உக்கடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருச்சூரிலிருந்து கேரள மாநில அரசு பேருந்து கோவை உக்கடம் நோக்கி செல்கிறது
திருச்சூரிலிருந்து கேரள மாநில அரசு பேருந்து கோவை உக்கடம் நோக்கி செல்கிறது
உக்கடம்
நகர்ப்புற பகுதி
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
Languages
 • Officialதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
பின்கோடு641001,641008
Telephone code+91-422
வாகனப் பதிவுTN-66
Coastline0 கிலோமீட்டர்கள் (0 mi)

உக்கடம் இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியின் உள்ள ஒரு முக்கியப்பகுதி ஆகும். கோயம்புத்தூரில் உள்ள பத்து பேருந்து நிலையங்களில் உக்கடம் பேருந்து நிலையம் மிக முக்கியமான பகுதி ஆகும். உள்ளூர் பேருந்து மற்றும் பொள்ளாச்சி, பாலக்காடு, பழனி, உடுமலை, வாளையார், திருச்சூர் போன்ற முக்கியப் பகுதிகளுக்கும் பழனி வழியாக திண்டுக்கல், தேனி, மதுரை போன்ற செல்லும் புறநகர்ப் பேருந்துகளும் இங்கிருந்து புறப்படுகின்றன.பலா சந்தை மற்றும் பழைய புத்தக சந்தைகள் இங்கு மிகவும் பிரபலமானவை ஆகும். மேலும் உக்கடத்தின் மற்றுமொரு சிறப்பு உக்கடம் பெரிய குளம் ஆகும். இது ஆயிரக்கணக்கான பறவைகளின் வாழிடமாக உள்ளது.[1][2][3]

உக்கடம் பேருந்து நிலையம்[தொகு]

உக்கடம் பேருந்து நிலையமாக பிரபலமாக அறியப்படும் உக்கடம் , கோயம்புத்தூர் நகரத்தின் பேருந்து முனையங்களில் ஒன்றாகும். 1991 ஆம் ஆண்டு காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் நெரிசல் குறைக்க இது திறக்கப்பட்டது. பொள்ளாச்சி மற்றும் அருகிலுள்ள இடங்களுக்கும் செல்லும் நகர பேருந்துகள் மற்றும் பாலக்காடுக்கு செல்லும் புற நகர பேருந்துகளுக்கு இடமளிக்கும் வகையில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கோவை நகரின் அனேக பகுதிகளுக்கும் உள்ளூர்ப் பேருந்து சேவைகள் மூலமாக இணைக்கபட்டுள்ளது.

வணிக வளாகங்கள்[தொகு]

உக்கடத்தில் கோவை மாநகரின் முக்கிய கடைவீதி பகுதிகள் இங்கு தான் அமைந்துள்ளது. குறிப்பாக பெரிய கடை வீதி, ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, சேரன் புத்தகக் கடை டவுன்ஹால் ஆகியவை இந்தப் பகுதியில் தான் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள பெரிய வணிக நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் உள்ளது.

உக்கடம் மீன் சந்தை[தொகு]

உக்கடம் மீன் சந்தை என்பது தமிழகத்தின் சென்னை மீனம்பாக்கம் மீன் சந்தைக்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய தமிழ்நாட்டின் மீன் சந்தை ஆகும். இங்கு தோராயமாக இருநூற்று ஐம்பதுக்கும் மேல் மொத்த வியாபார மீன் கடைகள் (Hole Sale) கடைகள் உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி அருகாமை மாநிலமான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வளர்கப்படும் பிடிக்கப்பட்ட மீன்களும் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

முன்மொழியப்பட்ட கோயம்புத்தூர் மெட்ரோ ரயில்[தொகு]

கோயம்புத்தூர் மெட்ரோ ரயிலின் 1ம் வழித்தடம் அவினாசி சாலையில் உள்ள கோவையின் புறநகர்ப் பகுதியான கணியூர் பகுதியையும்,2ம் வழித்தடம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோவையின் புறநகர்ப் பகுதியான பிலிச்சி பகுதியையும் மாநகரின் மத்திய பகுதியான உக்கடத்துடன் இணைக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ளது.கோயம்புத்தூர் மெட்ரோ ரயிலின் 3ம் வழித்தடம் திருச்சி சாலையில் உள்ள கோவையின் புறநகர்ப் பகுதியான காரணம்பேட்டை பகுதியையும் தடாகம் சாலையில் உள்ள கோவையின் புறநகர்ப் பகுதியான தண்ணீர்பந்தல் பகுதியையும் உக்கடம் வழியாக இணைக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ளது.

உக்கடம் மேம்பாலம்[தொகு]

உக்கடத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உக்கடம் முதல் ஆத்துப்பாலம் மேம்பாலம் வரை கட்டப்பட்டு வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. The Frontline. 1997. http://hinduonnet.com/fline/fl1425/14251120.htm. 
  2. "CM lays foundation for Ukkadam flyover extension work". தி இந்து (Chennai, India). 2010-06-29. https://www.thehindu.com/news/cities/Coimbatore/cm-lays-foundation-for-ukkadam-flyover-extension-work/article33753773.ece. 
  3. "Coimbatore South headed for a tough tripolar fight between Kamal Haasan, BJP and Congress". India Today. பார்க்கப்பட்ட நாள் 23 April 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்கடம்&oldid=3912716" இலிருந்து மீள்விக்கப்பட்டது