சமத்தூர்
சமத்தூர் | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
வட்டம் | பொள்ளாச்சி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
5,762 (2011[update]) • 288/km2 (746/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 20 சதுர கிலோமீட்டர்கள் (7.7 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/samathur |
சமத்தூர் (ஆங்கிலம்:Samathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3][4]சமத்தூர் கிராமத்தில் வானவராயர் என்ற கொங்கு பாளையக்காரர் ஜமீன் குடும்பமும் அவர்களது அரண்மனையும் உள்ளது.
அமைவிடம்
[தொகு]இது, பொள்ளாச்சி - வால்பாறை நெடுஞ்சாலையில் பொள்ளாச்சியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள முதல்நிலை பேரூராட்சியாகும். இது கோயம்புத்தூரிலிருந்து 46 கி.மீ. தொலைவிலும்; உடுமலைப்பேட்டையிலிருந்து 36 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]20 ச.கி.மீ. பரப்பும், 12 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 53 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, உடுமலைப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,735 வீடுகளும், 5,762 மக்கள்தொகையும் கொண்டது.[6]
சமத்தூர் பாளையக்காரர்
[தொகு]இவர்களின் மேன்மைக்குச் சான்றாக சமத்தூர் பாளையத்தில் புலவர்களை போற்றிய விதத்தையும் அவர்களது கொடைத் திறனையும் கூறலாம். அன்றைய காலகட்டங்களில் உதவி கேட்டுவரும் சில புலவர்கள் தங்கள் தேவையை வெளிப்படையாக கூறுவர். சிலர் அஞ்சுவர் அல்லது வெட்டக்கப்படுவர். அதற்க்காக சமத்தூர் ஜமீன் அரண்மனையில், அரண்மனை முகப்பில் ஓலைசுவடியும் எழுத்தாணியும் தொங்க விடப்பட்டு இருக்கும். புலவர்கள் வரும் போது வாணவராயர் மாளிகையில் இல்லாமலிருக்கலாம் அல்லது வெளியூர் சென்று இருக்கலாம் . புலவர்கள் ஏமாற்றம் அடையாமல் ஓலையில் எழுதிவிட்டால் கொடைப் பொருள் புலவர் வீடு தேடி செல்லும். இந்த அரிய முறையை யாரும் கையாண்டதாக தெரியவில்லை. விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் மிகுந்த அக்கறை காட்டிய இவர்களின் கொடைத் திறனுக்கு மேலும் ஒரு சான்றாக இதனைக் கூறலாம்.
தமிழகத்திலேயே பெரிய சந்தையாக கருதப்படுவது பொள்ளாச்சி சந்தையாகும். இச்சந்தையின் சிறப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பவர்களில் ஒருவர் சமத்தூர் வாணவராயர் ஆவார். இச்சந்தை கூடும் இடத்தின் பாதி நிலப்பரப்பை சமத்தூர் ஜமீன் கொடையாக கொடுத்து உள்ளனர்.
பழனி முருகன் கோயிலில் தினமும் நடைபெறும் " பாதபீட " வழிபாட்டிற்குரிய இறைவனின் பாதபீடம் இவர்கள் செய்து அளித்த திருகொடையே. மலை மீது செல்லும் படிக்கட்டுகளில் ஒரு பகுதியும், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபமும், மூலவர் வழிபாட்டில் பயன்படும் சில பூஜை பாத்திரங்களும் இவர்கள் கொடையாகும். திருப்பதி, திருச்செந்தூர், திருமுருகன் பூண்டி, சிதம்பரம், அவிநாசி கோயில்களில் எல்லாம் சமத்தூர் அரண்மனை பூசை தொடர்பு உண்டு. இவர்களின் முன்னோர்கள் சேலம் ஆத்தூரில் பௌத்த மதத்திற்கும் அரும்பணியாற்றியுள்ளனர். இவ்வாறு இறைபணியிலும் இவர்களின் கொடையை கூறலாம்.
மழையின்மை, இயற்கை சீற்றம் போன்ற காரணங்களால் மக்களால் வரி செலுத்த முடியாத போது தங்கள் கைப் பணத்தை போட்டு அரசுக்கு வரி செலுத்தியதாக வரலாறு கூறுகிறது. அரண்மனை பத்தாயம் எனப்படும் தானியக் களஞ்சியத்தில் எப்போதும் தானியம் நிறைந்து இருக்கும். ஊரில் பற்றாக்குறை ஏற்பட்டால் தேவையான அளவு தானியத்தை அளந்து வழங்குவர் "சமத்தூருக்கு அன்னதானம் அழகு" என்ற பழமொழியே உண்டு. இவ்வாறு மக்களுக்கும் வாரி வழங்கும் வள்ளல்களாகவே இன்றளவிலும் வாழ்ந்து வருகின்றனர்.
கார்த்திகை தீபம் அன்று அரண்மனையில் விளக்கு ஏற்றிய பின்னரே ஊர் முழுவதும் விளக்கு ஏற்றப்படும். பொங்கல் அன்றும் அரண்மனைப் பானை பட்டி நோக்கி போன பின்னரே மக்கள் தங்கள் பொங்கல் பானையுடன் புறப்படுவர். இவை மக்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதையைக் காட்டுவதாகும்.
இன்றுவரை சமத்தூர் ஜமீன் பட்டம் பரம்பரையாக மரபுரிமைப்படி வருகிறது. இன்றும் அரண்மனை நன்கு பராமரிக்கக்கப்பட்டு வருகிறது . அரண்மனையில் வானவராயர்களின் சின்னமான வரையாடு உருவச்சின்னம், வாள்கள், பல்லாக்கு, குருவாள், கைகடகம், ஜமீன்தாரின் அழகிய மாட்டு வாகனங்கள் மற்றும் ஆங்கிலேய ஆட்சியில் அவர்கள் வழங்கிய ஜமீன் பட்டயம் முதலியன இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இன்றும் விருந்தோம்பல் இங்கு சிறப்புற்று இருக்கிறது. அக்காலத்தில் இருந்து கொங்கு மண்டல ஜமீன்களில் மக்கள் போற்றும் ஜமீனாக இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர்.[7][8]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ TTM VILLAGE FESTIVAL SAMATHUR ZAMIN POLLACHI, பார்க்கப்பட்ட நாள் 2022-10-24
- ↑ Prakash, Sakthi (2019-09-03). "Kongu history : சமத்தூர் ஜமீன்". Kongu history. பார்க்கப்பட்ட நாள் 2022-10-24.
- ↑ சமத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Samathur Town Panchayat Population Census 2011
- ↑ Prakash, Sakthi (2019-09-03). "Kongu history : சமத்தூர் ஜமீன்". Kongu history. பார்க்கப்பட்ட நாள் 2022-10-24.
- ↑ Kongu Mandala varalaaru.