கோயம்புத்தூர் சூயஸ் குடிநீர் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோயம்புத்தூர் சூயஸ் குடிநீர் திட்டம், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளுக்கு நாள்தோறும், 24 மணி நேரமும் குடிநீர் சேவை வழங்கிட, ரூபாய் 3,167 கோடி மதிப்பில் பிரான்சு நாட்டின் சூயஸ் திட்ட நிறுவனத்துடன்[1], கோயம்புத்தூர் மாநகராட்சி 28 ஆண்டு காலத்திற்கு 8 சனவரி 2018 அன்று ஒப்பந்தம் இட்டுள்ளது.[2]. இத்திட்டத்திற்கு இந்திய அரசு 2021-ஆம் ஆண்டு வரை, அம்ருத் (Atal Mission for Rejuvenation and Urban Transformation) ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புறப் புனரமைப்புத் திட்டம் (JNNURM), சீர்மிகு நகரங்கள் திட்டங்கள் மூலம் ரூபாய் 1,776 கோடி நிதியுதவி அளித்துள்ளது.

சூயஸ் நிறுவனம் பில்லூர் மற்றும் சிறுவாணி அணைகளிலிருந்து தண்ணீர் எடுக்க, 2019 ஆம் ஆண்டிலிருந்து முதல் கட்டமாக, கோயம்புத்தூர் மாநகராட்சியின் 60 வார்டுகளில் சுமார் 200 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது.[3]

இத்திட்டத்தை தொடக்கத்திலிருந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்த்து வந்தது.[4]தற்போது திமுக தமிழ்நாடு மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சியில் ஆளும் கட்சியாக தேர்வு செய்யப்பட்டதால், இத்திட்டத்தை எதிர்த்து பேசுவது இல்லை.[5][6]

மேற்கோள்கள்[தொகு]