சின்னவேடம்பட்டி
சின்னவேதம்பட்டி | |||
— பேரூராட்சி — | |||
அமைவிடம் | |||
நாடு | ![]() | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | கோயம்புத்தூர் | ||
வட்டம் | கோயம்புத்தூர் வடக்கு | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் ஜி. எஸ். சமீரான், இ. ஆ. ப [3] | ||
மக்கள் தொகை | 20,122 (2011[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
சின்னவேடம்பட்டி (ஆங்கிலம்:Chinnavedampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது கோவைக்கு வடகிழக்கே 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. [4]
சின்னவேடம்பட்டி பகுதியில் அதிக எண்ணிக்கையில் தவில் மற்றும் நாதஸ்வர இசைக்கலைஞர்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள வாத்தியக்காரர் வீதியில் சுமார் 500 இசைக்கலைஞர்கள் வசிக்கின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஆர்வமாக தவில் மற்றும் நாதஸ்வர இசை வாத்தியங்களை இசைக்க கற்று வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் சென்று இவர்கள் இசைக்கின்றனர்.[5]
அமைவிடம்[தொகு]
இது கோயம்புத்தூரிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு[தொகு]
15 வார்டுகள் கொண்ட சின்னவேடம்பட்டி பேரூராட்சி கோயம்புத்தூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
மக்கள் தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,571 வீடுகளும், 20,122 மக்கள்தொகையும் கொண்டது.[6]
தொழில்கள்[தொகு]
இவ்வூர் கோவையின் புறநகர்ப் பகுதியாக இருப்பதால் பல நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளன.
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Chinnavedampatti Town Panchayat
- ↑ தவில், நாதஸ்வரக் கலைஞர்கள் நிரம்பிய சின்னவேடம்பட்டி
- ↑ Chinnavedampatti Town Panchayat Population Census 2011