ஆனைமலை
ஆனைமலை | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | 10°35′N 76°56′E / 10.58°N 76.93°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
வட்டம் | ஆனைமலை |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | கிராந்திகுமார் பதி, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
17,208 (2011[update]) • 1,639/km2 (4,245/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
10.5 சதுர கிலோமீட்டர்கள் (4.1 sq mi) • 258 மீட்டர்கள் (846 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/anamalai |
ஆனைமலை (ஆங்கிலம்:Anaimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் உள்ள மாசாணியம்மன் கோயில் கொங்கு வட்டாரத்தில் புகழ்பெற்றது.
அமைவிடம்
[தொகு]மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்த ஆனைமலை பேரூராட்சி, கோயம்புத்தூருலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள், பொள்ளாச்சி 14 கி.மீ., உடுமலைப்பேட்டை 30 கி.மீ. தொலைவில் உள்ளன. [4]
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]10.5 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 114 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, வால்பாறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,933 வீடுகளும், 17,208 மக்கள்தொகையும் கொண்டது.[6] [7]
புவியியல்
[தொகு]இவ்வூரின் அமைவிடம் 10°35′N 76°56′E / 10.58°N 76.93°E ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 258 மீட்டர் (846 அடி) உயரத்தில் இருக்கின்றது.
தொல்லியல்
[தொகு]ஆனைமலைக்கோவில் செல்லும் வழியில் மிகப்பழைமையான அரிய போர்வாட்கள் பத்து கண்டுபிடிக்கப்பட்டன. இவை சுமார் 4,500 வருடங்களுக்கு முற்பட்டவை என்று சிந்து சமவெளி நாகரிகத் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். [9]
மற்ற விவரங்கள்
[தொகு]- டாப் சிலிப்பும் பரம்பிக்குளம் வனவுயிர்க் காப்பகமும், ஆழியார் ஆணை, கவியருவி / குரங்கு நீர்வீழ்ச்சி, பட்டாம்பூச்சி பூங்கா, அறிவுத்துருக்கோவில்,வால்பாறை, சினிமா படப்பிடிப்பு தளங்கள் ஆனைமலைக்கு அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களாகும்.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ [1]
- ↑ ஆனைமலை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/anamalai/population
- ↑ Anaimalai Town Panchayat Population Census 2011
- ↑ "Anaimalai". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 19, 2006.
- ↑ குமுதம் ஜோதிடம்;17.12.2010