சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[1] சூலூர் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சுல்தான்பேட்டையில் இயங்குகிறது.

ஒன்றிய வரலாறு[தொகு]

1994ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் புரட்சி தலைவி ஜெயலலிதா ஆட்சியில் ஊராட்சிக்கும் தாலுக்காவுக்கும் இடைப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் கொண்டுவரப்பட்டன.இதன்மூலம் ஊராட்சிகள் தங்கள் பணியை நேரடியாக தாலுக்கா அலுவலகத்திற்கு செல்லாமல் ஒன்றிய அலுவலகத்தில் தங்கள் பணிகளை செய்து முடித்துக் கொள்ள முடியும். இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சுல்தான்பேட்டை ஒன்றியம் முதன்முதலில் காமநாயக்கன் பாளையத்தை தலைமை இடமாக கொண்டுதான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.அரசு திட்ட அறிக்கையே காமநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம் தான். காரணம் மக்கள் காவல் நிலையம் மற்றும் நால்ரோடு போக்குவரத்து வசதி. மேலும் சுல்தான் பேட்டையை விட பெரிய ஊர் என்பதால்தான். இதனை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்தனர். அனைத்து வசதியும் காமநாயக்கன் பாளையத்திற்கே கொடுத்து விட்டால் இப்பகுதி வளர்ச்சி அடையாது என்பதே ஆகும்.இதனால் அரசு தனது திட்ட அறிக்கையை மாற்றி சுல்தான் பேட்டையை தலைமையிடமாக கொண்டு ஒன்றியம் செயல்படத் துவங்கியது.அன்று அப்படி ஒரு எதிர்ப்பு இல்லை என்றால் இன்று காமநாயக்கன் பாளையமே ஊராட்சி ஒன்றியமாக இருந்திருக்கக் கூடும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 77,364 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 17,903 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 13 ஆக உள்ளது. மேலும் சுல்தான் பேட்டை மக்கள் தொகை 5,643 பேர் வசிக்கின்றனர்[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபது ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. பஞ்சாயத்து கிராமங்கள்
  2. COIMBATORE DISTRICT
  3. மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்
  4. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=12&blk_name=%27Sultanpet%27&dcodenew=11&drdblknew=18