சிறுமுகை
| சிறுமுகை | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | 11°20′N 77°01′E / 11.33°N 77.02°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கோயம்புத்தூர் |
| வட்டம் | மேட்டுப்பாளையம் |
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] |
| முதலமைச்சர் | விஜய்[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
18,223 (2011[update]) • 1,125/km2 (2,914/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
16.20 சதுர கிலோமீட்டர்கள் (6.25 sq mi) • 292 மீட்டர்கள் (958 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/sirumugai |
சிறுமுகை (ஆங்கிலம்: Sirumugai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
[தொகு]மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் நெடுஞ்சாலையில், கோயம்புத்தூருக்கு வடக்கில் 37 கி.மீ. தொலைவில் அமைந்த சிறுமுகை பேரூராட்சிக்கு அருகில், மேட்டுப்பாளையம் 9 கி.மீ., அன்னூர் 13 கி.மீ., பவானிசாகர் 20 கி.மீ. தொலைவிலும் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]16.20 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 133 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், இப்பேரூராட்சி 5,294 வீடுகளும், 18,223 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 11°20′N 77°01′E / 11.33°N 77.02°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 292 மீட்டர் (958 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ சிறுமுகை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/sirumugai/population
- ↑ Sirumugai Town Panchayat Population Census 2011
- ↑ "Sirumugai". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)