சூலூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூலூர்
—  பேரூராட்சி  —
சூலூர்
இருப்பிடம்: சூலூர்
,
அமைவிடம் 11°02′N 77°08′E / 11.03°N 77.13°E / 11.03; 77.13ஆள்கூற்று: 11°02′N 77°08′E / 11.03°N 77.13°E / 11.03; 77.13
நாடு  இந்தியா
மாவட்டம் கோயம்புத்தூர்
பேரூராட்சி மன்றத் தலைவர்
மக்களவைத் தொகுதி சூலூர்
மக்கள் தொகை 24,359 (2001)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்


340 metres (1,120 ft)

சூலூர் (ஆங்கிலம்:Sulur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

பழம்பெயர்[தொகு]

சூலூர், வடகரைச் சூலூர், தென்கரைச் சூலூர் என சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டு தெரிவிக்கிறது. மேலும், [1]
சூரலூர்
அரியபிராட்டி நல்லூர்
சுந்தர பாண்டிய நல்லூர்
சூரனூர்

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11°02′N 77°08′E / 11.03°N 77.13°E / 11.03; 77.13 ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 340 மீட்டர் (1115 அடி) உயரத்தில் இருக்கின்றது. நொய்யல் ஆறு இவ்வூரின் வழியாகச் செல்கிறது. இங்கு பெரிய குளம் ஒன்றும் உள்ளது. இவ்வூருக்கு அருகில் சூலூர் ரோடு இரயில் நிலையம் உள்ளது. மேலும் கோயமுத்தூர்-நாகப்பட்டினம் நெடுஞ்சாலை சூலூரின் வழியாகச் செல்கிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,359 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சூலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இவ்வூரின் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


ஆதாரங்கள்[தொகு]

  1. சூலூர் வரலாறு-பக்கம்-171-172-சூலூர் பாவேந்தர் பேரவை வெளியீடு- 1995
  2. "Sulur". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சூலூர்&oldid=2575927" இருந்து மீள்விக்கப்பட்டது