சூலூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூலூர் வட்டம் , தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக சூலூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 41 வருவாய் கிராமங்கள் உள்ளன[2]. சூலூர் வட்டத்தில் சூலூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சூலூர் வட்டத்தில் 160,677 ஆண்கள் மற்றும் 159,729 பெண்கள் என 320,406 மக்கள் வாழ்கின்றனர். பாலின விகிதத்தில் ஒவ்வொரு 1000 ஆண்களுக்கு 994 பெண்களைக் கொண்டிருந்த இவ்வட்டத்தில் கல்வியறிவு 73.9 விழுக்காடாக இருந்தது. ஆறு வயதுக்குக் கீழ் 13,678 ஆண் மற்றும் 13,162 பெண் குழந்தைகள் இருந்தன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கோயம்புத்தூர் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்". 2021-10-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-01-01 அன்று பார்க்கப்பட்டது.
  2. சூலூர் வட்டத்தின் 41 வருவாய் கிராமங்கள்
  3. "Provisional Population Totals - Tamil Nadu-Census 2011" (PDF). Census Tamil Nadu. 17 ஜூன் 2013 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 4 July 2013 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூலூர்_வட்டம்&oldid=3555368" இருந்து மீள்விக்கப்பட்டது