கிணத்துக்கடவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிணத்துக்கடவு (Kinathukadavu) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டில் மேற்கு பகுதியான கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பேரூராட்சி ஆகும். மேலும் இது கிணத்துக்கடவு வட்டத்தின் தலைமையிடமும் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தின் தலைமையிடமும் ஆகும். கிணத்துக்கடவு தேசிய நெடுஞ்சாலை 209 இல் அமைந்துள்ளது. இது கோவை நகரின் மிக முக்கிய நகரான காந்திபுரத்திலிருந்து 23 கிலோமீட்டர் (14 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. மேலும் பொள்ளாச்சி நகரத்திலிருந்து 20.5 கிலோமீட்டர் (13 மைல்) தொலைவில் உள்ளது.

புவியியல்[தொகு]

கிணத்துக்கடவு 10.82 ° வடக்கிலும் 77.02 ° கிழக்கிலும் அமைந்துள்ளது.[1] இதன் சராசரி உயரம் 308 மீ (1,010 அடி)ஆகும்.

கல்வி[தொகு]

கிணத்துக்கடவில் நான்கு உயர்நிலைப் பள்ளிகள், இரண்டு தொடக்கப் பள்ளிகள் ,பல தனியார் பள்ளிகளும் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியும் உள்ளன. இதில் சில தனியார் பள்ளிகளான டெல்க் சீனியர் பெர்ஆண்டல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விவேக் வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கிட்சு பார்க் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் நோயல் பப்ளிக் பள்ளி போன்றவைகளாகும்.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

8.69 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 62 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2469 வீடுகளும், 8653 மக்கள்தொகையும் கொண்டது.[3] [4]

கல்லூரி[தொகு]

அக்சயா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

முக்கிய இடங்கள்[தொகு]

ஈச்சனேரி விநாயகர் கோயில்

காலநிலை[தொகு]

கிணத்துக்கடவு மேற்குத் தொடர்ச்சி மலையின் பால்காட் கணவாய்க்கு கிழக்கே சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அரபிக் கடலில் இருந்து வீசும் காற்று பால்காட் கணவாய் வழியாக வீசுவதன் விளைவாக ரம்மியமான தட்பவெப்பநிலை அமைந்துள்ளது.இக் காலநிலையால் தென்மேற்கு பருவமழையின் போது இங்கு அதிக மழை பெய்யும். மேலும் கோடை காலத்தில் மிதமான வெப்பநிலை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலையைக் கொண்டுள்ளது. கிணத்துக்கடவில் பயிரிடப்படும் முக்கியமான பயிர்களான தக்காளி, பச்சை மிளகாய்,வெண்டைக்காய், கத்திரிக்காய்,நிலக்கடலை மற்றும் பருத்தி போன்றவைகளாகும். இப் பகுதியின் மண் மற்றும் காலநிலை நிலைக்கு தென்னை மரங்கள் அதிகமாக வளர்கின்றன. கிணத்துக்கடவுக்கு அருகிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்மற்றும் பொருட்கள் சேகரிக்க தேவையான பகுதி பொல்லாச்சியின் பிரதான சாலையில் அமைந்துள்ளது.

போக்குவரத்து[தொகு]

கிணத்துக்கடவுக்கு உக்கடம் பேருந்து முனையத்திலிருந்து பொள்ளாச்சி வரையிலான அனைத்து பேருந்துகளும் இங்கே நிறுத்தப்படுகின்றன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை பேருந்துகளும் மற்றும் தனியார் பேருந்துகளும் பயணத்திற்கு உள்ளன. நகரப் பேருந்து எண் 33 ஏ கிணத்துகடவுவை காந்திபுரம் பேருந்து முனையத்துடன் இணைக்கிறது. பொள்ளாச்சி மற்றும் உக்கடம் பேருந்து முனையத்திலிருந்து ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் பேருந்துகள் கிடைக்கின்றன. இங்கு இரயில் நிலையம் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து இரயில் சேவை அமைக்கப்பட்டுள்ளது. கிணத்துகடவு சந்திக்கு கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி சந்திப்புகளுக்கு இடையில் நிறுத்தம் உள்ளது.

தொழில்கள்[தொகு]

மக்கள் பெரும்பாலும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் ஆடைத் தொழில் மற்றும் மோட்டார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். சிறு அளவிலான தொழில்கள் மேம்பாட்டுக் கழகமும் (சிட்கோ) கிணத்துக்கடவுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. பன்னாட்டு நிறுவனங்களும் மற்றும் இந்திய நிறுவனங்களும் கிணத்துக்கடவைச் சுற்றி நிறுவப்பட்டுள்ளன. கிணத்துக்கடவைச் சுற்றி கிட்டத்தட்ட 30 நிறுவனங்கள் உள்ளன. செர்மன் பன்னாட்டு நிறுவனமான எப்பிங்கர் கருவி ஆசியா பிரைவேட் லிமிட் கிணத்துக்கடவில் அமைந்துள்ளது. கிழக்கு கிணத்துக்கடவையில் காற்று வீசும் காலநிலையால் இங்கு அதிகான காற்று ஆலைகள் அமைக்கப் பட்டுள்ளது.

அரசியல்[தொகு]

கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி ஆகும். இந்த சட்டமன்றத் தொகுதி பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். கிணத்துக்கடவைக்கு தனி சட்டமன்ற உறுப்பினர் இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. இது தமிழ்நாட்டின் 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். கிணத்துகடவையின் மாநில சட்டமன்றத் தொகுதி எண் 122 ஆகும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Falling Rain Genomics, Inc - Kinathukadavu
  2. கிணத்துக்கடவு பேரூராட்சியின் இணையதளம்
  3. http://www.townpanchayat.in/kinathukadavu/population
  4. Kinathukadavu Town Panchayat Population Census 2011
  5. "List of Parliamentary and Assembly Constituencies" (PDF). Tamil Nadu. Election Commission of India. Archived from the original (PDF) on 31 October 2008. பார்க்கப்பட்ட நாள் 11 October 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிணத்துக்கடவு&oldid=3507027" இலிருந்து மீள்விக்கப்பட்டது