மாசாணியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாசாணியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.

அமைப்பு[தொகு]

இக்கோயில் பொள்ளாச்சித் தெற்கே 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கோயிலின் ராஜகோபுரம் வடக்கு நோக்கி உள்ளது. கோயிலுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. கருவறையின் கிழக்குப் பக்கத்தில் அம்மன் சுயம்புவாக உள்ளார். பேச்சியம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. கோயிலின் காவல் தெய்வமாக கும்ப முனீஸ்வரர் உள்ளார். [1] கோயில் வளாகத்தில்துர்க்கை, மகிஷாசுரவர்த்தினி, சப்தமாதாக்கள், விநாயகர், கருப்பராயர், புவனேஸ்வரி, பைரவர் ஆகியோர் உள்ளனர். [2]

மூலவர்[தொகு]

இக்கோயிலின் மூலவராக மாசாணியம்மன் உள்ளார். கருவறையில் அம்மன் 17 அடி நீளத்தில் கிடந்த கோலத்தில் இருக்கிறார். தெற்கே தலைவைத்துப் படுத்திருக்கும் அவருடைய திருக்கரங்களில் திரிசூலம், உடுக்கை, கபாலம், சர்ப்பம் ஆகியவை காணப்படுகின்றன. தலையில் ஜுவாலா மகுடத்துடன் மேலே நோக்கியபடி காணப்படுகிறார். [1]

விழாக்கள்[தொகு]

இக்கோயிலில் மிகச்சிறப்பு பெற்ற விழாவாக பூக்குண்டம் இறங்கும் விழா எனப்படும் தீமிதித்திருவிழா நடைபெறுகிறது. அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 வாணிதேவி, மனநோய்களைத் தீர்க்கும் மருத்துவச்சி, தினமணி, வெள்ளிமணி, 12.6.2015
  2. அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், தினமலர் கோயில்கள்

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாசாணியம்மன்_கோயில்&oldid=2207986" இருந்து மீள்விக்கப்பட்டது