகள்

[தொகு]
  • தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய மாநகரம் கோயம்புத்தூர் ஆகும்.
  • தமிழகத்திலேயே எந்த ஒரு மாநகராட்சிக்கும் இல்லாத சிறப்பு கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உண்டு. அது எந்த ஒரு மாநகராட்சியாக இருந்தாலும் அவற்றுக்கு என தனி சின்னம் (Corporation symbol) இருக்கும். அந்த சின்னத்தில் இந்திய தேசிய கொடியைக் கொண்டும் தேசியக் கொடியின் அசோக காலச்சக்கரத்தையும் கோயம்புத்தூர் மாநகராட்சி சின்னத்தில் மட்டுமே காண முடியும்.
  • கோயம்புத்தூரில் இரண்டு விமான நிலையங்கள் உள்ளன. பன்னாட்டு விமான நிலையம் அவினாசி சாலை வழியாக கோவை மையப்பகுதியான காந்திபுரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் சென்றடையும் விதமாக அமைந்துள்ளது.
  • கோவை மாநகரம் இதர மாநிலங்களான கேரளம் மற்றும் கர்நாடகாவை தேசிய நெடுஞ்சாலை 47 மூலம் இணைக்கின்றது.
  • கோவை காரணம் பேட்டையில் இராணுவ விமான நிலையம் மற்றும் போர் உற்பத்தி தளவாட விமான நிலையமும் இங்கு அமைந்துள்ளது.
  • நவம்பர் 24 கோவை மாநகரின் பிறந்த நாளாகும்.
  • கோயம்புத்தூரில் தான் தமிழ்நாட்டிலேயே முதன்முதலில் திரையரங்கம் கட்டப்பட்டது.
  • இந்தியாவின் தேசிய கீதமான (ஜன கண மன) பாடல் இரவிந்திரநாத் தாகூரால் முதன்முதலில் கவிதை வடிவில் பாடப்பட்ட பெருமைமிக்க நகரம் நமது கோயம்புத்தூர் ஆகும். ஆகையால் நம் பாரதத்தின் தேசிய கீதம் பாடிய முதல் இடம் என்ற பெருமையும் பெறுகிறது.

கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சி தேர்தல்

[தொகு]

2022-ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் மாநகராட்சியின் 100 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 96 வார்டுகளையும், அதிமுக 3 வார்டுகளையும், சுயேச்சை 1 வார்டையும் கைப்பற்றினர். மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில், மேயராக திமுகவின் கல்பனாவும், துணை மேயராக திமுகவின் இரா. வெற்றிச்செல்வனும் வெற்றி பெற்றனர். [1]

கோயம்புத்தூர் மேயர்கள் பட்டியல்

[தொகு]
  1. கல்பனா - திமுக - 2022 முதல் - பதவியில் உள்ளார்.
  2. ராஜ்குமார்- அதிமுக - 2014 2016
  3. செ.ம.வேலுச்சாமி - அதிமுக 2011 - 2014
  4. வெங்கடாசலம் - காங்கிரஸ் - 2006 - 2011
  5. மலரவன் - அதிமுக 2001 - 2006
  6. கோபாலகிருஷ்ணன் - காங்கிரஸ்- 1996 2001

கோயம்புத்தூர் மாநகராட்சி

[தொகு]
கோயம்புத்தூர் மாநகராட்சியைப் பற்றியத் தகவல்கள்
பரப்பளவு
306.4 ச. கிமீ
மக்கள் தொகை
2011 கணக்கெடுப்பின்படி 34,58,045
பெருநகர மாநகராட்சி மண்டலங்கள்
கிழக்கு மண்டலம் மேற்கு மண்டலம் தெற்கு மண்டலம் வடக்கு மண்டலம் மத்திய மண்டலம்
மாநகராட்சி வட்டங்கள்
100 வட்டங்கள்
இம்மன்றத்திற்காக அமைக்கபெற்ற நிலைக்குழுக்கள்
வரி மற்றும் நிதிக் குழு
பணிக்குழு
திட்டக் குழு
நல்வாழ்வுக் குழு
கல்விக் குழு
கணக்கிடுதல் குழு

மாநகராட்சி வடிவமைப்பு

[தொகு]

மாநகராட்சி மன்றம் நேரிடையையாக தேர்ந்தெடுக்கப்பட்ட 148 உறுப்பினர்களும் மேலும் மேயர் மற்றும் வட்ட நகராட்சி உறுப்பினர்களால் நடத்தப்பெறுகின்றது. தற்பொழுது 25.11.2006 ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 148 உறுப்பினர்கள், மேயர் மற்றும் துணைமேயர்களால் மன்றம் குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒரு முறை கூட்டப்படுகின்றது. இம்மன்றத்தில் ஆக்கப்பூர்வமான, மாநகருக்குத் தேவையான செயல் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. கோயம்புத்தூர் மாநகராட்சியானது தற்பொழுது 148 வார்டுகளைக் கொண்ட தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய மாநகராட்சி ஆகும்.

2011ல் எல்லை விரிவாக்கம்

[தொகு]

கோவை மாநகராட்சியை 2011ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. பழைய மாநகராட்சிப் பகுதிகளுடன், குறிச்சி, குனியமுத்துார், கவுண்டம்பாளையம் நகராட்சிகள், வடவள்ளி, வீரகேரளம், துடியலுார், வெள்ளக்கிணறு, சரவணம்பட்டி, சின்ன வேடம்பட்டி, காளப்பட்டி பேரூராட்சிகள் மற்றும் விளாங்குறிச்சி ஊராட்சிப் பகுதிகள் இணைக்கப்பட்டது. கோவை மாநகராட்சி மற்றும் 22 பேரூராட்சிகள் , 69 கிராம ஊராட்சிகள் இணைத்து 1,52,618.9 ஹெக்டேர் பரப்புக்கு பெருந்திட்டம் எல்லை விஸ்தரிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. [2]

பெருநகர கோயம்புத்தூர் மாநகராட்சி

[தொகு]

1981ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பின் மக்கள் தொகை பெருக்கம், தொழில் நுட்ப வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, மாநகராட்சி பரப்பளவு ஆகியவையால் அ.தி.மு.க 2011ல் ஆட்சி பொறுப்பை ஏற்ற பின் 2013-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சியாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும் தமிழ்நாட்டிலேயே சென்னைக்கு நிகரான பரப்பளவை கொண்ட மாவட்டம் கோயம்புத்தூர் மாவட்டம் ஆகும். மேலும் தென்னிந்தியாவிலேயே மிக அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் கோவை மாவட்டம் ஆகும்.

பெருநகர கோயம்புத்தூர் மாநகராட்சியின் மண்டலங்கள்

[தொகு]

கோயம்புத்தூர் மாநகராட்சி சுமார் 5 மிகப்பெரிய மண்டலங்களை கொண்டுள்ளது.

  • கோவை மேற்கு மண்டலம்
  • கோவை கிழக்கு மண்டலம்
  • கோவை மத்திய மண்டலம்
  • கோவை வடக்கு மண்டலம்
  • கோவை தெற்கு மண்டலம்

என ஐந்து பெரு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்திலேயே சென்னைக்கு அடுத்த அதிக மண்டலங்களை கொண்ட பெருநகர மாநகராட்சி இதுவே ஆகும்.

கோவை மாநகர வாகன பதிவெண்

[தொகு]
  • TN 37 - கோவை தெற்கு
  • TN 38 - கோவை வடக்கு
  • TN 66 - கோவை மத்தி
  • TN 99 - கோவை மேற்கு
  • TN - - கோவை கிழக்கு (பரிசீலனையில் உள்ளது)

என நான்கு வாகனப் பதிவெண்களை கோவை மாநகரம் கொண்டுள்ளது. சென்னை மாநகரத்திற்கு அடுத்த அதிக வாகனப் பதிவெண்களை கோவை மாநகரம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவை பெருநகர மாநகராட்சியில் அமையவுள்ள மெட்ரோ ரயிலின் மாதிரி புகைப்படம்
கோவை பெருநகர மாநகராட்சியில் அமையவுள்ள மெட்ரோ ரயிலின் மாதிரி புகைப்படம்

வரலாறு

[தொகு]
  • 1804 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது.
  • 1848 ஆம் ஆண்டு நகராட்சி தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகராட்சி தலைவரானார். அவரால் 1862 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது.
  • 1981 ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்காநல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது.
  • 2013 - ம் ஆண்டு மாநகராட்சியிலிருந்து பெருநகர மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

மாநகராட்சி மக்கள் தொகை

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 148 மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களையும், 282,839 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 34,58,045 ஆகும். அதில் 17,35,021 ஆண்களும், 17,23,024 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.3% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 997 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 102069 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 953 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் 107,949 முறையே மற்றும் 683ஆகவுள்ளனர்.

2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, கோவையில் இந்துக்கள் 83.31%, முஸ்லிம்கள் 8.63%, கிறிஸ்தவர்கள் 7.53%, சீக்கியர்கள் 0.05%, பௌத்தர்கள் 0.02%, சைனர்கள் 0.28%, 0.01% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.17% பேர்களும் உள்ளனர்.

2011 இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின், மதிப்பீடுகளின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 105,0721 ஆகவும், கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 2,136,916 ஆகவும் உள்ளது.

கொங்கு நாட்டின் தலைநகரம்

[தொகு]

கோவைதிருப்பூர், ஈரோடுநாமக்கல்சேலம்தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திண்டுக்கல், கரூர்கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகள் கொங்கு நாட்டிற்கு உட்பட்டதாகும். இவற்றுள் பெரிய நகரம் கோயம்புத்தூர் ஆகும். கொங்கு நாடு என்பது அதற்கென தனிப் பண்பாடு, சடங்கு சம்பிரதாயங்களை உள்ளடக்கி உள்ளது. கொங்கு தமிழ் என்பது தமிழ் மொழியிலேயே பேசப்படும் மிக இனிமையான மொழியாக காணப்படுகிறது. மற்ற தமிழ் மொழியின் பேச்சு வழக்குகள் கொங்கு தமிழுக்கு அடுத்து தான் அமைகிறது.

பேருந்து நிலையங்கள்

[தொகு]

மாநகராட்சி மக்கள் தொகைக்கு ஏற்ப முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் மாநகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்தார். இந்த மாநகராட்சி பேருந்து திட்டங்களில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி என தமிழகத்தின் பெரு மாநகராட்சிகளில் இயக்கப்பட்டது. இதில் கோவையும் இணைந்தது.

மாநகராட்சி பேருந்து நிலையங்கள்:

  • காந்திபுரம் நகர பேருந்து நிலையம்
  • காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம்
  • காந்திபுரம் விரைவு பேருந்து நிலையம்
  • காந்திபுரம் கேரள மாநில அரசு பேருந்து நிலையம்
  • காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையம்
  • சிங்காநல்லூர் பேருந்து நிலையம்
  • உக்கடம் பேருந்து நிலையம்
  • புதிய பேருந்து நிலையம்
  • வடவள்ளி புதிய பேருந்து நிலையம்
  • மருதமலை புதிய பேருந்து நிலையம்

ஆகிய பேருந்து நிலையங்கள் மாநகராட்சிக்குள் அடங்கும்.

பெருநகர வளர்ச்சி குழுமம்

[தொகு]

பெருநகர வளர்ச்சி குழுமம் என்பது இந்தியாவின் பெருநகர மாநகராட்சிகளில் மாநகராட்சியின் பகுதிகளில் உட்கட்டமைப்பு, தரமான குடிநீர், தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றை வழங்கும் பொறுப்பு வகிக்கும் அமைப்பாகும். இது தமிழகத்தில் இரண்டு மாநகராட்சிகளில் மட்டுமே அமைந்துள்ளது. அவை சென்னை மற்றும் கோயம்புத்தூர், ஆகிய மாநகரங்களில் மட்டுமே இருந்தது. தற்போது புதிதாக திருப்பூர், ஓசூர், மதுரை ஆகிய மாநகராட்சிகளில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி வார்டுகளின் மேம்பாட்டையும் உறுதி செய்கிறது.

தெற்கு மண்டலம்

[தொகு]

வார்டுகள் 76, 77, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 96, 97, 98, 99, 100 ஆகியவை தற்போது உள்ள வார்டுகளாகவே நீட்டிக்கும். இது தவிர வார்டு 78 (78, 79 சில பகுதிகள்), வார்டு 79 (76, 78, 86 சில பகுதிகள்), வார்டு 85 (95, 99 சில பகுதிகள்)

மேற்கு மண்டலம்

[தொகு]

வார்டு 16 (பழைய வார்டு 5 முழுவதும்), வார்டு 17 (பழைய வார்டு 6), வார்டு 35 (பழைய வார்டு 7), வார்டு 34 (பழைய வார்டு 8), வார்டு 33 (பழைய வார்டு 9), வார்டு 45 (10, 11 சில பகுதிகள்), வார்டு 44 (பழைய வார்டு 12), வார்டு 43 (பழைய வார்டு 13), வார்டு 42 (பழைய வார்டு 14), வார்டு 41 (பழைய வார்டு 15), வார்டு 36 (16 சில பகுதிகள்), வார்டு 37 (16 சில பகுதிகள்), வார்டு 38 (பழைய வார்டு 17), வார்டு 39 (பழைய வார்டு 18), வார்டு 40 (பழைய வார்டு 19), வார்டு 75 (பழைய வார்டு 20), வார்டு 74 (பழைய வார்டு 21), வார்டு 71 (பழைய வார்டு 23), வார்டு 72 (பழைய வார்டு 24), வார்டு 73 (பழைய வார்டு 79 தெற்கு)

வடக்கு மண்டலம்

[தொகு]

வார்டு 1 (4, 2, 3 சில பகுதிகள்), வார்டு 2 (1, 26 முழுவதும், 2, 42, 43 சில பகுதிகள்), வார்டு 3 (27 முழுவதும், 42 சில பகுதிகள்), வார்டு 4 (28 ஒரு பகுதி), வார்டு 10 (31 முழுவதும், 28, 30 சில பகுதிகள்), வார்டு 11 (29 முழுவதும்), 30 சில பகுதிகள்), வார்டு 12 (41, 42 சில பகுதிகள்), வார்டு 13 (2, 27, 41, 42, 43 சில பகுதிகள்), வார்டு 14 (2, 3, 43 சில பகுதிகள்), வார்டு 15 (3, 4 சில பகுதிகள்), வார்டு 18 (44 முழுவதும்), வார்டு 19 (41 முழுவதும், 1 சில பகுதிகள்), வார்டு 20 (41 முழுவதும், 2, 40 சில பகுதிகள்), வார்டு 21 (30, 41 சில பகுதிகள்), வார்டு 25 (41 முழுவதும், 3, 40 சில பகுதிகள்), வார்டு 26 (38 முழுவதும், 39, 56 சில பகுதிகள்), வார்டு 27 (39, 40 சில பகுதிகள்), வார்டு 28 (40, 48 சில பகுதிகள்), வார்டு 29 (41, 47 சில பகுதிகள்), வார்டு 30 (46 முழுவதும், 47 சில பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

கிழக்கு மண்டலம்

[தொகு]

வார்டு 5 (பழைய வார்டு 33 முழுவதும்), வார்டு 6 (பழைய வார்டு 34), வார்டு 7 (பழைய வார்டு 35), வார்டு 8 (பழைய வார்டு 36), வார்டு 22 (பழைய வார்டு 32), வார்டு 24 (பழைய வார்டு 37), வார்டு 50 (பழைய வார்டு 66), வார்டு 51 (பழைய வார்டு 65), வார்டு 52 (பழைய வார்டு 56), வார்டு 53 (பழைய வார்டு 57), வார்டு 54 (பழைய வார்டு 58), வார்டு 55 (பழைய வார்டு 59), வார்டு 56 (பழைய வார்டு 60), வார்டு 58 (பழைய வார்டு 61), வார்டு 59 (பழைய வார்டு 62), வார்டு 60 (பழைய வார்டு 64), வார்டு 61 (பழைய வார்டு 63), வார்டு 9 (32, 33 சில பகுதிகள்), வார்டு 23 (35, 36 சில பகுதிகள்), வார்டு 57 (60, 61 சில பகுதிகள்)மேலும் இருகூர் 101,102,103,104,105,106,107,108,109,110,111,112,113,114,115,116,117,118 எனவும் பள்ளபாளையம் 119,120,121,122,123,124,125,126,127,128,129,130,131,132,133,134 எனவும் கண்ணம்பாளையம் 135,136,137,138,139,140,141,142,143,144,145,146,147,148 எனவும் வார்டுகள் மறு வரையறை செய்யப்பட்டுள்ளது.

மத்திய மண்டலம்

[தொகு]

வார்டு 46 (பழைய வார்டு 49 முழுவதும்), வார்டு 47 (பழைய வார்டு 48), வார்டு 62 (பழைய வார்டு 75), வார்டு 69 (பழைய வார்டு 22), வார்டு 31 (47, 48, 49) (45 சில பகுதிகள்), வார்டு 32 (45 சில பகுதிகள்), வார்டு 48 (40, 47, 52, 53 முழுவதும்), வார்டு 49 (40, 55 சில பகுதிகள்), வார்டு 63 ( 67, 68 முழுவதும்), வார்டு 64 (67, 69, 70, 71 முழுவதும்), வார்டு 65 (71, 73, 74, 75 முழுவதும்), வார்டு 66 (55, 70, 71 முழுவதும்), வார்டு 67 (51, 52, 54, 72 முழுவதும்), வார்டு 68 (50, 51, 52 முழுவதும்), வார்டு 70 (25, 80 முழுவதும்), வார்டு 80 (84, 85 முழுவதும்), வார்டு 81 (80, 83, 84 முழுவதும்), வார்டு 82 (81, 82 முழுவதும்), வார்டு 83 (71, 72, 73 முழுவதும்), வார்டு 84 (74, 75 முழுவதும் என மாற்றப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்த அதிக வார்டுகளைக் கொண்ட பெருநகராக கோயம்புத்தூர் திகழ்கிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

[1]

வெளி இணைப்புகள்

[தொகு]


  1. https://www.google.com/urlsa=t&source=web&rct=j&url=https://m.economictimes.com/industry/transportation/railways/coimbatore-mettupalayam-electric-train-service-commences/articleshow/47924462.cms&ved=2ahUKEwiPk6Tuu6rxAhXZXSsKHfs2DjMQFjACegQIBBAF&usg=AOvVaw0OdMjV_RSE_Bvc6A9uBx_z[தொடர்பிழந்த இணைப்பு]