வி. பி. கந்தசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வி. பி. கந்தசாமி என்பவர் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2019 தமிழ்நாடு சட்டமன்ற இடைதேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 12,000 கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர் ஆவர்.இவர் காமநாயக்கன் பாளையம் இவரின் சொந்த ஊரும் வசிக்கும் இருப்பிடமாகும்.இவர் மட்டுமின்றி மறைந்த முன்னாள் எம்.எல்.ஏவுமான ஆர்.கனகராஜ் அவர்களின் சொந்த ஊரும் இருப்பிடமும் காமநாயக்கன் பாளையம் ஆகும். [1]

சூலூர் சட்டமன்ற இடை தேர்தல்[தொகு]

2016ம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு 36,000 வாக்கு வித்தியாசத்தில் சூலூர் தொகுதியில் ஆர். கனகராஜ் வெற்றி பெற்றார். இவர் மாரடைப்பு காரணமாக 2019 ம் ஆண்டு காலமானார். பின் இந்த தொகுதியில் 19.05.2019-ஆம் ஆண்டு சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பின் வாக்குகள் 23.05.2019 அன்று வெளியிடப்பட்டது.அதில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வி. பி. கந்தசாமி 12,000 கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 2019 தமிழக இடைத்தேர்தல் முடிவுகள்
  2. 2019 தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பி._கந்தசாமி&oldid=3116661" இருந்து மீள்விக்கப்பட்டது